Tamil Nadu Assured Pension Scheme - TAPS
January 03, 2026
Showing posts with label Government of Tamil Nadu information. Show all posts

Saturday, January 03, 2026
Wednesday, February 01, 2023
ssc exams
February 01, 2023
SSC MTS தேர்வு : அடுத்த 60 நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் - தமிழ்நாடு அரசு திட்டம்
SSC MTS தேர்வு : அடுத்த 60 நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் - தமிழ்நாடு அரசு திட்டம் SSC MTS Exam : 100+ Practice Videos for Next 60 Days - Tamil Nadu Govt
விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு நாளை அண்மையில் அறிவுத்துள்ளது. ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான நேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத் துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சித் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள தனது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தற்போது இந்தச் சீரிய முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அது தனது AIM TN என்ற யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்காக நடத்திய போட்டித் தேர்வுகளுக்கும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A மெயின்ஸ் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து அதன் யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்து வருகிறது. இம்முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்தவுள்ளது. தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவிட்டுப்பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டித் தேர்வில் போட்டி போட்டு, வெற்றி பெற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது ATM TN என்ற காணொலிப்பாதையில் (YouTube) பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்யவுள்ளது.
தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.
மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்

Wednesday, November 23, 2022
Government of Tamil Nadu information
November 23, 2022
கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க அரசின் அசத்தல் திட்டம்!
கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்!
NCS digisaksham portal: இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை (National Career Service Portal) தொடங்கியது. கிட்டத்தட்ட Naukri, Linkedin Job Search போன்ற இணைய சேவைகளுக்கு நிகரான வாய்ப்பை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.
வேலை தேடக்கூடியவர்களை, பொருத்தமான வேலையளிக்கும் நிறுவனங்களோடு இணைப்பதுடன், தொழில் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிலவரப்படி, இந்த இணையதளத்தில் 4,82,264 காலி இடங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்: கிராமப்புற இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை வழங்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இணைந்து DIgisaksham எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்த திறன் படிப்பில் எந்தவித கட்டணமின்றி சேர்ந்து கொள்ளலாம். Excel, Python, Azure, Java, Security Fundamentals ஆகிய பாடநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
சுயமாக கற்கும் முறை, ஆன்லைனில் பயிற்ச்சியாளர்கள் மூலம் கற்கும், நேரடி பயிற்சி வகுப்புகள் ( Digital Skills - Self paced learning, VILT mode training (Virtual Instructor led) and ILT mode training (Instructor led) என மூன்று வழிமுறைகளின் கீழ் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் (Model Career Centres) மற்றும் எஸ்சி/எஸ்டி தொழில்நெறி வழிகாட்டு மையங்களை தொடர்பு கொண்ட பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம். இணைய வழியாக பயிற்சியை மேற்கொள்ள https://www.ncs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு - மாதிரி தொழிற்நெறி வழிகாட்டு மையம்
எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் (National Career Service Centre For SC/ST) சென்னை சாந்தோமில் இயங்கி வருகிறது.
எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் NCS போர்டல் மூலமாகவோ, நேரடியாகவோ மைக்ரோசாப்ட் வழங்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் , உங்கள் கணினித் திறன்கள் அதிகரிப்பதுடன் சந்தையில் மிகச் சரியான வேலையை தேர்ந்தெடுக்க உதவும்.

Wednesday, April 20, 2022
NEP
April 20, 2022
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மாநில கல்வி கொள்கை
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தரசன் தாக்கல் செய்துள்ள மனுவில், 1976ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்பதால் 1963ம் ஆண்டின் அலுவல் மொழி சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக அரசு தகவல்
இதுதொடர்பாக தமிழக அரசு தனது சொந்த விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் குழுக்களை அமைத்து அறிக்கைகளை பெறுவதாக மனுதாரர் கூறுவது கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கையின் வாயிலாக இந்தியை திணிக்க முயற்சிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அவரவர் தாய்மொழியை காக்கவும், தாய்மொழியில் கற்கவும் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் உள்ளது. தாய்மொழியை காப்பது கடமையும் கூட. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
திருமாவளவன் தனது மனுவில், ‘‘இந்தி மொழியின் ஆதிக்கத்தால் மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா போன்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இது இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக உள்ளது. இந்தி இல்லாமல்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியை கட்டாயப்படுத்துவது என்பது இந்தி தெரியாத இளம் தலைமுறையினரிடம் கூடுதல் சுமையை திணித்து விடும். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.