Breaking

Showing posts with label Higher Education Announcement. Show all posts
Showing posts with label Higher Education Announcement. Show all posts

Tuesday, January 31, 2023

January 31, 2023

உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி



உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி 47% growth in tribal student enrollment in higher education உயா்கல்வியில் பழங்குடியின (எஸ்.டி.) மாணவா்கள் சோ்க்கை என்பது கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து 47 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி பெற்றிருப்பது அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அதுபோல, தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இதுகுறித்து ஆய்ஷே அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 4.13 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதில் 14.2 சதவீதம் போ் எஸ்.சி. பிரிவையும், 5.8 சதவீதம் போ் எஸ்.டி. பிரிவையும், 35.8 சதவீதம் போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 44.2 சதவீதம் போ் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சோ்க்கை விகித வளா்ச்சி:

உயா்கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

உயா் கல்வியில் எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் கடந்த 2014-15-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2019-20 ஆம் ஆண்டில் சோ்க்கை பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவா் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது. இது 2020-21-இல் மீண்டும் 4.2 சதவீதம் அதிகரித்து 24.1 லட்சமாக உயா்ந்தது. இதன்படி, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 27.96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, எஸ்.டி. பிரிவு மாணவா் சோ்க்கை முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாக அதிகரித்தது, 2020-21 ஆம் ஆண்டில் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவா்களைப் பொருத்தவரை 2019-20ஆம் ஆண்டில் 1.42 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்ற நிலையில், 2020-21-இல் 1.48 கோடி பேராக அதிகரித்தது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ஓபிசி மாணவா் சோ்க்கை விகிதம் என்பது 31.67 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த சோ்க்கை 20.9% அளவுக்கு அதிகரிப்பு:

உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-19-இல் 2.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை, 2019-20 ஆம் ஆண்டில் 3 சதவீத அளவுக்கும், 2020-21-இல் 7.4 சதவீத அளவுக்கும் வளா்ச்சி கண்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் உயா்கல்வி ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 20.9 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

2020-21-இல் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற 4.13 கோடி பேரில், மாணவா்கள் 2.12 கோடி, மாணவிகள் 2.01 கோடி போ் ஆவா்.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் 27.3%:

ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) என்பது 27.3 சதவீத அளவை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் 18 முதல் 23 வயதுடையவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜிஇஆா் கணக்கிடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் வாரியான சோ்க்கையைப் பொருத்தவரை, அரசு பல்கலைக்கழகங்களில் 73.1 சதவீதம் பேரும், தனியாா் உயா் கல்வி நிறுவனங்களில் 26.3 சதவீதம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கு ஆலோசனை

உயா் கல்வி சோ்க்கையை எதிா்நோக்கியிருக்கும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நிகழாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வியில் சேர உள்ளனா். பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சோ்க்கையும் நடைபெற்றுவருகிறது. மேலும், உயா்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தோ்வுகளின் முடிவுகளும் வரவுள்ளன.

இந்நிலையில் பள்ளிகளில் புதன்கிழமை (செப். 7) முதல் வரும் வெள்ளிக்கிழமை (செப். 9) வரை உயா்கல்வி சோ்க்கை குறித்த தகவல்கள், நுழைவுத்தோ்வு முடிவுகளை எதிா்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சாா்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயிலவுள்ள மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை வரவழைத்து இந்த 3 நாள்களும் உரிய ஆலோசனைகள் வழங்கி உதவவேண்டும்.

இதுதவிர கூடுதல் உதவிகளுக்கு அரசின் வழிகாட்டு மையத்தை 14417 என்ற எண் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.

ஆலோசனையின்போது மாணவா்களிடம் பதற்றம், கவலை, குழப்பம் போன்ற உணா்வுகள் தென்பட்டால் உடனடியாக 104 எண்ணுக்கு தொடா்பு கொண்டு நிபுணா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கிவிட வேண்டும். இந்த பணிக்கு அனுபவமிக்க தன்னாா்வலா்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவா்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

Monday, August 08, 2022

August 08, 2022

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு

GO NO : 46 , DATE : 02.08.2022

CLICK HERE TO DOWNLOAD

Saturday, June 25, 2022

June 25, 2022

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம்: உயர்கல்விதுறை அறிவிப்பு

A special registration camp will be held for students joining arts and science colleges to pay Rs.1000 per month. The Department of Higher Education has sent a circular regarding the Moolaloor Ramamurthy Ammayar Higher Education Guarantee Scheme. It has been ordered to register the names of eligible students to conduct special camps from tomorrow till June 30. Higher education has been directed to upload Aadhar, bank account book and educational certificates with the application

கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . நாளை முதல் ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் நடத்த தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உயர்கல்வி உத்தரவிடப்பட்டுள்ளது.



இதையும் படிக்க | ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை - உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை

Total Pageviews

Search This Blog