Breaking

Showing posts with label Surplus Professors. Show all posts
Showing posts with label Surplus Professors. Show all posts

Monday, January 22, 2024

January 22, 2024

தமிழக அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வெளியான அறிவிப்பு!

தமிழக அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வெளியான அறிவிப்பு! Surplus teaching posts in Tamil Nadu government schools - Notification released!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உபரி ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநகரத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆண்டுதோறும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2023-24 கல்வியாண்டில் கடந்த 1.8.2023ஆம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஆசிரியர் இல்லாமல் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணியிடங்கள் வரும் காலத்தில் காலிப்பணியிடமாக கருதப்படமாட்டாது

Monday, March 28, 2022

March 28, 2022

உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் - உயர்கல்வித்துறையின் உத்தரவு

உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு: உயர்கல்வித்துறை உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக அளவிலான துணை பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து உபரியாக இருந்த 370 துணை பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக நிதிநிலை சரியில்லாததால், மாற்றப்பட்ட 370 உபரி துணை பேராசிரியர்களை, தற்போது மீண்டும் திரும்பப்பெற முடியாது என்று உயர்கல்வித்துறைக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் பிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வி துறை ஆணையிட்டுள்ளது.அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஏற்கனவே 4 ஆண்டுகால டெபுடேஷனில் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட 370 துணை பேராசிரியர்களும், தற்போது பணியாற்றி வரும் பிற கல்லூரிகளிலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் பணியாற்றிட வேண்டும்.இதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog