Breaking

Showing posts with label entrance examinations. Show all posts
Showing posts with label entrance examinations. Show all posts

Friday, August 19, 2022

August 19, 2022

Information Bulletin regarding ICAR Entrance Exams for admission to PG and Ph.D programmes for the academic year 2022-23

PUBLIC NOTICE

16.08.2022

Re: Corrigendum to the Information Bulletin regarding ICAR Entrance Exams for admission to PG and Ph.D programmes for the academic year 2022-23

NTA will be conducting the ICAR Entrance exams for admission to UG, PG and Ph.D programmes for the academic year 2022-23.

Registration for the above mentioned exams is in progress at https://icar.nta.nic.in

ICAR has issued a Public Notice No F. No. 1(6)/2018-Exam, Cell Part (2) dated 08.08.2022 which is hosted on the ICAR website at the link: https://education.icar.gov.in/Files/Guidelines/FinalPublicNotice8_8_22.pdf Candidates are advised to go through the Public Notice carefully.

The said Public Notice inter alia states that admission to PG & Ph.D programmes in the disciplines of Environmental Science and Water Science and Technology at ICAR-IARI, Pusa, New Delhi through ICAR’s AIEEA-PG and AICE-JRF/SRF(Ph.D) will be continued.

Accordingly, the Information Bulletin in respect of ICAR (PG) stands amended as follows: Clause 3.3 Eligibility Qualifications for admission to different subjects:

CLICK HERE TO DOWNLOAD

Accordingly these changes in table 3 above are applicable and be read as and at Code Nos. (31,32,33,71 and 72) in the Annexure III of the Information Bulletin AICE(JRF/SRF)(Ph.D) 2022.

Candidates desirous of applying for AIEEA (PG) and AICE(JRF/SRF)-Ph.D are advised to take note of the above and act accordingly.

Candidates are advised to be in touch with the NTA website for the latest updates regarding the exam.

For any clarifications, candidates can write to NTA at icar@nta.ac.in or call NTA Help Desk at 011 4075 9000, 011 6922 7700

Monday, August 08, 2022

August 08, 2022

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன?

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன்
கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்று தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் கிராமப்புற மாணவர்கள், விளிம்புநிலை மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Wednesday, August 03, 2022

August 03, 2022

செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்

செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள், செப்., 1 - 11 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. 'மத்திய பல்கலைகள் மட்டுமின்றி விருப்பமுள்ள மாநிலங்கள் மற்றும் தனியார் பல்கலைகளும், இந்த க்யூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நடப்பாண்டு இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு ஜூலை 15 - 20 வரை நடந்து முடிந்தது. மீதமுள்ள மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு ஆக., 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான, தேர்வு அனுமதி சீட்டுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுகள் செப்., 1 - 11 வரை நடக்க இருப்பதாக, பல்கலை மானிய குழுவின் தலைவர் மமிடலா ஜெகதீஷ் குமார் நேற்று அறிவித்தார்.உள்நாட்டில் உள்ள 500 நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் உள்ள 13 நகரங்களில் இருந்தும், மொத்தம் 3.57 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

Wednesday, March 30, 2022

March 30, 2022

பல்கலை நுழைவுத் தேர்வு இரண்டு முறை நடத்த திட்டம்

'இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'கியூட்' நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது,'' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம்

நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர, 'கியூட்' எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன.அடுத்த கல்வியாண்டு முதல், இரண்டு முறை கியூட் நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் மகனை சேர்த்த எஸ்.பி. - சமூக வலைதளங்களில் பாராட்டு மழை

பிளஸ் 2 பாட திட்டத்தின்படியே, இந்த நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. அதனால், மாநில கல்வி வாரிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எழுதுவது கடினமாக இருக்காது. மேலும், இதற்காக, 'கோச்சிங்'எனப்படும் கூடுதல் பயிற்சியும் தேவையில்லை.பல முன்னணி கல்வி நிறுவனங்கள், 100 சதவீத, 'கட் ஆப்' நிர்ணயிக்கின்றன. பிளஸ் 2 தேர்வில், 98 சதவீதம் பெற்றவர்கள் கூட இந்தக் கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இனி அது தடுக்கப்படும். வாய்ப்பு

மேலும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள கல்லுாரியிலும் சேருவதற்கான வாய்ப்பு இந்த நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும்.புதிய தேசிய கல்விக் கொள்கையிலும், இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த தேர்வு முறை நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog