Breaking

Showing posts with label Scheme. Show all posts
Showing posts with label Scheme. Show all posts

Tuesday, January 23, 2024

January 23, 2024

27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம் - கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை



27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம் - கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, October 14, 2023

October 14, 2023

50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி... அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்!



The Chief Minister who announced the crazy scheme of Scooty for 50 thousand teachers! Do you know where? 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி... அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்! எங்கு தெரியுமா?

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு 50 ஆயிரம் ஸ்கூட்டி வழங்க ஆலோசித்து வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், தேஜ்பூரில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் விழாவில் பேசுகையில்," மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் அந்த ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வர நேரிடுகிறது. எனவே, அத்தகைய 50 ஆயிரம் ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க உள்ளோம். இதன்மூலம் அவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர முடியும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர உதவும். எங்கள் அரசிற்கு முக்கியமானது என்னவென்றால், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் சென்றடைவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் ஒரு நிமிடம் கூட கற்றலை இழக்காமல் இருக்க வேண்டும்.

எந்தெந்த பகுதிகளில் எளிதாக பயணிக்க சாலைகள் மற்றும் பாலங்கள் தேவை என்பதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தின் பசுமையை அதிகரிக்க மாணவர்கள் தலா ஒரு மரக்கன்றுகளையாவது நட வேண்டும்" என்றார்.

Friday, March 17, 2023

March 17, 2023

தொழிலாளர்‌ நல நிதி செலுத்தும்‌ தொழிலாளர்கள் மற்றும்‌ அவர்களது மகன்‌/மகளுக்கு திருமணஉதவி-த்‌ தொகைத்‌ திட்டம்‌ - உதவித்‌ தொகையினை ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியீடு

தமிழ்நாடு தொழிலாளர்‌ நல வாரியம்‌ - தொழிலாளர்‌ நல நிதி செலுத்தும்‌ தொழிலாளர்கள் மற்றும்‌ அவர்களது மகன்‌/மகளுக்கு திருமணஉதவி-த்‌ தொகைத்‌ திட்டம்‌ - உதவித்‌ தொகையினை ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்படுகிறது

Tuesday, December 20, 2022

December 20, 2022

திறன் பயிற்சியில் நேரடியாக ஈடுபடத் தயாராகும் தொழில் துறை: நான் முதல்வன் திட்ட ஆலோசனையில் முடிவு

திறன் பயிற்சியில் நேரடியாக ஈடுபடத் தயாராகும் தொழில் துறை: நான் முதல்வன் திட்ட ஆலோசனையில் முடிவு

திறன் பயிற்சிகளை அளிக்கும் பணியில் தொழில் துறையை நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் சாா்ந்த தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் தொழில் துறையை நேரடியாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொழில் துறைகளில் தொழில் பழகுநா்களுக்கு புதிய பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழில் துறைக்குத் தேவைப்படும் திறன்களுக்கு ஏற்ப புதிய திறன் பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், தொழில் கல்வி பயின்றவா்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் நிதியுடன் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தொழில் பழகுநா் திட்டத்தில் தமிழக மாணவா்கள் அதிகளவு சோ்ந்து பயன்பெறும் வகையில் தொழில் துறையுடன் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Wednesday, September 14, 2022

September 14, 2022

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டம் எப்படி செயல்படும்? - முழு விவரம்

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் செயல்படும் விதம் தொடர்பாக முழுமையான விவரம்: முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் விருப்பத்தின்பேரில் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும்.

இவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், கண்டு களித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.

இவ்வகுப்புகள் மூலம் அவர்களை சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள் மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக அனைவரையும் உருவாக்குவதே 'சிற்பி' திட்டத்தின் நோக்கமாகும்.

Thursday, September 01, 2022

September 01, 2022

ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப ரூ.10,000 கிடைக்கும்.. எப்படி?

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை எடுக்கலாம், எப்படி என்பது இங்கே செய்தியில் பார்ப்போம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2014 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர நாள் உரையில் ஜன் தன் ஜோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

மேலும், ஏழை எளிய மக்கள் பணம் அனுப்புதல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கு தனிநபர்கள் வங்கிச் சேவைக்குள் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகஸ்ட் 28 தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சலுகைகள்:

ஜன் தன் யோஜனா திட்டத்தில் நிறைய வசதிகளும் சலுகைகளும் உள்ளன. அதில் முக்கியமான ஒரு வசதிதான் ஓவர் டிராஃப்ட். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய ஜன் தன் யோஜனா கணக்குகளை வைத்திருப்பவர்கள் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் (ஜீரோ பேலன்ஸ்) கூட நீங்கள் ரூ.10,000 வரை எடுக்க முடியும். கணக்கில் பணம் இருந்தாலும் இதை நீங்கள் எடுக்கலாம்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் ஓவர் டிராஃப்ட் முறையில் ரூ.5000 மட்டுமே எடுக்க முடியும்.

இதன் பின்னர் அது இரட்டிப்பாக்கப்பட்டு தற்போது ரூ.10,000 வரை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.2000 வரை மட்டுமே நிபந்தனை இல்லாமல் எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த குறைந்தது 6 மாதங்கள் ஜன் தன் கணக்கை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் ரூ.10,000 எடுக்க முடியும். இல்லாவிட்டால் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜன் தன் யோஜனா கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் மற்றும் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி திட்டத்திற்குத் தகுதியுடையவை.

Tuesday, August 23, 2022

August 23, 2022

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் அளிக்க இம் மாதம் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்க பணமாக்கத் திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கிராம் 24 காரட் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5197 ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.50 சதவிகித வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பத்திரம் வாங்கும்போது வாடிக்கையாளா்கள் ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் கட்டாயமாகும். பத்திரம் தங்க கிராமின் மடங்காக உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 22, 2022

August 22, 2022

வெறும் ரூ.29 வீதம் முதலீடு; ரூ 4 லட்சம் ரிட்டர்ன்: இந்த திட்டம் தெரியுமா?

ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும்

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது எப்போதுமே நல்ல யோசனையாகும். பொதுவாக இந்திய மக்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.

எல்ஐசி பாலிசிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும், தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமான எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.29 முதலீடு செய்தால், இந்தக் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை ஒருங்கிணைக்கிறது. பாலிசிதாரரின் முதிர்ச்சிக்கு முன்னதாக பாலிசிதாரரின் இறப்பு உள்ளிட்ட துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போதும், பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும்.

கூடுதலாக, இந்தத் திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தின் கீழ் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்தை தாண்டக்கூடாது, இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.75,000 ஆகும்.

எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசியில் ஒருவர் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 3 லட்சம் என்பதை இது குறிக்கிறது. இந்த பாலிசியின் முதிர்வு காலம் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை இருக்கலாம்.

பிரீமியத்தை ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காலாண்டிலும், ஒவ்வொரு அரையாண்டு அல்லது ஒவ்வொரு வருடமும் செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் ரூ.29 வீதம் மாதம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஆண்டுக்கு தோராயமாக ரூ.10,959 செலுத்துவீர்கள்.

அந்த வகையில் ஒரு 20 ஆண்டுகள் முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 20 ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 696 முதலீடு செய்வீர்கள். இந்தத் தொகை முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 8 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களுக்கும் முதலீடு செய்யலாம்.

Friday, August 19, 2022

August 19, 2022

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க LIC அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்ஐசி அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதன்கிழமை (ஆக. 17) தொடங்கிய இந்தத் திட்டம், அக்டோபா் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை வாடிக்கையாளா்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். யூலிப் பாலிசிகளைத் தவிர அனைத்து பாலிசிகளையும் இந்தத் திட்டத்தின்கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம்.

ரூ.3 லட்சம் வரையிலான நிலுவைத் தொகை இருந்தால் 25 சதவீதமும் அதற்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

எனினும், நிலுவைத் தொகையைப் பொருத்து அந்தக் கட்டணத்தில் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை தள்ளுபடி செய்யப்படும். மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு தாதமக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 11, 2022

August 11, 2022

விவசாயிகள் கவனத்துக்கு... மின் மோட்டர்கள் அமைக்க ரூ.10,000 மானியம் பெறுவது எப்படி?

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்துக்கு மின்மோட்டார்கள் அமைப்பதற்கு ரூ.10,000 மானியம் பெற முடியும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிதாக மின் மோட்டார் பம்ப் பொருத்தவும், பழைய மின் மோட்டர்களை மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் புதிய மின் மோட்டர் பொறுத்தவும், பழைய மின் மோட்டரை மாற்றி அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் பயன் பெறமுடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - குறிக்கோள் என்ன? வழங்கப்படும் உணவு என்ன?

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - குறிக்கோள் என்ன? வழங்கப்படும் உணவு என்ன?

Tuesday, July 26, 2022

July 26, 2022

மூத்த குடிமக்களுக்காகவே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஸ்பெஷல் திட்டங்கள்!

போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

வயதான காலத்தில் எவ்வித ஆபத்துமின்றியும், வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இன்றைக்கு உள்ள பொருளாதார நிலையை சரிசெய்வதற்கு சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக வயதானவர்களிடம் சேமிப்பு எதுவும் இல்லையென்றால் மற்றவர்களை நம்பி அவர்களால் இருக்க முடியாது. இதற்காக தான் சீனியர் சிட்டிசன்கள் தங்களது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் முதலீடு செய்து மாதந்தோறும் வருமானத்தை பெறுகிறார்கள். ஒருவேளை சில சமயங்களில் பங்கு சந்தையில் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதிக வட்டி தரும் சேமிப்புத்திட்டங்களை தேர்ந்தெடுக்க முயல்வார்கள். இப்படி வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதோ முழு விபரம் இங்கே… மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ( senioe citizen saving scheme-SCSS):

மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் என்பது 5 ஆண்டுகளுக்கான முதலீட்டுத் திட்டமாக உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சேமிப்புக் கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்தின் வாயிலாக திறந்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். இத்திட்டத்திற்க 7.4 சதவீத வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டம் முழு வரிக்கு உட்பட்டது.

5 வருட நிலையான சேமிப்பு (FD):

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்புத்தொகையை (Fixed deposit) வழங்குகின்றன. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இத்தொகையானது 5 ஆண்டு வரி சேமிப்பு FD ல் மொத்த வருவாயில் இருந்து விலக்கு பெறத் தகுதி பெறுகிறது. இதற்கான வட்டித்தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என ஒட்டுமொத்தமாகப் பெறலாம். இந்த வரி சேமிப்புத்திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை டெபாசிட்டுகளை திரும்ப பெற முடியாது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:

இதுநிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை , ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். எனவே நிலையான வருமானம் மற்றும் வரிச்சலுகைகளுடன் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை ஆனால் பிரிவு 80 C இன் கீழ் வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். குறிப்பாக தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme):

ஓய்வூதியத்திற்கான சேமிப்பை திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் செய்யப்படும் பங்களிப்பு, பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்

2022-23 ஆம் கல்வியாண்டு - 11 ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - உத்தேச தேவைப் பட்டியல் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
இதையும் படிக்க | TNPSC - ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING (TAMIL NADU GENERAL SERVICE) (Certificate Verification)
July 20, 2022

பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி

பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி


வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, அம்மாணவர்கள் பிளஸ் 2 படித்து வரும் நிலையில் அவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

வேலூர் மாவட்டத்தில் தற்போது 84 அரசு மற்றும் அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 6 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 147 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 495 பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

இதற்காக, தனியார் மிதிவண்டி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கு மிதிவண்டிகளை சரிபார்த்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, பச்சை வண்ணத்தில் வழங்கப்பட்ட மிதிவண்டி இந்தாண்டு நீல வண்ணத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், நடப்பு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்குவதற்காக பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Friday, June 24, 2022

June 24, 2022

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான “கல்லூரி கனவு” நிகழ்ச்சி - நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் நாளை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை நாளை (25.6.2022) காலை 9.00 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.



இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.



இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

எச்சிஎல் (HCL) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.



மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும்.



இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Monday, June 20, 2022

June 20, 2022

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற உயர்கல்வித்துறை உத்தரவு

Rs.1000 Scholarship - Order for Certificate

Higher education department instructs college principals to obtain a certificate of education in a government school from 6th to 12th class.

Order to obtain certificates from eligible students for the scheme of providing Rs. 1,000 per month to students in higher education

ரூ.1000 கல்வி உதவித் தொகை - சான்றிதழ் பெற உத்தரவு

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு.

உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவி வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவியரிடம் சான்றிதழ்களை பெற உத்தரவு

Monday, June 13, 2022

June 13, 2022

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம் ஓர் அறிமுகம்

Ennum Ezhuthum Scheme : ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்ட பாடல் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம், அரும்பு, மொட்டு, மலர் என்று மூன்று படிநிலைகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் 8வயது உள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறனுடையவர்களாக மாற்ற இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. இதனை களைந்திடும் வகையில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு எழுத்துக்களை வாசித்தல், எழுதுதல், வாக்கியங்களை சரளமாக வாசித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அந்தவகையில் அரும்பு, மொட்டு, மலர் என்கிற மூன்று படிநிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரும்பு மொட்டு மலர்

இதில் அரும்பு என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை மாணவர்கள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். மலர் என்கிற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கும் பயிற்சி கையேடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்ட பாடல் ஆகியவற்றை முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதன் வாயிலாக மாணவர்கள் கொரொனா காலகட்டத்தில் இழந்த எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எழுதுதல் மற்றும் வாசிக்கும் திறன் குறைந்ததால் மாணவர்கள் பாடங்களை படிப்பது மற்றும் எழுதுவதில் பல்வேறு சவால்களை சந்தித்ததாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதனால் ஒட்டுமொத்தமாக மாணவர்களின் கல்விச் சூழல் பின்னோக்கி சென்று விட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

வரும் நாட்களில் இந்த திட்டத்தின் மூலம் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று கூறும் அதிகாரிகள், இந்த திட்டம் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் என்றும் கூறுகின்றனர்.

Wednesday, June 01, 2022

June 01, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்! - தலையங்கம்

சிறு குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் கடந்த மாதம் 5-ஆம் தேதி சட்டசபையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவது அரசுப்பள்ளிகளில் ஒன்று |முதல்ஐந்தாம் வகுப்புவரைபடிக்கும்குழந்தைகளுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். மற் |றொன்று 5 வயதிற்கு குறைவாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளை தீர்க்க மருத்துவ பரிசோ தளை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் றார். கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்காள சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால் உணவு உண்பதன் நோக்கம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற் கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்பு சந்தியை ஊக்குவிக்கும், வைட்டமினும், தாதுப் பொருட்களும், நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க |வேண்டும். நுண்சத்துக்களில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ. |போலேட் பி12 முக்கியமானவை. இரும்புச்சத்து மற் றும் போலேட் நம் உடலுக்கான ரத்த உற்பத்தியில் |பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ, கண் பார் வைக்கு தேவையானது. தேசிய அளவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து எடுக்கப்| பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10 சதவீதம் வரை ரத்த சோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41 சத |வீதம் பேர் போலேட் பற்றாக்குறையும், 7 சதவீதம் பேர் |பி12 பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறி) யப்பட்டுள்ளனர்.இவற்றில் பி12 தவிர இதரசத்துக்கள்] காய்கறி, பழங்களில் இருந்து கிடைக்கின்றன. ஒரு வேளை உணவில் ஒரு நாளைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் மூன்றில் ஒரு பங்கு என்ற அள் வில் கிடைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தற்சமயம் ஆரம்பப் பள்ளிக |வில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும், 12 கிராம் புரதமும் கொடுக்கவல்லதாக உள்ளது. ஒவ் |வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறியை கொடுப் பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. வாரத்தில் |5 நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகி றது. முதல் 5 நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் |கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன்கூடிய சாம்பார். கறிவேப்பிலை சாதம் | வழங்கப்படுகிறது. அடுத்த 5 நாட்கள் சாம்பார் சாதம், சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கர் சேர்க் கப்பட்ட சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. | அரிசி, எண்ணெய், முட்டை, பருப்பு போன்ற உண [வுப் பொருட்களை அரசு தேவையான அளவில் நேரடி யாக பள்ளிக்கு வழங்கி விடுகிறது. மற்ற சத்துக்கள் |அடங்கிய இதர காய்கறிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தின மும் 50 கிராம் காய்கறி கொடுப்பதற்கு ரூ.1.06-ம், இதர மசாலா பொருட்கள் வாங்குவதற்கு 40 காசும், சமையல் எரிவாயுவிற்கு 61 காசும் ஒதுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மதிய உணவு பணியாளர் காய் கறியையும், மசாலா பொருட்களையும் அன்றாடம் வாங்கிக்கொள்ளவேண்டும், இந்தநிதி ஒதுக்கீடு மேற் கூறிய பொருட்களை வாங்குவதற்குப் போதாத நிலை யில் கூடுதலாக 50 கிராம் காய்கறி வாங்குவது சாத்தி யமற்றது. ஊட்டச்சத்து இலக்கை அடைவது என்பது வேறு: விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது வேறு, மற்ற உணவுப் பொருட்களை வழங்குவது போல |அரசே தேவையான காய்கறிகளையும் மையங்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய லாம். அந்தந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இயங் கும் மகளிர் கய உதவிக் குழுக்களின் மூலமோ, சிறு குறு விவசாய அமைப்புகளின் மூலமாகவோ ஒப்பந்த

அடிப்படையில் இம்முயற்சியில் ஈடுபடலாம். காய்கறிகள் தவிர ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத் திற்கும் உதவி செய்வது போல் இருக்கும். குழந்தைக ளுக்கு வாய்க்கு ருசியான உணவு வழங்குவதில் மேற்கொள்ளப்படும் முயற்சி களைப் போலவே நுண் சத்துக்களும் தேவையான அளவில் கிடைப்பதற்கு |அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த நடைமுறை களை கையாண்டால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள [குழந்தைகளை காணமுடியாது. மாறாக நல்ல சத்துள்ள

Sunday, April 17, 2022

April 17, 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் மீண்டும் அமல்? பரிசீலனையில் உள்ளதாக உயரதிகாரி தகவல்

The Government of Tamil Nadu has stated that it is considering abolishing the new contributory pension scheme for Tamil Nadu government employees and re-implementing the old pension scheme. During the AIADMK regime, a new pension scheme was implemented in Tamil Nadu from 1.4.2003. Of this, 6 lakh civil servants and teachers were included. Government employees and teachers have been fighting against this since the day the contributory pension scheme came into effect. Government employees have been fighting for 19 years against the contributory pension scheme. Government employees and teachers have objected to the implementation of the new Benefit Pension Scheme as no benefits such as allowances, pensions, medical insurance, etc. will be available under the new pension scheme. In this context, the state governments of West Bengal, Rajasthan and Chhattisgarh canceled the new pension scheme. The Governments of Kerala, Delhi and Andhra Pradesh have received the report of the Panel of Experts and announced that they intend to implement the old Benefit Pension Scheme. Similarly, various political parties have been demanding the implementation of the old pension scheme in Tamil Nadu. In this context, a letter was written on behalf of the Tamil Nadu Civil Servants Union to the Government of Tamil Nadu regarding the status of the old pension scheme.

In response to this letter, Gopala Krishnan, the pro-government secretary for finance, said in a reply letter to the Tamil Nadu Civil Servants' Union that their attention was drawn to the letter and that it was only the department's request to cancel their contributory pension scheme and take action to implement the old pension scheme. On or before 1.4.2003, a panel of experts was set up to submit its report to the Government, which was set up to look into the possibility of abolishing the contributory pension scheme for employees and teachers in the civil service and reviving the old pension scheme. They are informed that after considering them well, the appropriate decision will be taken and the Governments will be issued on the basis of it. Thus it is said. தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில், 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தன. கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இதேபோல், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தநிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்திற்கு பதிலளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடிதத்தின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன் தங்களுடைய கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
April 17, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது வல்லுநர் குழு

The panel of experts set up to look into the possibility of re-implementing the old pension scheme submitted its recommendations to the Government of Tamil Nadu. The Government has assured the Tamil Nadu Civil Servants Union that appropriate action will be taken soon.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது. உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

Total Pageviews

Search This Blog