Central Government Selection
March 24, 2026
Showing posts with label Central Government Jobs. Show all posts

Tuesday, March 24, 2026
Thursday, December 25, 2025
Tuesday, February 20, 2024
Tuesday, February 21, 2023
jobs
February 21, 2023
ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023
ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலை!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுயானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer-I
காலியிடங்கள்: 9
வயதுவரம்பு: 1.2.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டும மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி(பொறியியல்) முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023
Friday, February 03, 2023
UPSC
February 03, 2023
ரயில்வேக்கு சிவில் சர்வீஸ் மூலமாக ஆட்கள் சேர்ப்பு

இந்த ஆண்டு முதல் மத்திய பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக இந்திய ரயில்வே மேலாண்மை பணிகளுக்கான அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமாக இந்திய ரயில்வே நிர்வாக பணிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய ரயில்வே மேலாண்மை பணிகளுக்கான தேர்வானது கைவிடப்படுகின்றது. 2023ம் ஆண்டு யுபிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் பிரத்யேக ஐஆர்எம்எஸ் தேர்வின் மூலம் ஆட்கள் சேர்க்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்த உத்தரவிற்கு இது முரணான அறிவிப்பாகும்

Wednesday, October 26, 2022
private job camp
October 26, 2022
28.10.2022 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Press Release No : 1868 ] From the Director of Employment and Training - On Private Job Fair on 28th October 2022
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர். வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள . ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Friday, September 02, 2022
Ramadass
September 02, 2022
அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

அரசு பணியிடம் குழு அமைப்பு
காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது.
தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். தமிழ்நாடு அரசு நிதித்துறை இதுதொடர்பாக பிறப்பித்துள்ள 18.08.2022 தேதியிட்ட அரசாணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தொடரும் தற்காலிக பணியிடங்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசின் சார்பில் அமைக்கப்படும் 3 உறுப்பினர்கள் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பணியிடங்களை தொடருவதா... ரத்து செய்வதா? என்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றும் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் நிதித்துறை முன்வைத்துள்ள காரணிகளே தவறானவை. ஒரு பணியை ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பாமலேயே, அந்த பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அத்தகைய பணியிடங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் நிதித்துறையின் பார்வை ஆகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்கள், அக்காலத்திற்கு பிறகு தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அரசின் பார்வையும் முழுக்க முழுக்க தவறானது ஆகும்.
தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தாமாகவே நிறைவேறுவதாக அரசு நினைப்பது முற்றிலுமாக மாயை தான். அந்த பணியிடங்களுக்கான பணிகளை பிற ஊழியர்கள் தான் பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் அரசுத் துறை அலுவலகங்களில் பணிகளின் வேகம் பாதிக்கப்படுகிறது. பல துறைகளில் மக்களுக்கு 10 நாட்களில் வழங்கப்பட வேண்டிய சேவைகள் 15 நாட்களுக்கு மேலாகியும் கிடைப்பதில்லை. இந்த உண்மைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அரசு அலுவலகங்களில் பணிகள் தடைபடாமல் நடக்கின்றன என்று கூறி, அப்பணியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அநீதி ஆகும்.
அதேபோல், தற்காலிக பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிப்பதற்கு காரணமும் அரசின் செயல்பாடின்மை தான். அரசு பணியிடங்கள் காலியாகும் போது, அதனால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் தடைபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை எவ்வளவு காலத்திற்கு உருவாக்கப்படுகின்றனவோ, அந்த காலத்திற்குள் நிரந்தரப் பணியிடம் நிரப்பப்பட்டு விட்டால், தற்காலிகப் பணியிடம் தானாகவே காலாவதியாகி விடும். ஆனால், காலியாகும் நிரந்தர பணியிடங்களை தமிழக அரசு நிரப்புவதே இல்லை என்பதால் தான், காலியிடங்கள் பத்தாண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன. நிரந்தர பணியிடங்களை நிரப்பாவிட்டால், தற்காலிகப் பணியிடங்கள் 25 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கத் தான் செய்யும். இதை உணராமல், பத்தாண்டுகளுக்கு மேலும் தற்காலிகப் பணியிடங்கள் தொடருவது ஏன்? என்று ஆராய்வதில் பயனில்லை.
தமிழக அரசு துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அதற்கு காரணம், காலியிடங்களை அரசு நிரப்பாதது தான். காலியிடங்களை நிரப்பாமல் வைத்து விட்டு, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அப்பட்டமான ஆட்குறைப்பு நடவடிக்கை தான். இதன் முடிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை; அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலியிடங்களை விட, புதிதாக உருவாக்கப் பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இத்தகைய சூழலில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Friday, February 04, 2022
JOB
February 04, 2022
மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் கடந்த 2020 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பது:
கடந்த 2019 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசில் 9,10,153 காலிப்பணியிடங்களும், 2018 மாா்ச் 1 நிலவரப்படி, 6,83,823 காலிப்பணியிடங்களும் இருந்தன. பின்னா், 2020 மாா்ச் 1 நிலவரப்படி, மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8,72,243 ஆக அதிகரித்துள்ளது.
பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் ஆகியன கடந்த 2018-19, 2020-21 காலகட்டத்தில் 2,65,468 பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா். இதேபோல, மற்றொரு கேள்விக்கு மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘யுபிஎஸ்சி பிரிவில் தற்போது 485 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பிரிவுகளில் முறையே 45, 240, 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அல்லது தகுந்த நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சீரான இடைவெளியில் அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயா் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சா்வீசஸ் தோ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.