Breaking

Showing posts with label Government Orders. Show all posts
Showing posts with label Government Orders. Show all posts

Wednesday, September 02, 2026

Friday, August 28, 2026

Tuesday, August 04, 2026

Thursday, July 02, 2026

Thursday, June 25, 2026

Saturday, June 06, 2026

Friday, February 27, 2026

Thursday, January 29, 2026

Thursday, October 09, 2025

Wednesday, March 12, 2025

Sunday, February 18, 2024

February 18, 2024

SC, ST குறைவும் பணியிடங்களை கணக்கிட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு



SC, ST குறைவும் பணியிடங்களை கணக்கிட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு Tamil Nadu government orders to set up a committee to calculate SC and ST vacancies

அரசுத் துறைகளில் ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு:

அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சோ்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடா்பான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதன்படி, அரசுத் துறைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கை உறுதி செய்வதற்காக அரசுத் துறை உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவராக, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா செயல்படுவாா். சட்டத் துறை இணைச் செயலா் ப.அன்புச் சோழன், மனிதவள மேலாண்மைத் துறை இணைச் செயலா் பி.ஆா்.கண்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். இந்தக் குழு குறைவுப் பணியிடங்களை துறைகள் வாரியாக ஆய்வு செய்து, பிப்.28-ஆம் தேதிக்குள் தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்கும்.

இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் பிப்.19 முதல் 27-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் மாலையில் நடைபெறும். நாளொன்றுக்கு 5 அரசுத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் அல்லது துறைத் தலைவா்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்துக்கான பொருள், கூட்டம் நடைபெறும் தேதி ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!!

பொதுப்பணிகள் - நேரடி நியமனங்கள் - தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு . தேர்வு முகமையால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O.Ms.No.208.pdf - Download here

Wednesday, September 28, 2022

September 28, 2022

4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts

ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - Tamil Nadu government orders to fill 4,000 posts

ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விற்பனையாளர் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கட்டுநர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, ரேசன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான 4000 இடங்கள் நிரப்ப பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இத்தேர்வு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணி இடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (பிளஸ்-2) பெற்றிருக்க வேண்டும். அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
September 28, 2022

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதி நேர ஆசிரியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, September 23, 2022

September 23, 2022

மின் வாரிய ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு

படிகள் - அகவிலைப்படி - 01-07-2022 முதற்கொண்டு உயர்த்தப்பட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியிடப்படுகிறது - Steps - Subsidy - Rate of Subsidy to be increased with effect from 01-07-2022 - Issue of Order

Friday, September 16, 2022

September 16, 2022

New G.O. 151 Dated 09.09.2022 நடைமுறைக்கு வந்தது!

New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது:
 
New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது:

G.O. No 101 & 108 ரத்து செய்யப்பட்டு, புதிதாக வெளிவந்த G.O. No. 151 ன் படி

 ✅ Elementary - DEO &

 ✅ Secondary DEO & 

✅ Private School DEO

... ஆகிய பதவிகளில் *நாளையே நியமனம்* நடைபெற உள்ளது.

   அதாவது தற்போது உள்ள 120 DEO களில் Counciling மூலம் மேற்கண்ட DEO பதவி நியமனம் கலந்தாய்வு மூலம் இன்று நடைபெற உள்ளது. 
   
  இது போக -
மீதம் உள்ள 28 DEO மட்டும் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள்.
   ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 

💥 Elementary DEO யார்?

💥Private School DEO யார்?

💥Secondary ( ie Regular) DEO யார்?

   என்பது இன்றே தெரிந்து விடும்.

  ஆனால் இந்த G.O. படி Self Finance Nursery & Primary பள்ளிகள் எந்த DEO ன் கீழ் அதாவது Elementary DEO ன் கீழ் வரப்போகிறதா? அல்லது Private School - DEO ன் வரப்போகிறதா? என தெரியவில்லை - இன்று தெரிந்துவிடும்.

ஆனால், இதுவரை G.O. MS. No. 151 ஐ பார்க்க முடியவில்லை. 09.09.02022 அன்றே வெளியாகியதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை அந்த G.O. யார் கண்ணிலும் படவில்லை. நாளைக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Tuesday, August 23, 2022

August 23, 2022

பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - இணைப்பு: அரசாணை

பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - இணைப்பு: அரசாணை

CLICK HERE TO DOWNLOAD

Sunday, August 21, 2022

August 21, 2022

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் மற்றும் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகக் கூறி, பள்ளியை 3 நாள்களில் மூடவும், மாணவா்களை அருகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிறுவனா் குப்புசாமி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிறுவனா் தரப்பில் , ‘சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலும் இயங்கி வருகின்றன. 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Thursday, August 18, 2022

Friday, August 05, 2022

August 05, 2022

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு



அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog