Breaking

Showing posts with label PRESIDENT. Show all posts
Showing posts with label PRESIDENT. Show all posts

Friday, October 27, 2023

October 27, 2023

நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் - ஜனாதிபதியிடம் நேரில் முதல்வர் மனு - செய்தி வெளியீடு - நாள் : 27.10.2023



நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் - குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஓராண்டுக்கு மேலாக நிலுவையிலுள்ள 'நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்' - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை .

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின் தங்கிய மாணவர்கள் நலனுக்கு எதிரானது.

முன்பு +2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கையால் மாநிலத்தில் நல்ல பலன் கிடைத்தது - முதலமைச்சர் ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.

செய்தி வெளியீடு எண் : 2143

நாள் : 27.10.2023

செய்தி வெளியீடு

“தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்”.

சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் செல்லும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இன்று (27-10-2023) சந்தித்தார். அப்போது, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பாக மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, இன்று (27-10-2023) தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார். அக்கடிதத்தில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும், இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஒன்றிய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021 (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஒன்றிய உயர்கல்வித் துறை, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதிவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவலைபடத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, September 06, 2022

September 06, 2022

ஆசிரியா்கள் மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும் - பிரதமா் மோடி

கல்விச் சூழல்: சரியான திசையில் இந்தியா: பிரதமா் மோடி

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்விக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கிய ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழங்கினாா். விருது பெற்ற ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஓா் ஆசிரியருக்கு நோ்மறை எண்ணங்களின் பலம் உள்ளது. அவா் சவால்களை எதிா்கொள்ள மாணவா்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறாா். ஓா் உண்மையான ஆசிரியா் கனவு காணவும், சாதிக்க முடியாததை சாதிக்கவும் மாணவா்களுக்கு ஆா்வமூட்டுகிறாா்.

ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை உலகமே பாராட்டுகிறது. அந்தக் கொள்கையை வகுப்பதில் ஆசிரியா்கள் மிக முக்கிய பங்கு வகுத்துள்ளனா்.

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதனை அனைவராலும் காண முடிகிறது.

சுதந்திரம் தினத்தின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா எவ்வாறு இருக்கும் என்று தீா்மானிக்கவுள்ள இளைஞா்களை நல்ல முறையில் தயாா்ப்படுத்த வேண்டியது ஆசிரியா்களின் கைகளில்தான் உள்ளது.

பிரிட்டனை கடந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. 250 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சிபுரிந்தவா்களைக் கடந்து முன்னேறியுள்ளதால் இது சிறப்பு மிக்கது என்றாா் அவா்.

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிகளுக்கான புதிய அறிவிப்புகள் - பிரதமர் மோடி

எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

"ஆசிரியர் தினமான இன்று, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்

இதன் மூலம் இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில்நுட்பம். நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்

அண்மை ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித் துறையை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, September 04, 2022

September 04, 2022

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்கில் தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.

Tuesday, August 16, 2022

August 16, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ வழங்கிய பஞ்சாயத்து தலைவர்

Many people praised the panchayat president who provided the auto for the convenience of transportation for the students studying in the government school near Peravoorani.

Prem Selvan, 43, a resident of Nadiam village, near Beravoorani, Thanjavur district. He worked in London and won the local body elections and became the panchayat president. In this situation, more than a hundred students from the surrounding villages go to Nadiam Government High School on bicycles and on foot. For their convenience, Rs. 1 lakh Prem Selvan presented the auto to the school headmistress Jayalakshmi.

Prem Selvan said: In the 10th class, I am giving 5,000 rupees to the first-placed students and 4,000 rupees to the second-placed students. I am providing monthly assistance of Rs 1,000 to students who have lost their parents. Also, pulp is being given to students who come to school in the morning. He said that I have provided an auto for the transportation of the students.



பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் போக்கு வரத்து வசதிக்காக, ஆட்டோ வழங்கிய பஞ்சாயத்து தலைவரை, பலரும் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் செல்வன், 43. லண்டனில் வேலை பார்த்த இவர், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பஞ்சாயத்து தலைவரானார்.இந்நிலையில், நாடியம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர்.அவர்களின் வசதிக்காக, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆட்டோவை, பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியிடம் பிரேம் செல்வன் வழங்கினார்.

பிரேம் செல்வன் கூறியதாவது:

பள்ளியில் 10ம் வகுப்பில், முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 5,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 4,000 ரூபாய் வழங்கி வருகிறேன். பெற்றோரை இழந்த மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறேன். மேலும், காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, கூழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, January 30, 2022

January 30, 2022

பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த உடுமலை ஏழை பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு

''திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஏழை பெண் இளநீர் வியாபாரி, தனது குழந்தைகள் படிக்கும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு, தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் தேவை'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: ஜன.,30 தேதியானது மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மஹாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு மூலையிலும் உற்சாகம் எழுந்ததை நாம் மறக்க முடியாது.

அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். முன்னார் ராணுவ வீரர்கள் சிலர், அமர்ஜவான் ஜோதி, குறித்து கடிதம் எழுதி உள்ளனர். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று பாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் மன் கி பாத் நிகழ்ச்சியை அஞ்சல் அட்டை மூலம் எனக்கு அனுப்பியுள்ளனர். இந்த அஞ்சல் அட்டைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கூட வந்துள்ளன. இந்த அஞ்சல் அட்டைகள் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நமது எதிர்கால தலைமுறையின் பரந்த மற்றும் விரிவான கண்ணோட்டத்தை எடுத்து காட்டுகிறது. இந்தாண்டு பத்ம விருதுக்கு, அதிகம் வெளியே தெரியாதவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். உடுமலை பெண்

கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தனது மகள் மற்றும் மகனுக்கு கல்வி கிடைக்க செய்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் தாயம்மாள் தவறவிடவில்லை. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது, பள்ளி மற்றும் வகுப்பறையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்பையும் கவனிக்க வேண்டும் என்றனர். அந்த கூட்டத்தில் தாயம்மாளும் கலந்து கொண்டார். அனைத்தையும் கேட்டார். ஆனால், பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணம் குறித்த பிரச்னை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. இதன் பிறகு, தாயம்மாள் செய்த செயலை யாரும் நினைத்து பார்த்திருக்க கூட மாட்டார்கள்.

இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்ய வேண்டும் என்ற மனதும் தேவை. தற்போது பள்ளியில் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுவதாக கூறும் தாயம்மாள், பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டால் 12ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளார். நமது நாட்டில் கல்வி குறித்து பேசிய அதே உணர்வு தான் இதுவும்.

கொரோனாவின் புதிய அலையை எதிர்த்து இந்தியா தைரியமாக போராடி வருகிறது. 4.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது பெருமையளிக்கும் விஷயம். பூஸ்டர் தடுப்பூசிகளும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நமது தடுப்பூசி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே, நமது பலத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது, கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஒரு நேர்மறையான செய்தி. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Monday, January 03, 2022

January 03, 2022

கல்வி கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மீரட்டில் மேஜர் தயான்சந்த் பெயரில் அமையும் விளையாட்டு பல்கலைக்கு, பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். சட்டவிரோதம்இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நாட்டின் உயரிய விளையாட்டு விருதுக்கு முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீரட்டில் அமையும் விளையாட்டு பல்கலை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

700 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த பல்கலை, இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளை அளிக்கும்.ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு பட்டம் பெறுவர். முந்தைய ஆட்சியில் உ.பி.,யில் கிரிமினல்கள், மாபியாக்கள் சட்டவிரோத நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன், மீரட்டில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்ததை பெண்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் யோகி அரசு பதவியேற்ற பின், கிரிமினல்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது மீரட்டைச் சேர்ந்த பெண்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் இதற்கு முன் இருந்த அரசுகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விளையாட்டு வீரர்கள் தேர்வு உட்பட அனைத்திலும் முறைகேடுகள் நடந்தன.முக்கியத்துவம்ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் முறைகேடுகள் ஒழிக்கப்பட்டன. அதனால் தான், முன் எப்போதும் இல்லாத அளவில் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது.விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இணையாக மாணவர்களுக்கு விளையாட்டும் கற்றுக் கொடுக்கப்படும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தில் பிரதமர் மோடி, சில நிமிடங்கள் பயிற்சி செய்தார்.

Tuesday, August 17, 2021

August 17, 2021

சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கும் அனுமதி

சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கும் அனுமதி : சுதந்திரதினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசிய காட்சி |படம் ஏஎன்ஐ நாடுமுழுவதும் உள்ள சைனிக் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளும் இனிமேல் கல்வி பயில அனுமதிக்கப்படுவார்கள் என்று சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி தெரிவி்த்தார். நாட்டின் 75-வது சுதந்திரதினவிழா உற்சாகமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறி உரைாயற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் பாடங்களை கற்க வகை செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை என்றால், ஏழ்மை, வறுமையை எதிர்த்து போராடுவது என நான் கருதுகிறேன். 21ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளத்தான் இந்த தேசம் இன்று புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஏழைக் குடும்பத்தில் உள்ள மகள்களும், மகன்களும் தொழில்சார்ந்த நிபுணர்களாக மாற முடியும், அவர்களின் திறமைக்கு ஏற்ப நீதி வழங்கப்படும். விளையாட்டு என்பது திறனைவளர்க்கும் பாடமாக இல்லாமல், புதியக் கல்விக்கொள்கையில் முக்கியப் பாடங்களின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விளையாட்டு முக்கியமான கருவியாகும். நாடுமுழுவதும் உள்ள சைனிக் பள்ளிக் கூடங்களில் பெண் குழந்தைகளையும் சேர்த்து கல்வி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைனிக் பள்ளிகளில் தாங்களும் சேர்ந்து படிக்க ஆவலாக இருப்பதாக ஏராளமான பெண் குழந்தைகளிடம் இருந்து வேண்டுகோள்கள் வந்ததால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. எனக்கு லட்சக்கணக்கான மகளிடம் இருந்து கடிதம் வந்ததில், ஏராளமானோர் சைனிக் பள்ளிக்கூடங்களில் படிக்க விருப்பம் தெரிவி்த்திருந்தனர். ஆதலால் இனிமேல், பெண் குழந்தைகளுக்கும் சைனிக் பள்ளி அனுமதிக்கப்படும். மிசோரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளை அனுமதிப்பது குறித்து பரிசோதனை முயற்சி நடந்தது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Saturday, August 14, 2021

August 14, 2021

பழைய வாகனத்தை அழித்ததற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள், புதிய வாகனம் வாங்கும் போது பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை : பிரதமர் மோடி

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்த பிரதமர், இந்தக் கொள்கை வாகனத்துறைக்கும், புதிய இந்தியாவின் போக்குவரத்துக்கும் ஒரு புதிய அடையாளத்தை வழங்கப்போகிறது என்றார். மேலும் அவர் பேசியதாவது, தகுதியற்ற வாகனங்களை அறிவியல் ரீதியில் சாலைகளில் இருந்து அகற்றி, நாட்டின் வாகன எண்ணிக்கையை நவீனமயமாக்க இந்தக் கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும்.

வாகன இயக்க நவீனமயமாக்கல் பயணம் மற்றும் போக்குவரத்து சுமையைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு உதவிகரமாக இருக்கும். நாட்டின் நகரங்களில் மாசைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது. இந்தக்கொள்கை ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.75-வது சுதந்திர தினத்தை எட்டவுள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகும்,என்று கூறினார். இந்தக்கொள்கையின் ஒவ்வொரு வழியிலும் பொதுமக்கள் பெரும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படுவது முதலாவது பயனாகும். இந்தச் சான்றிதழை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன், சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். இரண்டாவது பயன், பராமரிப்பு செலவு, பழுதுபார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை இதன் மூலம் மிச்சமாகும். மூன்றாவது பயன் ஆயுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. பழைய வாகனங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பெருத்த அபாயத்திலிருந்து விடுதலை. நான்காவதாக, நமது பூமியை மாசுபடுத்துவது குறையும்,என்றார்.

Wednesday, July 28, 2021

July 28, 2021

புதிய கல்விக் கொள்கை: நாளை(ஜூலை 29) மாணவர்களுடன் மோடி உரை

புதிய கல்விக் கொள்கை: நாளை(ஜூலை 29) மாணவர்களுடன் மோடி உரை

புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றுகிறார்.

தேசிய கல்விக் கொள்கை 2020உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த நிகழ்வின்போது கல்விதுறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

Thursday, July 15, 2021

July 15, 2021

மாதம் ரூ.3000, வருடம் ரூ.36000 பென்ஷன் – பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டம்!

மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36,000 பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

விவசாயிகளுக்கு அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி மூலமாக ஏழை எளிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் அதே போல வேறொரு திட்டமும் உள்ளது. மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36000 பென்சன் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும் போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் பெற முடியும். இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆகும். இதில் இணையும் விவசாயி தனது 60 வயது வரையில் மாதத்துக்கு ரூ.55 முதல் ரூ.200 பிரீமியம் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியில் செல்லலாம். ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இணையலாம்.

Sunday, July 11, 2021

July 11, 2021

Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 048001/ எம்/ இ4/ 2019, நாள்: 02-07-2021. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு ( Registration ) செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag , 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது தேதி வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே மேற்கண்ட இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும்பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடவும் , www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் POOR LOT M கு முழுமையாக பதிவு செய்திடவும் மற்றும் அதனை உறுதிபடுத்துமாறு ) ( mI ' ( IM M ளப்படுகிறார்கள் மேலும் , A D அனைத்து வகை பானி தலைமை ஆசிரியர்களுக்கும் இத்தகவலினை தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அனுப்புமாறும் மற்றும் அனைத்து வகை ( uotienault ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தொடர்ந்து கண்காணித்து அதன் அறிக்கையினை 2007 2021 அன்று மாலை 5 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( Maccindsc@xmail.com ) அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி பணியில் காலதாமதம் ஏற்படின் அதனை ஆணையரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, July 07, 2021

July 07, 2021

இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக அரசு துறைகளில் பணி புரிபவர்களுக்கே சில சிறப்பு சலுகைகளுடன், லட்ச கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை ஒவ்வொருவர் வாங்கும் சம்பள விவரம் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையுடன், கை நிறைய சம்பளம், அரசு சலுகைகள் உள்ளிட்ட பலவும் கிடைக்கிறது. ஒரு அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கே இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்றால் அரசை நடத்தும் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கும் மரியாதையுடன், அவர்களது மாத வருமானம் எவ்வளவு இருக்கும் என்றே நம்மால் கணிக்க இயலாது. அந்த வகையில் நீங்கள் அறியாத அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் சம்பளம், மற்றும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் தற்போது பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரத்தில் உள்ள முதல் நபர் யார் என்றால் அது ஜனாதிபதி தான். ஒரு மாதத்துக்கு மட்டும் இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் 5 லட்சம் ரூபாய். இந்த தொகை அவரது சம்பளத்தில் கொடுக்கப்படும் முதன்மை தொகையாகும். இது தவிர ஜனாதிபதிக்கு இன்னும் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த சம்பள பட்டியலில் 2 ஆவதாக இணைந்திருப்பவர் நம் நாட்டின் துணை ஜனாதிபதி. இவருக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இதுவே ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆளுனர்களுக்கு 3.50 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக நம் நாட்டின் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவர் என்றால், அது பிரதமர் தான். அதன் படி பிரதமருக்கு கொடுக்கப்படும் மாத சம்பளம் 2.80 லட்சம் ரூபாயாகும். மற்றொரு பக்கத்தில் காண்கையில் பிரதமர் பதவியில் இருந்து பதவி காலம் முடிந்த ஒருவர், அவரது வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு இலவச இடம் கொடுக்கப்படுகிறது. இதோடு பிரதமருக்கு என இலவச மருத்துவ செலவுகளுடன் 14 அலுவலக பணியாளர்கள் கொடுக்கப்படுவார்கள். இது தவிர 6 எக்ஸ்க்யூட்டிவ் வகுப்பு விமான டிக்கெட்டுகள், பதவியில் இருந்து விலகிய பிறகு முதல் 5 ஆண்டுகளுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகள் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இது தவிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மாதந்தோறும் 2,80 லட்சம் ரூபாயும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவருக்கும் 2.50 லட்சம் ரூபாயும், தலைமை தேர்தல் ஆணையருக்கு 2.50 லட்சம் ரூபாயும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு 2,50 லட்சம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. தவிர இவர்களுக்கு மருத்துவ செலவுகள், இருப்பிடம், போக்குவரத்து என அனைத்துக்கும் சிறப்பு சலுகை கொடுக்கப்படுகிறது. இறுதியாக தமிழக முதல்வருக்கு சம்பளம் 2.20 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதில் உத்தர பிரதேச முதல்வருக்கு அதிகபட்சமாக 3.65 லட்சம் ரூபாயும், மஹாராஷ்டிரா முதல்வருக்கு 3.40 லட்சம் ரூபாயும், ஆந்திர பிரதேச முதல்வருக்கு 3.35 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. இவற்றில் மிக குறைந்த வருமானத்தை தெலுங்கானா, பெங்கால், நாகலாந்து உள்ளிட்ட மாநில முதல்வர்கள், 1.10 லட்சம் ரூபாயாக பெற்று கொள்கின்றனர். இது தவிர இந்த அரசு அதிகாரிகளுக்கு மேலும் பல சலுகைகள் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
July 07, 2021

7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியபடி (DR) வழங்குவது குறித்து இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமைச்சரவை கூட்டம்:

இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் DA, DR வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இடையே நடந்த கூட்டத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் DA, DR சலுகைகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவு மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 நிலுவைத் தொகை உட்பட, 2021 செப்டம்பரில் DA, DRன் நிலுவையில் உள்ள மூன்று தவணைகள் வழங்கப்படும் என்று அமைச்சரவை செயலாளர் ஒப்புக் கொண்டதாக பொதுச் செயலாளர் மிஸ்ரா அவர்கள் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பணிபுரிந்தனர், இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அரசாங்கம் அவர்களின் நியாயமான பலன்களை வழங்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். இதற்கிடையில், டிஏ மற்றும் டிஆர் குறித்து இறுதி முடிவை விரைவாக எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஆயுதப்படை ஊழியர்கள் உட்பட, தங்களுக்கு உரிய டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆரின் கூடுதல் தவணைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 10, 2021

June 10, 2021

நீட் தேர்வு - தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, பிளஸ் டூ மதிபெண் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்க பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கடிதம்!

நீட் தேர்வு- தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ஓ.பி.எஸ். கோரிக்கை!
1. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கடிதம்!
2. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை பொறுத்த வரை ஏ++ தகுதியை பெற்றுள்ளதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது
3. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மிக மிக சிறப்பாக உள்ளதால் தனியே தகுதித்தேர்வு நடத்த வேண்டிய தேவையில்லை 4.
மருத்துவ படிப்பு மற்றும் அனைத்து வகையான தொழில் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளில் இருந்து விலக்க தேவை
5. பிளஸ் டூ மதிபெண் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும்

Wednesday, June 09, 2021

June 09, 2021

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 - பிரதமர் மோடி அறிவிப்பு!

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டம்.. பிரதமர் மோடி அறிவிப்பு! .
இளம் எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 இளம் படைப்பாளிகளுக்கு 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog