Breaking

Showing posts with label Police Exam. Show all posts
Showing posts with label Police Exam. Show all posts

Thursday, March 23, 2023

March 23, 2023

2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

1819 ஆண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், 780 பெண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் என மொத்தம் 2599 காலிப்பணியிடங்கள் - தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள்: 20.03.2023

Police Recruitment of Grade II Police Constables Estimate of vacancy for the year 2023 - Approved and sent for commencement of recruitment process - Reg.

Friday, February 03, 2023

February 03, 2023

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23 Police - Director of Police Circular Memorandum - Dt: 03.02.23 regarding paying last respects to Police personnel who lost their lives

காவல்துறை இயக்குநர் அலுவலகம்,

சுற்றறிக்கை குறிப்பாணை

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை- அளிப்பது தொடர்பாக

பொருள்:

அனைத்து மாநகரமாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது

இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் காவல் படைத் தலைவர் சார்பாக யம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

மேலும், இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு, ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஒய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். 3) இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

Monday, December 26, 2022

December 26, 2022

காவலா் எழுத்துத் தோ்வு: 1.98 லட்சம் போ் தோ்ச்சி

TNUSRB PC Results 2022 - இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு - PDF

இரண்டாம் நிலை காவலா் தோ்வில் 1.98 லட்சம் போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு கடந்த நவ.27-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 295 தோ்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 போ் தோ்வு எழுதினா். 66 ஆயிரத்து 908 போ் தோ்வு எழுதவில்லை.

இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் விவரம், தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமைளியிடப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

இது தொடா்பாக தோ்வு வாரிய உயரதிகாரி கூறியதாவது:

தோ்வு எழுதியவா்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 226 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிப்ரவரியில் நடைபெறவுள்ள உடல் தகுதித் தோ்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 போ் என்ற விகித அடிப்படையில் கட்- ஆஃப் நிா்ணயிக்கப்பட்டு, மொத்தம் 18 ஆயிரத்து 671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

இதில் 15,158 இளைஞா்கள், 3,513 இளம் பெண்கள். உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அடுத்தக் கட்டத் தோ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Sunday, November 27, 2022

November 27, 2022

TNUSRB - Police Exam - Original Question Paper And Answer Key ( 27.11.2022 )

TNUSRB - Police Exam - Original Question Paper And Answer Key ( 27.11.2022 )

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு - Answer Key 27.11.2022



TNUSRB Police Constable Exam 2022 Answer Key & Original Question Paper. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்...


TNUSRB Police Constable Exam 2022 Answer Key & Original Question Paper:

click here

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -General Knowledge Tentative Answer Key 27.11.2022:

click here

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -Tamil Tentative Answer Key 27.11.2022:

click here

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்வு -PSYCHOLOGY Tentative Answer Key 27.11.2022:

click here

TNUSRBPC-2022 ANSWER_KEY_Er.TMSC:

click here


November 27, 2022

இன்று காவலா் தோ்வு: 3,552 பணியிடங்களுக்கு 3.66 லட்சம் போ் போட்டி

இன்று காவலா் தோ்வு: 3,552 பணியிடங்களுக்கு 3.66 லட்சம் போ் போட்டி

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 3,552 காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறவுள்ளது. இத் தோ்வை 3.66 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா் 3,271 பணியிடங்களுக்கு (ஆயுதப்படை-2,180, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை-1091),இரண்டாம் நிலை சிறைக் காவலா்-161,தீயணைப்பாளா் -120 என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் ஜூன் 30-இல் வெளியிட்டது.

தோ்வு எழுத இளைஞா்கள், ஜூலை 7 முதல் ஆக.15 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனா்.

காவலா் தோ்வில் முதல் கட்டமாக, எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெறுகிறது.

இத் தோ்வை 2 லட்சத்து 99 ஆயிரத்து 887 இளைஞா்கள், 66 ஆயிரத்து 811 இளம் பெண்கள்,59 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 போ் எழுதுகின்றனா்.

முன்னதாக, தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த 15-ஆம் தேதி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தோ்வு ஏற்பாடுகள் சீருடைப்பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, தோ்வு நடைபெறும் மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளிலும், மாநகர காவல்துறை எல்லைப் பகுதிகளிலும் அந்தந்த காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள் தலைமையில் தோ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Monday, August 15, 2022

August 15, 2022

தமிழக போலீஸ் தேர்வு: காலியிடம் குறைவு; கட் ஆப் அதிகரிக்கும்

தமிழக காவல்துறை வேலையில் 3552 பணியிடங்கள்; கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? தேர்வுக்கு தயாராவது எப்படி?

TNUSRB Police exam Cut off Syllabus and Preparation tips: தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் பணியிடங்களுக்கான கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகரிக்கும் என தெரிகிறது. அது ஏன்? என்பதையும், இந்த தேர்வுக்கான தேர்வு முறை, சிலபஸ் உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.

இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு

இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு

இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு

முதன்மை எழுத்துத் தேர்வு

இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.

பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.

உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம் – சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகளாகும்.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறை 70 கேள்விகள் கேட்கப்பட உள்ள நிலையில், அவை எளிமையாக கேட்கப்படலாம். ஏனெனில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்தன. இருப்பினும், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பில்லை. ஏனெனில் காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் போட்டி கடுமையானதாக இருக்கும். உடற்தகுதி தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும், அதிகமானோர் தேர்வுக்கு போட்டியிடலாம்.

இந்த 70 கேள்விகளில் 27 கேள்விகள் வரலாறு, குடிமையியல், அரசியலமைப்பு, புவியியல் அடங்கிய சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும், 20 கேள்விகள் உளவியல் பாடத்திலிருந்தும், 10 கேள்விகள் அறிவியல் பாடத்திலிருந்தும், 8 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்தும், 5 கேள்விகள் தமிழில் இருந்தும் இடம்பெறலாம். அதற்கேற்றாற்போல் தேர்வர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

கட் ஆஃப் எப்படி இருக்கும்?

இந்த போலீஸ் தேர்வுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள், கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். முதலாவது, இந்த ஆண்டு போலீஸ் தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை குறைவு. இது போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்ததாக, இந்த ஆண்டு முதன்மை தேர்வுக்கான மதிப்பெண்கள் 80லிருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உடற்தகுதி தேர்வுக்கான மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போலீஸ் தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயார் ஆகி வருகின்றனர். மேலும், குரூப் 4 தேர்வுக்கு தயாரானவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆனவர்கள் தற்போது போலீஸ் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, போலீஸ் வேலை வேண்டும் என நினைப்பவர்கள் இதற்காக தீவிர பயிற்சி எடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு காக்கிச்சட்டை போட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Wednesday, February 02, 2022

February 02, 2022

'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'

'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் பட்டுமே காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இதனால் தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு. பொது அறிவு 50 வினாக்களும், உளவியல் கேள்விகள் 30 கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களுக்குத் தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த் தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog