Breaking

Showing posts with label Madurai Branch Judgment of Chennai High Court. Show all posts
Showing posts with label Madurai Branch Judgment of Chennai High Court. Show all posts

Friday, July 29, 2022

July 29, 2022

பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே, அதேநேரம் பள்ளி குழந்தைகள் இடைநிற்றலை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. ஆகவே தமிழக அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பல மாணவர்கள் குடும்ப கொரோனா சூழலில் வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உருவாகியது. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும்

ஆசிரியர்கள் வட்டார வள ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதையும் நடப்பு கல்வி ஆண்டில் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

கொரோனா நோய் தொற்று காலத்தில் இந்திய அளவில் 250 மில்லியன் குழந்தைகள் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர். தேசிய கல்விக் கொள்கையின் படி குழந்தைகள் இடைநிற்றலை தவிர்த்து பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் 100% பள்ளி செல்வதை 2030ஆம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின்படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நடத்தி, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, ” இடைநின்ற குழந்தைகள் தொடர்பாக அரசு சமர்ப்பித்த புள்ளி விவரங்களில் வேறுபாடு உள்ளது. குழந்தை தொழிலாளர்களை மீட்கும் அதேசமயம் அவர்களின் குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மையில் குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை. தமிழகம், கேரளாவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியறிவில் சிறந்தும் விளங்குகிறது.

இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனையே. ஆனால் பல மாநிலங்கள் இது போன்ற பிரச்சினைகளால் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

ஆகவே தமிழக அரசு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக கவனிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து, தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

Thursday, July 21, 2022

July 21, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Thursday, March 17, 2022

March 17, 2022

உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனும் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் டிஎம்., எம்.சிஎச். போன்ற உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் "நீட்" தகுதி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், எஞ்சியுள்ள 50 சதவீதம் இடங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு கடந்த 2020, நவம்பர் 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிரான மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு பிறப்பித்த அரசாணைக்கு அனுமதி அளித்து கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக கேரள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 2020-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத் தடை ஏதும் இல்லாவிட்டால், 2021-22-இல் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாம் என உத்தரவிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் என்.கார்த்திகேயன், ரிஷப் பார்கவா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. வாதங்களுக்குப் பிறகு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், அந்த அமர்வே புதன்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: 2020, நவம்பர் 27-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவின் மூலம் 2020-2021 கல்வியாண்டுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பைத் தொடர்வதற்கான எந்த வழக்கும் இதில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கருதுகிறோம். ஆகவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். இதன் மூலம், தமிழக அரசு வழங்கும் இடஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு, கல்வியாண்டிற்கான கவுன்சிலிங்கை தமிழக அரசு தொடரலாம். இந்த விவகாரத்தில் கடந்த 2020-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தது. மேலும், அந்த உத்தரவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே செயல்படுத்தத்தக்கது எனவும் தெரிவித்திருந்தது.

2021-22 கல்வியாண்டைப் பொறுத்தமட்டில், அரசின் அரசாணையானது சொல்லப்பட்டுள்ள கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைமுறை தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்க வழக்கில் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசுப் பணி மருத்துவ விண்ணப்பதாரர்களைப் பொருத்தமட்டில் முதுநிலைப் பட்டம், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக ஒரு தனி சானல் - நுழைவு ஆதாரம் அல்லது இடஒதுக்கீடு அளிக்க அரசு அதிகாரம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள்மீதான விசாரணை ஹோலி விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. முன்னதாக, இந்த மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, ஷியாம் திவான், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் முன்வைத்த வாதத்தில், "டாக்டர் பிரீத்தி ஸ்ரீவாஸ்தவா வழக்கில் இது போன்று எந்த இடஒதுக்கீடும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது' என்றனர். தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதிட்டனர். சி.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதத்தில், "தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம், வழக்கில் இது சம்பந்தமாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரமானது இடஒதுக்கீடு அல்லாமல் ஒருவித சேர்க்கைக்கான ஆதாரமாகும் என கூறப்பட்டுள்ளது. இதை அரசமைப்புச்சட்ட சாசன அமர்வும் அனுமதித்துள்ளது' என்றார்.

தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிடுகையில், "இந்த வழக்கு புதிதல்ல. ஏற்கெனவே, தமிழக அரசுக்கு எதிராக கே.துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள

Friday, March 04, 2022

March 04, 2022

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்!

இதையும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme) ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog