Breaking

Showing posts with label Vacancies. Show all posts
Showing posts with label Vacancies. Show all posts

Thursday, February 09, 2023

February 09, 2023

சுகாதாரத் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!



சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு! Vacancies in Health Sector: Applications accepted by Feb 23!

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்

காலியிடங்கள்: 335

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை. விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023

மேலும் விவரங்கள் அறிய
CLICK HERE TO DOWNLOAD

Thursday, September 15, 2022

September 15, 2022

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது.

இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்பப்படும்.

தகுதியாளர்கள் இன்று முதல் அக்.,14 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அக்.,19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜன.29 ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும்.

Saturday, September 10, 2022

September 10, 2022

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள் - Notification PDF

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!


SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SBI Notification - Download here...

Sunday, August 21, 2022

August 21, 2022

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Saturday, August 20, 2022

August 20, 2022

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணி - கடைசி தேதி: 30.08.2022

புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer (Fire Safety)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,400

தகுதி: பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Manager (Security)

காலியிடங்கள்: 80

சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1003, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.59. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No.4, Sector 10, Dwarka, New Delhi - 110 075.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, March 19, 2022

March 19, 2022

BT ASST live vacancies

பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் தற்போதுள்ள காலிப்பணியிட விவரம் :

BT ASST live vacancies - Download here

Tuesday, March 15, 2022

Total Pageviews

Search This Blog