Breaking

Showing posts with label government primary school. Show all posts
Showing posts with label government primary school. Show all posts

Tuesday, July 07, 2026

Friday, February 14, 2025

Monday, April 01, 2024

Wednesday, January 17, 2024

January 17, 2024

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்



தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Monday, July 11, 2022

July 11, 2022

அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகம், சீருடை தீயில் நாசம்

மணல்மேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சீருடைகள், புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.மாணவ - மாணவியருக்கு வழங்குவதற்கான சீருடைகள், புத்தகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பகல், 2:00 மணிக்கு சீருடைகள், புத்தகங்கள் இருந்த கட்டடத்தில் தீ பற்றியதில், அதில் வைத்திருந்த அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன.மணல்மேல்குடி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மணல்மேல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.10.7.22: புதுக்கோட்டை: மீனாட்சிசுந்தரம்: 9842653439 (படம் உண்டு)

Total Pageviews

Search This Blog