Breaking

Showing posts with label சான்றிதழ். Show all posts
Showing posts with label சான்றிதழ். Show all posts

Saturday, August 06, 2022

August 06, 2022

பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்களை, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குழுவினரிடம் பெற்றோர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 2,348, சி.பி.எஸ்.இ., பள்ளியில் 400 மாணவ, மாணவியர் என மொத்தம் 2,748 பேர் படிக்கின்றனர்.இங்கு விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி அதிகாலை தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து 17ம் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், வாகனங்கள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.எரிந்த சான்றிதழுக்கு மாற்று சான்றிதழ் வழங்க கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜூ மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் நகலைப் பெற துவங்கப்பட்டுள்ள முகாமில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சான்றிதழ் நகல்களை வழங்கி வருகின்றனர்

.மெட்ரிக் பள்ளியில் பயிலும் 1,700, சி.பி.எஸ்.இ., பயிலும் 300 மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்கள் மற்றும் விபரங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அனைத்து மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல், தகவல் பெறப்பட்டதும் கலெக்டர் மூலம் சம்மந்தப்பட்ட துறைக்கு தேவைப்படும் சான்றிதழ்களின் விபரங்கள் அனுப்பி, உடனடியாக புதிய சான்றிதழ் பெறப்பட்டு பெற்றோர்களிடம் வழங்கப்பட உள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ளசுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில்நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (ஜூலை 29) காலஅவகாசம் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை இன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.58லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

Tuesday, July 19, 2022

July 19, 2022

தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை- அன்பில் மகேஷ்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையும் படிக்க | Teachers தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்ட நிலையில் தீக்கிரையான சான்றிதழ்களை திரும்ப வழங்க வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.பள்ளியில் சான்றிதழ்கள் எரிந்துள்ளன . அருகில் உள்ள தனியார் பள்ளிகள்சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி எளிதில் வழங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, July 05, 2022

July 05, 2022

பல்வேறு சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும்..? பட்டியல் இதோ...

பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காக மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்காகவும் வாரிசுச்சான்று, இருப்பிடம், பட்டா மாறுதல் உட்பட பல்வேறு சான்றிதழ்களை கேட்டு, அரசு இ சேவை மையங்களில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அந்த சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரியாமல் அலைய வேண்டியுள்ளது. வீட்டுக்கும், இ சேவை மையத்துக்கும் அலைவதால் வீண் அலைச்சலும், காலதாமதமும் உண்டாகிறது. எனவே, வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் சான்றிதழ்களை பெற தேவையான ஆவணங்களின் பட்டியல் இதோ...

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
பிறப்புச் சான்றிதழ்
மாற்றுச்சான்றிதழ் (TC)
மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 2)
ஜாதி, வருமானச் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
தாத்தா, பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கல்வித்தகுதி சான்றிதழ்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
மாற்றுச்சான்றிதழ் (TC)
பெற்றோரின் ஜாதி சான்றிதழ் அல்லது மாற்றுத் சான்றிதழ் (யாராவது ஒருவருடையது மட்டும்)
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
வருமானச் சான்று (payslip)
வருமான வரி செலுத்திய ரசீது
பான்கார்டு
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ (2)
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
பிறப்புச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் (TC)
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

OBC சான்று பெற தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
ஜாதிச் சான்றிதழ்
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

முதியோர் உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

முழுப்புலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

கிரையப்பத்திரம்
மூலப்பத்திரம்
கம்ப்யூட்டர் சிட்டா
இ.சி.,

உட்பிரிவு பட்டா மாறுதல் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

கிரையப்பத்திரம்
மூலப்பத்திரம்
கம்ப்யூட்டர் சிட்டா
இ.சி.,
மனை வரைப்படம்


வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள்

விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு (இறந்தவரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்)
ஆதார் கார்டு (வாரிசுதாரர்கள் அனைவரின் ஆதார் கார்டு)
இறப்புச் சான்றிதழ்

இறந்தவரின் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.

இ சேவை மையத்துக்கு செல்லும் போது மறக்காமல் செல்போன் எடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய செல்போன் நம்பருக்கு வரும் otp எண்ணை உடனடியாக தெரிவித்தால் மட்டுமே தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ்கள் அனைத்தும் 15 நாட்களில் வழங்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டா மாறுதல் முழுபுலத்துக்கு 15 நாட்களும், உட்பிரிவு இனத்துக்கு ஒரு மாதம், முதியோர் உதவித்தொகைக்கு ஒரு மாதம் என பெறுவதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் தயாரானதும் உங்களின் மொபைல் எண்ணுக்கு 'மெசேஜ்' அனுப்பப்படும். அந்தந்த மையத்துக்குச் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். முன்னதாக சான்றிதழ்களின் தேவைக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சரிபார்ப்புக்காக ஒரிஜினல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும்.

Total Pageviews

Search This Blog