Breaking

Showing posts with label Free coaching for Examination. Show all posts
Showing posts with label Free coaching for Examination. Show all posts

Wednesday, April 17, 2024

Tuesday, October 04, 2022

October 04, 2022

குடிமைப் பணி: முதல்நிலைத் தோ்வுக்குப் பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு

குடிமைப் பணி: முதல்நிலைத் தோ்வுக்குப் பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வு பயிற்சி துறைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

குடிமைப் பணித் தோ்வில் முதல் அடிக்கல்லான முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி மையமானது 225 முழுநேரத் தோ்வா்களையும், 100 பகுதிநேரத் தோ்வா்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. இதேபோன்று, கோவை, மதுரையில் உள்ள பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தோ்வா்களையும் பயிற்சிக்காக அனுமதித்துள்ளது.

இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இணையதளத்தின் வாயிலாக வரும் 7 முதல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். வரும் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 02, 2022

October 02, 2022

IAS / IPS முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குறித்து தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பு

தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 28.05.2023 மத்திய நடைபெற அன்று குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் ( ஞாயிற்றுக்கிழமை ) நடத்தும் தேர்வாணையம் பயிற்சியினை அளிக்க உள்ளது . உள்ள சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி , உணவு , தரமான நூலகம் , காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது . இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது .

அதே போன்று , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன . 2023 - ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07 : 10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம் . இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் . மேலும் , விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது . மேலும் , பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . தகுதியுடைய நபர்கள் 13.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு . தெரிவு செய்யப்படும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் . 2022 , டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

Monday, August 22, 2022

August 22, 2022

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குரூப்-1 தோ்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்ஸி குரூப்-1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 தோ்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஆக.22. இதற்கான முதல்நிலைத் தோ்வு அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும் வகையில் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் செப்.2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தோ்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Total Pageviews

Search This Blog