Breaking

Showing posts with label அமைச்சர் அன்பில் மகேஷ். Show all posts
Showing posts with label அமைச்சர் அன்பில் மகேஷ். Show all posts

Friday, September 09, 2022

September 09, 2022

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவுரை..!

Constituency MLA and School Education Minister Anbil Mahesh met Collector Pradeep Kumar regarding the necessary projects for Trichy and Tiruverumpur Assembly Constituency.

He later gave an interview to reporters. Then he said, “You are saying that the pass rate in NEET is decreasing.

Even though the legal battle is going on on one side to not take the NEET exam, hi-tech training is being given to the students on the basis that they should prepare the students until the NEET exam. Psychological counseling is also provided to them.

A higher education guidance camp is set up in every school. Mentally challenged students can take counseling there.

Apart from that helpline numbers are also provided to the students. Many students continue to talk about it.

Under no circumstances should students lose confidence. Don't engage in suicidal work.

So you are not going to achieve anything. On the contrary, the truth is that you are giving parents and this society anxiety.

All the parties approved the resolution to cancel the NEET exam and we have taken it to the President today.

The Chief Minister of Tamil Nadu has also requested Home Minister Amit Shah who recently came to Kerala. We have been insisting on it in the Parliament as well. We are confident that we will definitely be exempted from the NEET exam,” he said.
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் ஹெல்ப் லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம்.

அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக, பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கிறோம்.

சமீபத்தில் கேரளா வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.

Thursday, August 04, 2022

August 04, 2022

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள்.

இதனை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை ஆச்சர்யபட வைத்தார். மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்தார். இஸ்ரோவின் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 'ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்' தொழில்நுட்பத்துடன் 'வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்' ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வேறொரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நிலையில், இச்செய்தியினை அறிந்து அப்பள்ளிக்கு திடீரென சென்றார்.

அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7'ம் தேதி ஸ்ரீகரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாக உறுதியளித்தார்.

Saturday, July 30, 2022

July 30, 2022

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:



மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதலவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே வால்பாறை, ஊட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள புளியங்கடை, செங்காடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன.



பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகளில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ரூ.1300 கோடியில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையின்றி மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. அதற்கு கணக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும். 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி பிரச்னையில் மாணவ-மாணவியருக்காக இப்போதைக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுக்கும் பணி கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 81 சதவீத மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். எங்களுடைய கவனம் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது உள்ளது. விரைவில் தனியார் கல்லூரியில் இந்த மாணவர்களுக்காக நேரடியாக பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் இதனை கவனிக்க தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.



உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை ஒவ்வொரு வட்டாரங்களிலும் 2 மருத்துவர்கள் கவனிக்க உள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. kaninikkalvi.blogspot.com இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



காலை சிற்றுண்டி திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கபட்டுள்ளார். காலை 7.30 மணிக்குள் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கிடைக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அதற்கான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் எப்போது தொடங்கும் என்பதை முதல்வர் அறிவிப்பார்.



வார விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கான 2 நாள்களை அவர்கள் அனுபவிக்க விட வேண்டும். தனியார் பள்ளிகள் அவர்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தி அழுத்தத்தைத் தரக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

தசைக்குறைபாடுள்ள மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி ஏதாவது ஒரு வகையில் மாணவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது மிகப்பெரிய முறைகேடு. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழகம் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான வகுப்பறைகள் கூடுதலாக உருவாக்கப்படும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். kaninikkalvi.blogspot.com 9 முதல் 12-ம் வகுப்புகளில் 9 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளனர். உள்கட்டமைப்பு, போதுமான ஆசிரியர் நியமனம் என்பது அரசின் கடமையாகும். 9,494 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டு இருந்தோம். கூடுதல் மாணவர் சேர்க்கையால் தற்போது 10,300-க்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.



மடிக்கணினி கட்டாயம் வழங்கப்படும். கரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததால் கொடுக்க முடியவில்லை. 11 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி கொடுக்க வேண்டியுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Friday, July 29, 2022

July 29, 2022

கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தபடும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கனியாமூர் பள்ளியில் 9,10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தபடும் என அமைச்சர் தெரிவித்துளளார். மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி... பள்ளி மாணவர்களுக்கு பேட்ரி டெஸ்ட் திட்டம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

Anbil Mahesh Poyyamozhi : மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் திருப்பூரில் தெரிவித்தார்

6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர பேட்ரி டெஸ்ட் என்ற திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னெம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவதாக திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும், அதற்காக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்று கூறிய அமைச்சர், விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல்ரீதியாகம் மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைகிறோம். இதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் அதில் இருப்பதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ், பின்னர் பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார்.

கனியாமூர் நிகழ்விற்கு பிறகு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளகுறிச்சியில் நடந்துள்ளது. குழந்தைகள் முழுமையாக தன்னெம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும்.

இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

Monday, July 25, 2022

July 25, 2022

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் - அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் - அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Friday, July 22, 2022

July 22, 2022

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை (2022 2024) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29.07.2022

மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Total Pageviews

Search This Blog