TAMILNADU
February 02, 2022
Showing posts with label GOVT. Show all posts

Wednesday, February 02, 2022
Monday, January 31, 2022
TAMILNADU
January 31, 2022
தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

RBI Serverல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்னை சீராகும் என்று Treasury தகவல்கள் தெரிவிக்கின்றன!
RBI இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தடங்கல் காரணமாக இம் மாத ஊதியம் மாலைக்குள் அனைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
தமிழக முழுவதும் ஊதியம் இன்று தாமதமாகும்.
மாலை வரவு வைக்கப்படும்.

Sunday, January 30, 2022
MBBS
January 30, 2022
75 அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் சேலம் மாவட்டம் மீண்டும் முதலிடம்

சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவியர் 75 பேருக்கு மருத்துவம் படிக்க 'சீட்' கிடைத்துள்ளதால், தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக, தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.தொடர்ந்து இந்த ஒதுக்கீடில் சேரும் மாணவ - மாணவியருக்கான கல்விக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இதனால், அரசு பள்ளி மாணவ - மாணவியரிடையே நீட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் அதிகரித்தது.கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான ஒதுக்கீடில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் எம்.பி.பி.எஸ்., ஒருவர் பி.டி.எஸ்., என, 27 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
இதனால், தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்த மாவட்டத்தில் சேலம் முதலிடம் பிடித்தது.நடப்பு கல்வியாண்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர், 1,135 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், 148 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இரு நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சேர்க்கை நடந்தது. இதில், 66 பேர் எம்.பி.பி.எஸ்., 9 பேர் பி.டி.எஸ்., என, 75 பேருக்கு சீட் கிடைத்தது.ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 9 மாணவியர் எம்.பி.பி.எஸ்., மற்றும் இரண்டு மாணவியர் பி.டி.எஸ்., என ஒரே பள்ளியில், 11 பேருக்கு சேர்க்கை கிடைத்துள்ளது.இதன் மூலம், தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டமாக சேலம் இரண்டாவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

Saturday, January 29, 2022
Thursday, December 30, 2021
Thursday, December 16, 2021
SCHOOLS
December 16, 2021
அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதிக்க கோரி வழக்கு!
அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது குறித்து ஜன. 2-வது வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மைதானத்தில் வேலி அமைத்து பராமரிக்க உத்தரவிட்டு வழக்கு ஜன.2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் மைதானத்தை பகுதிநேரமாக பயன்படுத்த அனுமதித்த உத்தரவை திரும்பப்பெற ஆணையிடப்பட்டுள்ளது.
Tuesday, November 23, 2021
TAMILNADU
November 23, 2021
யாருக்கு விவசாய கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
யாருக்கு விவசாய கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 ஏக்கர் வரையில் வைத்திருக்கும் விவசாயிகளுக்கே கடன் தள்ளுபடி என மாநில அரசு வரையறுத்தது சரியே என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக அரசின் கருத்துக்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய முக்கியத்துவம் கருதி முந்தைய உத்தரவையே தீர்ப்பாக வழங்குவதாக தெரிவித்தனர்.

Thursday, October 14, 2021
Wednesday, October 06, 2021
GOVT EMPLOYEE
October 06, 2021
தீபாவளி - 78 நாள் போனஸ் : மத்திய அரசு அறிவிப்பு!!
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்து இருந்தது.இந்தநிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.
அப்போது ரயில்வே துறையின் பரிந்துரையை ஏற்று ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்குவதற்கான செலவு ரூ 1984.73 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழில் இல்லாத தகுதியுடைய பணியாளர்களுக்கு போனஸை கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ 7000 ஆகும். ஒரு ரயில்வே பணியாளருக்கு 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ 17,951 வழங்கப்படும்.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 2020-201ம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர். அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெறுவர்,என்றார்.

Tuesday, October 05, 2021
Politicians
October 05, 2021
தமிழகத்தில் அரசு பணி தேடுவோர் கவனத்திற்கு – பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு வேலை:
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அரசு வேலை பெற போட்டித்தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சிலர் சிபாரிசுகள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்கள் பணம் கையாடல் செய்கின்றனர். இதனை நம்பி ஏராளமானோர் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாறுகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மீண்டும் வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில பண மோசடி செய்யும் கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும் நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Monday, October 04, 2021
Friday, September 24, 2021
GOVT
September 24, 2021
ஆன்ட்ராய்டு அலைபேசிகளை குறி வைக்கும் புது வைரஸ் (டிரிங்க் ) - மத்திய அரசு எச்சரிக்கை!
ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துபவர்கள் புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகலாம், என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.
டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி வங்கி விபரங்களை திருடுவதாகவும், குறிப்பாக 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பின் டவுன்லோடு ஆகும் ஆப், அலைபேசியின் எஸ்.எம்.எஸ்., கால் விபரங்களை கண்காணிக்க தொடங்கும். பின்னர் படிப்படியாக ஆதார் எண், டெபிட் கார்டு விபரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விபரங்கள் திருடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, September 23, 2021
GOVT
September 23, 2021
இந்தாண்டே NDA நுழைவு தேர்வை பெண்கள் எழுத அனுமதிக்க வேண்டும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவு
‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு முதல் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்,’ என்ற ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டே சேர்க்கை நடைபெற வேண்டும் என நேற்று அதிரடியாக உத்ரதவிட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து குஷ் கால்ரா என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒன்றிய அரசின் இந்த முடிவு, பாலின சமத்துவத்துக்கு எதிரானது.
பெண்களுக்கான சம உரிமையை இது மறுக்கிறது. தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்,’ என கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஒன்றிய அரசு 2 தினங்களுக்கு முன் தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரத்தில், இந்த நுழைவுத் தேர்வில் அடுத்தாண்டு முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அறிவிப்பு, அடுத்தாண்டு மே மாதம் வெளியிடப்படும்,’ என தெரிவித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு தான் பெண்களை சேர்க்க முடியும் என்ற ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் நிராகரிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வில் பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உறுதியை, ஏற்கனவே அவர்களுக்கு கொடுத்தாகி விட்டது. அதை திரும்பப் பெற முடியாது. இந்தாண்டு நுழைவுத் தேர்வு நவம்பரில் தான் நடைபெற உள்ளது. அதனால், பெண்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. அதனால், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்தாண்டே பெண்களை அனுமதிக்க வேண்டும். ,’ என தெரிவித்தனர்.

Wednesday, September 22, 2021
PROTEST
September 22, 2021
அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
"நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி இன்று (செப்.22) உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தை 3 நாள்களுக்கு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்
தமிழகத்தில் செயல்படும் 10 பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் முதல் கட்டமாக 14 உறுப்புக் கல்லூரிகள் 2019 -ல் இருந்தும், இரண்டாவது கட்டமாக 27 கல்லூரிகள் 2020 டிசம்பர் முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பாட்டுக்கு வந்தன.
குறிப்பாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், பெரம்பலூர் என 10 கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
ஆனால், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு முந்தய நிர்வாகத்தின் பேரில் இருந்து வந்த பராமரிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகள் கவனம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதேபோல,வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, கடந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.
நிர்வாக மாற்றத்துக்குப் பின்னர் பராமரிப்பு உள்ளிட்ட செலவின தேவைகளுக்கான தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி தற்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்"

Friday, September 17, 2021
STUDENTS
September 17, 2021
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிா்த்து வழக்கு: அக்.21-ல் இறுதி விசாரணை
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் மீதான இறுதி விசாரணை அக்டோபா் 21 ஆம் தேதி தொடங்குமென சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தனியாா் பள்ளி மாணவா்களும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கியதுபோன்றே அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சாா்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கை, நீட் தோ்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்து பாா்த்து வாதிட வேண்டியுள்ளதால், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சுமாா் 300 அரசுப் பள்ளி மாணவா்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தோ்வால் ஒரு வித அழுத்தத்தை எதிா்கொள்ளும் மாணவா்களில் சில மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞரின் வாதத்திற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து இவ்வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Thursday, September 16, 2021
SCHOOLS
September 16, 2021
இன்ஜி., கவுன்சிலிங் பதிவுகளில் குளறுபடி; அரசு பள்ளி தரவரிசையில் சொதப்பல்
தமிழகத்தில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கிய நிலையில், பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ஆன்லைன் வாயிலாக கல்லுாரியை பதிவு செய்ய வசதியின்றி மாணவர்கள் திண்டாடினர்.
அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பட்டியலில், அரசு பள்ளி மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் நடக்கிறது. 1.39 லட்சம் பேர்இந்த ஆண்டில், 440 கல்லுாரிகளில், 1.51 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கு, 1.39 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு, 15 ஆயிரத்து 660 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும், அவர்களில், 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும் என்றும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் நாளில் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
கவுன்சிலிங்குக்கு தயாரான மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆன்லைன் முறையில், 'சாய்ஸ் பில்லிங்' என்ற விருப்ப பதிவு வசதி செயல்படவில்லை. தொலைபேசி எண் 'மக்கர்'
இதுகுறித்து, கவுன்சிலிங் இணையதளத்தில் வழங்கிய தொலைபேசி எண்ணில் அழைத்தால், 'இந்த எண் பதிவாகாத எண்' என, தகவல் வருகிறது. சில எண்கள், 'பிசி'யாக உள்ளது என, தானியங்கி தகவல் வருகிறது.இதனால், செயல்படாத எண் கொடுத்து விட்டனர்; செயல்படும் எண்களின் தொலைபேசியையும் கீழே எடுத்து வைத்துவிட்டனரோ என மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு சென்றால், 'உங்களுக்கு எஸ்.எம்.எஸ்., வரும்; இ- - மெயில் வரும்' என்றுகூறி, மாணவர்களை திருப்பி அனுப்பினர்.இதுமட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலில், பல அரசு பள்ளி மாணவர்கள் பலரின் பெயர்கள் இடம் பெறாததால், செய்வதறியாமல் திணறினர். தங்களுக்கு பள்ளியிலும் வழிகாட்டவில்லை; உயர் கல்வி துறையும் வழிகாட்டவில்லை என, மாணவர்கள் விரக்தியில் புலம்பினர். அவர்களுக்கு சில அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் ஆறுதலாக இருந்து, கவுன்சிலிங் மையத்தை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
உதவி மையம் கைவிரிப்பு
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கவுன்சிலிங் உதவி மையத்திலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிலர் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கே நேரில் சென்றனர். அவர்களுக்கு மட்டும், 'மேனுவல்' முறையில் தரவரிசையை மாற்றி, அரசு பள்ளி மாணவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்கிலும் நேற்று மாணவர்கள் தவித்தனர். ஆன்லைன் முறையில் வாய்ப்பு வழங்கவில்லை. பின், மாணவர்களை போனில் தொடர்பு கொண்டு, 'வீடியோ' வாயிலாக வரவழைத்தும், அருகில் வசிப்பவர்களை நேரில் கவுன்சிலிங் மையத்துக்கு வரவழைத்தும், எந்த கல்லுாரி வேண்டும் என்று கேட்டு, மேனுவல் ஆக பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் அச்சம்
முதற்கட்டமாக, 15 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் நடத்துவதிலேயே நேற்று இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் பங்கேற்கும் பொது கவுன்சிலிங்கில், எவ்வளவு குழப்பங்கள் நடக்குமோ; சரியாக இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியுமா என்றும் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீட் குறித்து மாத கணக்கில் பேசி கொண்டிருக்கும் தமிழக அரசு, பல லட்சம் பேர் படிக்கும் இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையை முறையாக நடத்துவதில் கோட்டை விட்டு விட்டதாக, மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளறுபடியாக துவங்கிய கவுன்சிலிங்கை ரத்து செய்து விட்டு, முறையாக திட்டமிட்டு, வேறு தேதிகளில் முறைப்படி புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வழிகாட்டுதலின்றி கவுன்சிலிங்
ஆன்லைன் கவுன்சிலிங்கை பொறுத்தவரை, ஐ.ஐ.டி.,யை போல 'சாய்ஸ் பில்லிங்' முறை, மூன்று ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலையால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையில், தர வரிசை வெளியான பின், கவுன்சிலிங்கை துவங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். அதற்கு முன் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டல் வழங்கப்படும். சாய்ஸ் பில்லிங் என்ற விருப்ப பாடப் பிரிவு, விருப்ப கல்லுாரி பதிவு செய்யும் தேதிகள் அறிவிக்கப்படும். எந்த 'கட் ஆப்' மாணவர்கள் எப்போது விருப்ப பதிவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டு முறைகள் வெளியாகும். சாய்ஸ் பில்லிங் குறித்த வீடியோக்கள் வெளியிடப்படும். இந்த ஆண்டு இந்த வழிமுறைகளில் ஒன்றை கூட, உயர்கல்வி துறை பின்பற்றவில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல்?
வழக்கமாக கவுன்சிலிங் விபரங்கள் குறித்து, அண்ணா பல்கலைக்கு பத்திரிகையாளர்களை அழைத்து, அமைச்சர், செயலர் ஆகியோர் விபரமாக பேட்டி அளிப்பர். அது இந்த முறை தவிர்க்கப்பட்டது. தர வரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங்குக்கு மூன்று முறை தேதி மாற்றப்பட்டது. முதலில் செப்., 4ல் தர வரிசை வெளியாகும் என்றனர். செப்., 1ல், அண்ணா பல்கலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் அளித்த பேட்டியில், 'திட்டமிட்ட தேதியில் தர வரிசை பட்டியல் வெளியாகும்' என்றார்.பின், 30 வினாடிகளில் தேதியை மாற்றி, 11ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியாகும் என, அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
அன்று மாலையிலேயே, இன்ஜினியரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 14ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியாகும் என்றும், 17ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 12ம் தேதி கவுன்சிலிங் இணையதளத்தில், திடீரென தரவரிசை பட்டியல் வெளியானது; பின், நீக்கப்பட்டது.இந்நிலையில், 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக தரவரிசை பட்டியல் வெளியானது. அப்போது, கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டு, 15ம் தேதியான நேற்றே கவுன்சிலிங் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி திட்டமிடுவதிலும், தேதியை நிர்ணயிப்பதிலும் தொடர் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Wednesday, September 15, 2021
TAMILNADU
September 15, 2021
5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணை - தமிழ்நாடு அரசு வெளியீடு
Tuesday, September 14, 2021
GOVT
September 14, 2021
5ம் வகுப்பு தேர்வில் அரசு விளம்பரம்; சர்ச்சையில் சிக்கிய அரசு
சண்டிகர்-பஞ்சாபில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், அரசு திட்டமான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு விளம்பரம்
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடும் தேசிய தகுதி தேர்வு அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சி தேர்வு நேற்று துவங்கியது. இதில் பஞ்சாபி மொழி தேர்வில் அரசு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டு, 'இந்த விளம்பரம் எதைப் பற்றி பேசுகிறது' என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அடுத்து, 'அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை எப்போது முதல் வினியோகிக்கப்பட உள்ளது' என்ற கேள்வி இடம் பெற்றது.ஐந்தாம் வகுப்பு தேர்வில் அரசு திட்டங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது, பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
அனுமதி
ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் விக்ரம் தேவ் சிங் கூறுகையில், ''மாணவர்களின் தேர்வு வாயிலாக விளம்பரம் தேட முயற்சிக்கும் அரசின் நோக்கம் கண்டனத்துக்குரியது,'' என்றார்.அகாலிதள மூத்த தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான தல்ஜித் சிங் சீமா கூறியதாவது:கல்வியை கல்வியாகவே தொடர அனுமதியுங்கள்.இன்றைக்கு அரசு விளம்பரங்களை கேள்வித் தாளில் இடம்பெற செய்தவர்கள், நாளை அமைச்சர்களின் புகைப்படங்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்வர். இது முடிவே இல்லாமல் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 11, 2021
Universities
September 11, 2021
பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரலாறு! -
கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் படிப்பில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பதால் கேரள கல்வித்துறையில் மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாநில உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பல்கலைக்கழக பாடத்திட்டம் குறித்த அறிக்கையை கேட்டுள்ளார்.
இதனிடையே கேரள பல்கலை பாடத்திட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளம் மாணவர் சங்கம், காங்கிரஸின் மாணவர் பிரிவு மற்றும் முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டத்தின் நகல்களை வியாழக்கிழமை எரித்தனர்.