Breaking

Showing posts with label தற்காலிக ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label தற்காலிக ஆசிரியர்கள். Show all posts

Saturday, July 30, 2022

July 30, 2022

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க மாநகராட்சி ஒப்புதல் - சிபிஎம் எதிர்ப்பு

தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், ஆயாக்களை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. kaninikkalvi.blogspot.com இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஜெயராமன், "மாநகராட்சிப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக் கூடும். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியான இருக்கும் இடத்திற்கு நியமிக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று தான் ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்றுதான் திமுக கூட்டணிக்கு வாக்களித்து தேர்வு செய்தார்கள். தற்போதும் இதுபோன்று நடைபெறுவது நல்லது அல்ல. அதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே சம்பளம் பெற்று வருகிறார்கள். kaninikkalvi.blogspot.com அவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, July 18, 2022

July 18, 2022

ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி???

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது ....

நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே ?

தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்த பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே ?

தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் நிரந்தர பணி கோருவார்களே ?

ஆசிரியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற கிளையில் வேறுபட்ட நிலை உள்ளது

வேறுபட்ட நிலை இருப்பதால் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முடிவெடுக்க வழக்கு விசாரணையினை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

Thursday, July 07, 2022

July 07, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கு ஒத்திவைப்பு

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, July 05, 2022

July 05, 2022

பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 16 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 24 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகம், வட சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், வில்லிவாக்கம், சென்னை-49. deonortha2section என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

மாவட்ட கல்வி அலுவலகம், தென் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8. deosouth08@gmail. com என்ற மின்னஞ்சலிலும், மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை , சென்னை-15க்கு deocnc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், கிழக்கு சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-05க்கு deocne@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
July 05, 2022

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் - அலைமோதும் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளான நேற்று ஏராளமாேனார் மாவட்ட கல்வி அலுவலகங்களில் திரண்டனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ேடார் விண்ணபித்தால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் நபருக்கு முன்னுரிமை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் 678, பட்டதாரி ஆசிரியர்கள் 811, முதுநிலை ஆசிரியர்கள் 259 உள்பட மொத்தம் 1,748 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு நேற்று தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில், நூற்றுக்கணக்கானோர் நேற்று விண்ணப்பங்களை அளித்தனர். இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தும், பெரும்பாலானோர் நேரில் விண்ணப்பங்களை அளித்தனர். விண்ணப்பங்களை அளிக்க நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றும், நாளையும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவோருக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ₹7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ₹10 ஆயிரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ₹12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் நிரந்தர பணி வழங்கும்போது, முன்னுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில, தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

போளூர்: போளூர் கல்வி மாவட்டத்தில் 38 மேல்நிலைப் பள்ளிகளில் 55 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 33 உயர்நிலைப் பள்ளிகளில் 164 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 84 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 296 தொடக்கப் பள்ளிகளில் 141 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 363 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கணக்கோனார் குவிந்தனர். அனைவரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய கல்வி சான்றுகளுடன் மனு கொடுத்தனர்.

Total Pageviews

Search This Blog