Breaking

Showing posts with label school education officials. Show all posts
Showing posts with label school education officials. Show all posts

Saturday, April 01, 2023

April 01, 2023

மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு.. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு செக் வைக்க போகும் சைபர் கிரைம் போலீசார்



மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு.. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு செக் வைக்க போகும் சைபர் கிரைம் போலீசார்

12ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

பள்ளிகல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டம் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தும் சைபர் கிரைம்

மாணவர்கள் சுய விவரம் திருட்டு தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பள்ளிக் கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் புண்ணியகோடியிடம் ஏற்கனவே விசாரணை

விவரங்கள் திருட்டு தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்

Wednesday, April 27, 2022

April 27, 2022

பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் சொத்துகள் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு!

பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் சொத்துகள்

பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் கிளை உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், பள்ளிகல்வித்துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்க்க வேண்டும். அதில் மாறுதல் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதுடன், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, போதுமான அளவில் போலீசாரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog