voter id part number change online
December 20, 2025
Showing posts with label voter ID LINK. Show all posts
Showing posts with label voter ID LINK. Show all posts
Saturday, December 20, 2025
Wednesday, November 05, 2025
Saturday, November 16, 2024
Monday, April 08, 2024
Wednesday, March 20, 2024
Tuesday, February 13, 2024
voter list
February 13, 2024
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link Check if your name is in the voter list - Direct Checking Link
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்தியா. அந்த ஜனநாயகத்தை உறுதி செய்பவை தேர்தல்களும், அவற்றில் மக்களின் பங்களிப்புமே.
எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். சிலசமயம் வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் விடுபட வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் உங்கள் பெயர், தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. இதைத் தேர்தல் ஆணையம் வழங்கும் பல்வேறு வசதிகளின் மூலமாக மிக எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய
தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://electoralsearch.eci.gov.in/) எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் (Electoral Search). அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும்.
1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.
2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
EPIC எண் இல்லையெனில்,
NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும். EPIC எண் இருந்தால்,
NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.
இதேபோல புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க, புதிய வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள, ஏற்கெனவே உள்ள தகவல்களில் திருத்தம் மேற்கொள்ள, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்க, இவற்றிற்கான படிவங்களை தரவிறக்க எனப் பல்வேறு வசதிகளும் இணையத்திலேயே கிடைகின்றன.
இதுதவிர மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கும் கட்சிகளைத் தடுக்க CVigil என்னும் ஆப் ஒன்றை வெளியிட்டு நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். உங்களுடைய பகுதியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகளை இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.
Click Here To Check Your Name In Voters List/
Wednesday, March 22, 2023
voter ID LINK
March 22, 2023
ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு
ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு
ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

Thursday, November 03, 2022
votes Form's
November 03, 2022
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க
17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, நவ. 3: தமிழகத்தில் 17 வயதுடைய இளை ஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி. இவர்களில், 55.37 சதவீதம், அதாவது 3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். கள் ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர். மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீ தத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர்.
வரும் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்று முதல் வாக்காளர் பட்டி யல் சுருக்க திருத்தப் பணி துவங்கும். இம்முறை 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப் பம் அளிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 02, 2022
votes Form's
September 02, 2022
வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது