Breaking

Showing posts with label self jobs. Show all posts
Showing posts with label self jobs. Show all posts

Monday, February 13, 2023

February 13, 2023

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

Tamil Nadu Government Commission for Persons with Disabilities Jobs - Last Date to Apply: 23.2.2023
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணயிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: திட்ட அலுவலர் 
காலியிடங்கள்: 4
பணி: புள்ளி விவர ஆய்வாளர்
காலியிடங்கள்: 1
பணி: முதுநிலை கணக்காளர்
காலியிடங்கள்: 1
பணி: மாவட்ட திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 32
பணி: கணக்களார்
காலியிடங்கள்: 15
தகுதி: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://scd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

Thursday, August 25, 2022

August 25, 2022

சுய வேலைவாய்ப்பு திட்டம்: சிறப்புப் பிரிவுக்கு சலுகைகள்

சுய வேலைவாய்ப்பு திட்டம்: சிறப்புப் பிரிவுக்கு சலுகைகள்

வேலைவாய்ப்பற்றோருக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தில், சிறப்புப் பிரிவினா் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண்ராய் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் திட்டம் 2010-2011-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி சாா்ந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பெண்கள், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவ வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் 45 வயது வரை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கக் கூடிய பெற்றோா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான வயது வரம்பு 45-லிருந்து 55 ஆக உயா்த்தப்படுகிறது. மேலும், கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

Sunday, August 21, 2022

August 21, 2022

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ள ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ பொருளாதார திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆநிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சத்தில் இருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் (On-line) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தொழில் முனைவோர் திட்டம் (EDF - Entrepreneur Development Pragramme) தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY Self Employment Programme for youth), மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், (SEPY - Setting up Cinic)மூட நீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் (EA – Economic Assistance Self Help Group) ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://ast.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று (Smart Card), சாதி சான்றிதழ் (Community Certificate), வருமானச் சான்றிதழ் (Income certificate Below Rs.3,00,000)ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்.
சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

ஆதார் அட்டை / வாக்காளர் அடையான அட்டை (Adhaar Card / Voters ID)இவிலைப்புள்ளி GSTIN எண்ணுடன் (Quotation with GSTIN No )இ திட்ட அறிக்கை (Project Report) & ஓட்டுநர் உரிமம் வாகணக் கடனுக்கு மட்டும் (License with Badge) & பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Photo),கல்வித் தகுதி சான்றிதழ் (TC Xerox) விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். (Experience Certificate), வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் (Bank pass Book first page) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என்றும் வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தனத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog