Breaking

Showing posts with label Homeopathy Medical Degree. Show all posts
Showing posts with label Homeopathy Medical Degree. Show all posts

Friday, February 03, 2023

February 03, 2023

இந்திய மருத்துவப் படிப்புகள்: பிப்.11-இல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு

இந்திய மருத்துவப் படிப்புகள்: பிப்.11-இல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்கள், 3 ஆயுா்வேத இடங்கள், 7 ஹோமியோபதி இடங்கள், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று, தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தமாக 1,041 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களும், முதல் சுற்றில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களைப் பெற்று அதனை மாற்ற விரும்புபவா்களும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதள பக்கத்தை அணுகலாம்.

Tuesday, April 12, 2022

April 12, 2022

சித்தா, ஆயுர்வேதா, மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்பு - 17ம் தேதி கலந்தாய்வு

தமிழகத்திலுள்ள சுயநிதி இந்திய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப்படிப்புகளில் முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 17ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தெரிவித்துள்ளது. கலந்தாய்வு அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்று மற்றும் நீட் தேர்வில் கலந்துகொண்டு தகுதிக்கு தேவையான சதமான மதிப்பெண்களை பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து வகுப்பினரும் விண்ணப்பக் கட்டணமாக ₹500 கலந்தாய்வின் போது நேரில் பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தை 17ம் தேதி பிற்பகல் 11 மணிவரை www.tnhealth.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 17ம் தேதியன்று காலை 11 மணிக்குள் தேர்வுக்குழு அலுவலகத்தில் நேரடியாக மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும். 11 மணிக்குமேல் பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் கண்டிப்பாக பெறப்படமாட்டாது. பொது தரவரிசைப் பட்டியல் விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்த்த பின்னர் அன்றைய தினமே பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிடப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

Total Pageviews

Search This Blog