government students
April 20, 2024
Showing posts with label government students. Show all posts

Saturday, April 20, 2024
Sunday, July 16, 2023
Wednesday, March 08, 2023
VIDEOS
March 08, 2023
அரசு பள்ளி வகுப்பறை பொருட்களை அடித்து உடைக்கும் மாணவர்கள் - மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?

07.03.2023 அன்று தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அ.மே.நி.பள்ளியில் உள்ள 11 மற்றும்12ம் வகுப்பு மாண, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும்.மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?
Tuesday, December 20, 2022
government students
December 20, 2022
அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

2022-23 ஆம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று (டிச.19) தொடங்கி அடுத்தாண்டு ஜன.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள் (Physiotherapist), சிறப்பு பயிற்சி மையப் பாதுகாவலர்கள், பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.
வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கணக்கெடுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும். பள்ளிகளில் சேர்த்தவுடன் எமிஸ் செயலியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு களப்பணி இன்று (டிச.19-ல்) தொடங்கிஅடுத்தாண்டு ஜன.11 வரை நடைபெற வேண்டும்.

Saturday, November 26, 2022
government students
November 26, 2022
அரசு பள்ளி மாணவர்களில் 15% கற்றலில் பின்தங்கியுள்ளனர்: அடிப்படை கல்வியை மேம்படுத்த மீண்டும் பிரிட்ஜ் கோர்ஸ்

அரசு பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கற்றலில் பின்தங்கிய அம்மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் பிரத்யேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க தொடக்கக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) இயக்குநர் கடிதம் ஒன்றுஅனுப்பியிருந்தார். அதன்படி, கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து மாணவர்களிடம்கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதை சரிசெய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் 4, 5-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் 1-ம் வகுப்பு கற்றல் நிலையில் இருக்கின்றனர்.
இம்மாணவர்கள் மொழி பாடத்தில் முழுமையாக எழுத்துக்களை அறியாததால் எழுதவும், வாசிப்பதற்கும் சிரமப்படுவதாகவும், எண்மதிப்பு அறியாததால் கூட்டல் கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையிலும் உள்ளனர். இதையடுத்து 1-ம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
இதற்கான பயிற்சி கையேடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடிப்படை எழுத்து மற்றும் எண்கள் அறியாத மாணவர்களுக்கு அவற்றை கற்பதற்கான வாய்ப்பு அமையும். எனவே, நடப்பு 2-ம் பருவத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளில் இந்த பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியை வழங்கிட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எஸ்சிஇஆர்டிஇ அறிவுறுத்தலின்படி அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு கற்றல் நிலையில்உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியை அமல்படுத்தி கற்றல்அடைவை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் பள்ளி வேலை நேரத்தில் அரை மணி நேரம் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும். இதுசார்ந்து அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 31, 2022
ISRO
October 31, 2022
இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்
Friday, September 16, 2022
Which coaching is best for NEET?
September 16, 2022
NEET coaching classes for government school students - அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை NEET coaching classes for government school students from next month!
Chief Minister M.K. NEET coaching classes for government school students from next month. Stalin started it. The action has been taken when the pass rate of government school students in the NEET examination has fallen sharply.
It has been said that the NEET training which usually starts in December is going to start earlier this year. Officials of the school education department have said that improved NEET training will be provided to increase the pass rate.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கயுள்ளார். நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, August 10, 2022
இடைநிற்றல்
August 10, 2022
ஒரே பள்ளியில் 295 பேர் இடைநிற்றல்அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளியில் படித்த, 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த, 54 பேர், பிளஸ் 1 படித்த, 139 பேர், பிளஸ் 2 படித்த, 52 பேர் என மொத்தம், 245 பேர் பள்ளியில் இடையிலேயே நின்றனர்.கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. மேலும், அடிக்கடி நீண்ட விடுமுறை எடுத்த, 50க்கும் மேற்பட்டோரும் இதுவரை கல்வியை தொடரவில்லை. கடந்தாண்டு இடைநின்ற மாணவ - மாணவியர், நடப்பாண்டும் பள்ளியில் சேரவில்லை. பொதுவாக, மலைக்கிராமங்களில் மாணவ - மாணவியர் பள்ளி இடை நிற்பது தொடர் கதை என்ற போதும், ஒரே பள்ளியில், 295 மாணவ - மாணவியர் இடைநின்றது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது.
தகவல் உயரதிகாரிகள் வரை சென்ற நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஆய்வு செய்தார்.மாணவ - மாணவியர் வீடுகளுக்கு சென்று, மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தொட்டமஞ்சு, நாட்றாம்பாளையம், மஞ்சுகொண்டப்பள்ளி உட்பட பல்வேறு மலை கிராம மாணவ - மாணவியர், 40 கி.மீ.,யில் உள்ள அஞ்செட்டி அரசு பள்ளிக்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், மாணவியருக்கு குழந்தை திருமணத்தால், இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Monday, June 20, 2022
RESULTS
June 20, 2022
12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி - மேலும் ஒரு மாணவி தற்கொலை - விழுப்புரத்தில் சோகம்!
Failing the exam - Student suicide
Satyavathi, a student from Vadavetti village in Villupuram district, committed suicide by hanging herself after failing the Class 12 general examination.
தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் வடவெட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியவதி என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை
இதையும் படிக்க | தேர்வு முடிவு பயம்: திருப்பத்தூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

Saturday, April 02, 2022
government students
April 02, 2022
இன்ஜினியரிங் 'அட்மிஷன்' செல்லுமா? வன்னியர் மாணவர்கள் கவலை!
10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கான, 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்தாகி விட்ட நிலையில், இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லுாரிகளில், இந்த ஒதுக்கீட்டில்சேர்ந்த மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சி
தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில், 10.5 சதவீத இடங்களை, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்க, சட்டசபையில், அ.தி.மு.க., ஆட்சியின் போது சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு இன்றி, வழக்கமான 69 சதவீத ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. வன்னியர் உள் ஒதுக்கீடு
ஆனால், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழக உயர் கல்வி துறை சார்பில் நடந்த கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு வன்னியர் உள் ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், வன்னியர் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு உரிய முடிவு
இன்ஜினியரிங் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மட்டும் வன்னியர் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், இந்த மாணவர் சேர்க்கை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். எனவே, வன்னியர் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலை குறித்து, தமிழக அரசு உரிய முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

Wednesday, March 30, 2022
Student Safety Committee in Schools to Detect Drug Addicts
March 30, 2022
போதைக்கு அடிமையானவர்களை கண்டறிய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு குழு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
போதை பழக்கத்திற்கு அடிமையான மாண வர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கபள்ளிகளில் 6 உறுப்பினர்கள் கொண்டமாணவர் பாதுகாப்புகுழு அமைக்கப்பட உள்ளதாகமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி யின் சார்பில் அன்னவாசல் வட் டார வளமையத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி பேசியது:

Tuesday, March 29, 2022
Teacher
March 29, 2022
பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயற்சி.. பிளஸ் 2 மாணவர் கைது..!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் பின்புறம் கொண்டை போட்டு வந்துள்ளார். இதைக்கண்ட தலைமை ஆசிரியர், அந்த மாணவரை தனது அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியர் அறையில் சத்தம் போட்டுக் கத்தியதுடன், டேபிளில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த மற்ற ஆசிரியர்கள், மாணவரை சமாதானப்படுத்தி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்து வரச் சென்ற மாணவர், வரும்போது காலி பீர் பாட்டிலை சட்டையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
இதையும் படிக்க | TNPSC - PRESS RELEASES - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE Results
மாணவர் செய்த செயலைப் பற்றி அவருடைய பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்க, மறைத்துவைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரை குத்த முயன்றிருக்கிறார் அந்த மாணவர். இதனால் பதறிப்போன தலைமையாசிரியர் சத்தம் போட, அருகிலிருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவரைப் பிடித்து அவர் கையிலிருந்த பாட்டிலை வாங்கினர்.
பயந்துபோன தலைமை ஆசிரியர் தனது அறையை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பள்ளிக்கு வந்த போலீசார் மாணவரை சமாதானப்படுத்தி பேசுகையில், ‘இப்படிப்பட்ட செயல்களில் ரெளடிகள்தான் ஈடுபடுவாங்க. நீ, படிக்கிற பையன்’ என்று சொல்ல, அதற்கு மாணவர், “நானும் ரெளடிதான் இப்ப என்ன பண்ணணும்” என்று எதிர்த்து பேசியுள்ளார்.
இதையும் படிக்க | 35 தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 3 மாத தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!
இதனிடையே, பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் நகர போலீசார், மாணவரை கைது செய்தனர். மேலும், மாணவரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
PEOPLE'S
March 29, 2022
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்
ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில், 28 மாணவர்கள் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.70 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர்.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிக்க | TET - தகுதித்தேர்வு நிபந்தனைகளை அரசு கைவிட்டு 10 ஆயிரம் ஆசிரியர்களை காப்பாற்ற கோரிக்கை
இதுகுறித்து ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல்.சுரேஷ்சேனாதிபதி கூறியது:
கஜா புயல் பாதிப்பின்போது, எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஆம்பல் ரிலீப் ஃபண்ட் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, நிதி வசூலித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம்.
பின்னர், அதே பெயரில் கிராம வளர்ச்சி மற்றும் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டினோம். தொடக்கத்தில், இலுப்பைத்தோப்பு அரசுப் பள்ளியில் 1,500மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது 500-க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர். எனவே, இப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என 21 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பெற்று, இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளோம். வரும் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளோம் என்றார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு! - உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் கூறியபோது, “கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உள்ள இந்தப் பகுதியில், பரிசு பெறும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அந்தத் தொகை மிக உதவியாக இருக்கும் என்றுகூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். பரிசுத் தொகையை பெறுவதற்காக மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்” என்றார்.

Thursday, March 24, 2022
Vaccination
March 24, 2022
தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா?
தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நலப் பாதிப்பா? மா. சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மா.சுப்பிரமணியன் இன்று சட்டபேரவையில் ஆற்றிய உரையில், தடுப்பூசி இயக்கம் என்பது 2021, ஜனவரி 16 ஆம் தேதி, இந்தியா முழுவதிலும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இந்தியா முழுமைக்கும் இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
தற்போது 12 வயது முதல் 14 வயதினருக்கான தடுப்பூசி கோர்பெவாக்ஸ் என்ற தடுப்பூசி கடந்த ஒரு வார காலமாக போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது, ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது, பி.பிரியதர்ஷினி என்பவர்கள் கடந்த 4.1.2022 மற்றும் 2.2.2022 அன்றைக்கு கோவாக்சின் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து, ஆர்.யோகலட்சுமி என்கின்ற மாணவிக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தன்பேரில், உடனடியாக சோளிங்கர் மருத்துவமனையிலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் உயர் சிகிச்சை தேவைப்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அதோடு பிரியதர்ஷினி என்கின்ற மாணவிக்கு உடல் பலவீனம் பிரச்சினை தெரிவித்ததன்பேரில் அவருக்கு உடனடியாக சிகிச்சை சோளிங்கர் மருத்துவமனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கூறிய இரண்டு மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்ற சிகிச்சைகள் குறித்து 12.03.2022 அன்று மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசிகளை செலுத்தியதற்குப் பிறகு வரும் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழு கூடி அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலித்து, அதன்பிறகு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யோகலட்சுமி-க்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்குப் பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு உடல் பாதிப்பு, நோயாக இருக்கலாம் என்ற நிலையில், தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய, இவ்வறிக்கையினை மேல் பரிசீலனைக்காக இந்த தகவல்கள் தில்லியில் உள்ள தேசிய தடுப்பூசி செலுத்தியதன் பின்விளைவுகளைக் கண்காணிக்கும் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட இருவருக்கும் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் கவனத்திற்கு இது சென்றவுடன், அவர் உடனடியாக ‘நீங்களும், கதர்த் துறை அமைச்சரும் அடுத்த வாரமே, அந்த இரு குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று நிலைமையைப் பரிசீலித்து வாருங்கள்’ என்று ஆணையிட்டிருக்கிறார்கள் என்று சட்டமன்ற பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Wednesday, March 23, 2022
government students
March 23, 2022
மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இந்நிறுவனத்தின் வ்வ்வ்.உலகத்தமிழ்.இந்த என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் ரூ.3,100. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வாம்ப எதும் கிடையாது. கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளதால், அதற்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 13ம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
- தமிழாராய்ச்சி நிறுவனம்

Monday, March 21, 2022
HeadMaster
March 21, 2022
ராணுவ வீரர்கள் போல் முடிவெட்டி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்: தலைமையாசிரியை வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நம் பள்ளி, நம் பெருமை, என்ற தலைப்பில் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதையும் படிக்க | மருத்துவர்கள் மேல்படிப்பிற்கு ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
அப்போது, கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியை ஏஞ்சலின்மெர்சி இப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலர் சரியாக தலை முடி வெட்டிக்கொண்டும், சீருடை அணிந்து கொண்டும் வருவதில்லை. முடியை, காடுபோல் வளர்த்துக் கொண்டு விதவிதமான ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு வருகிறார்கள். இதனால், ஒரு மாணவனை சரியாக அடையாளம் காண முடியவில்லை. தற்போதுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிக்க முடியவில்லை. அப்படி, கண்டித்தாலும் ஆசிரியர்களை மதிப்பது இல்லை. பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்களது பிள்ளைகளை கண்டித்து ராணுவ வீரர் போல் முடிவெட்டி, நல்ல முறையில் சீருடை அணிந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். பள்ளியின், வளர்ச்சிக்காக பெற்றோர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் விவாதித்தனர்.

Sunday, March 13, 2022
SCHOOLS
March 13, 2022
150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! உபரிப் பணியிடங்களை குறைப்பதற்காக, குறைந்தபட்ச பணியிடங்களை மாற்றியமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள், பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் நடைபெற்று வருவதால் உபரி ஆசிரியர் முழு பட்டியல் வெளியிடுவதில் தாமதம். (13.03.2022) முற்பகல் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்பு!
இதையும் படிக்க | BT Deployment Seniority List - 2022

Friday, February 11, 2022
government students
February 11, 2022
அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்!

''தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மேலும் அதிகப்படுத்துவது என்பது, அரசின் கொள்கை முடிவு. ''அதை அரசால் செய்ய முடியும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேஷ் கூறினார்.
கொள்கை முடிவு
'நீட் நுழைவுத் தேர்வே வேண்டாம்' என்று, தமிழக சட்டசபை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுடைய வாய்ப்பை உயர்த்த, வேறு ஏதேனும் வழி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, வழக்கறிஞர் ஜெயகணேஷ் கூறியதாவது:
இதையும் படிக்க | சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு கிடைக்குமா?
மருத்துவ படிப்பு இடங்களுக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 27 சதவீதம் வழங்கும் முடிவை எடுத்தது, மத்திய அரசு. அது, அரசின் கொள்கை முடிவு. அதேபோல், தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போதுள்ள, 7.5 சதவீதத்தில் இருந்து, 10 அல்லது 15 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க, கொள்கை முடிவு எடுக்கலாம்.இதனால், தகுதியுள்ள இதர பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் முக்கியம். வாய்ப்பு பாதிப்பு
ஏனெனில், தமிழகத்தில் மொத்தமுள்ள, 7,825 மருத்துவ படிப்பு இடங்களில், மாநில தொகுப்பில், 6,999 இடங்கள் மட்டுமே உள்ளன. பல் மருத்துவத்தில் 1,930 இடங்கள் உள்ளன. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 1.10 லட்சம் மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதினர். போட்டி கடுமையாக உள்ள சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுமானால், அது இதர மாணவர்களுடைய வாய்ப்பை பாதிக்கலாம். தங்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று, அவர்கள் நாளை நீதிமன்றத்தை நாடவும் முடியும்.
தற்போதுள்ள சூழலில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தொடர்வதே சரி. அதேசமயம், அரசு பள்ளி மாணவர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படிக்க | உதயநிதி பிரசாரத்தில் திமுக கொடியுடன் பள்ளி மாணவர்கள்
கூடுதலான மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்படும் போதோ, இருக்கும் கல்லுாரிகளிலேயே மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் போதோ, படிப்படியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்திக் கொள்ளலாம். அப்போது, பொதுப் பிரிவு மாணவர்களுடைய வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்படாது. இவ்வாறு ஜெய கணேஷ் கூறினார். - நமது நிருபர் --

Sunday, February 06, 2022
The Collector lauded the 28 people who attended government schools and attended medical colleges
February 06, 2022
அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 பேரை கலெக்டர் பாராட்டினார்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 மாணவ-மாணவியர்கள் மற்றும் அம்மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பயின்று தற்போது மருத்துவ படிப்புக்கு தேர்வாகி பல்வேறு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நமது மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே இரண்டாவது அதிக அளவில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது எம்பிபிஎஸ் படிப்பில் 23 மாணவர்களும் பிடிஎஸ் படிப்பில் 5 மாணவர்களும் தேர்வாகி உள்ளனர். இந்த அளவிற்கு நமது மாவட்டம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு மாணவர்களின் உழைப்பும் ஆசிரியர்களின் கடின உழைப்பும் பெற்றோர்களின் ஊக்கமும் இதற்கு முக்கிய காரணம் .ஆகையால் இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதற்கு ஆசிரிய பெருமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், நேர்முக உதவியாளர் ந.பூபாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளுர்) ஆ.எல்லப்பன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, January 30, 2022
MBBS
January 30, 2022
75 அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் சேலம் மாவட்டம் மீண்டும் முதலிடம்

சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் 75 பேருக்கு மருத்துவம் படிக்க 'சீட்' கிடைத்துள்ளதால், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.தொடர்ந்து இந்த ஒதுக்கீடில் சேரும் மாணவ - மாணவியருக்கான கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியரிடையே நீட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்தது.கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான ஒதுக்கீடில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் எம்.பி.பி.எஸ்., ஒருவர் பி.டி.எஸ்., என, 27 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
இதனால், தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்த மாவட்டத்தில் சேலம் முதலிடம் பிடித்தது.நடப்பு கல்வியாண்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர், 1,135 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், 148 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இரு நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சேர்க்கை நடந்தது. இதில், 66 பேர் எம்.பி.பி.எஸ்., 9 பேர் பி.டி.எஸ்., என, 75 பேருக்கு சீட் கிடைத்தது.ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 9 மாணவியர் எம்.பி.பி.எஸ்., மற்றும் இரண்டு மாணவியர் பி.டி.எஸ்., என ஒரே பள்ளியில், 11 பேருக்கு சேர்க்கை கிடைத்துள்ளது.இதன் மூலம், தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் இரண்டாவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.