Breaking

Showing posts with label BNYS. Show all posts
Showing posts with label BNYS. Show all posts

Saturday, August 05, 2023

August 05, 2023

BNYS - யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: செப்டம்பரில் கலந்தாய்வு

BNYS - யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: செப்டம்பரில் கலந்தாய்வு

இளநிலை யோகா இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்எனஇந்தியமருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.



இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது. அதேபோன்று சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, 17 தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பிளஸ்-2 தோ்வு அடிப்படையில் இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்த படிப்புக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் ஆக.14-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்போது அப்படிப்புக்கு ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்திய மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் மலா்விழி கூறியதாவது: யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. நிகழாண்டிலும் அந்தப்படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலானோா் விண்ணப்பிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 14-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பரில் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும். நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஆயுா்வதேம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.

Thursday, September 29, 2022

September 29, 2022

Director Indian Medicine and Homoeopathy - Admission to U.G. Medical Degree Course in BNYS (Yoga and Naturopathy) - PDF

Director Indian Medicine and Homoeopathy - Admission to U.G. Medical Degree Course in BNYS (Yoga and Naturopathy) - PDF
செய்தி வெளியீடு எண்: 1688

நாள்: 27.09.2022

செய்தி வெளியீடு

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், சென்னை தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.N.Y.S) மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 19.10.2022 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் 28.09.2022 முதல் 19.10.2022 | தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்யும் காலம் முடிய மாலை 05.00 மணி வரை |பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் / 19.10.2022 மாலை 05.30 மணி கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ வரை அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்



CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog