Breaking

Showing posts with label JACTTO - GEO. Show all posts
Showing posts with label JACTTO - GEO. Show all posts

Thursday, December 18, 2025

Thursday, January 30, 2025

Friday, December 01, 2023

December 01, 2023

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

ஜாக்டோ ஜியோ சார்பில் டிச.9ல் சாலை மறியல்

சிவகங்கையில் டிச.9ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரன், நாகராஜன், ராம்குமார் தலைமை வகித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், குமார் மாநில முடிவுகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் 2003 ஏப்.,க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும். இடைநிலை, உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாட்டு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர், மேல்நிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும்.

சிறப்பு கால முறை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 9ல் சிவகங்கை அரண்மனை வாசல் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

டிச., 1 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிரசார கூட்டங்களை நடத்துவது என தீர்மானித்தனர

Monday, November 20, 2023

November 20, 2023

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்ட செய்தி

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் காணொளி வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக 25.11.2023 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் நடைபெற இருந்த மாபெரும் மறியல் போராட்டத்தை 9.12. 2023 சனிக்கிழமைக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் எப் பணியை அரசு வழங்கினாலும் புறந்தள்ளிவிட்டு பேரெழுச்சியோடு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறக்கூடிய மாபெரும் மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோவில் இணைந்திருக்கின்ற அனைத்து சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறையை நிரப்பி கோரிக்கையை வென்றெடுப்பது என இன்றைய கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது.

ஆகவே திட்டமிட்டபடி 9.12.2023 சனிக்கிழமை அன்று மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, November 01, 2023

November 01, 2023

EMIS பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

EMIS will not carry out uploading from today: Federation of Teachers Notice - EMIS பதிவேற்ற பணியை இன்று முதல் மேற்கொள்வதில்லை: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது.

எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்,) கடந்த அக்.13-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 30-ல் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையேற்று டிட்டோ ஜாக் நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை:

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியின்படி எந்த அறிவிப்பையும் தொடக்கக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதுகுறித்து டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வித்துறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோரிக்கைகளை கல்வித்துறை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதேபோல, ஆசிரியர்கள் நவ.1 முதல் (இன்று) எமிஸ் பதிவு பணிகளை மேற்கொள்ள தேவையில்லை என்று பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்தார்.அதன்படி, வருகைப்பதிவு தவிர மற்ற எமிஸ் பணிகளில் இருந்து இன்றுமுதல் ஆசிரியர்கள் தங்களை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளிகளின் முக்கிய செயல்பாடுகள் எமிஸ் தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் விளக்கம்:

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்கூறும்போது, 'ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எமிஸ் வலைதள பணிகளை மேற்கொள்ள 9 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது செயல்பாட்டுக்கு வந்த பின் வருகைப் பதிவை மட்டும் ஆசிரியர்கள் பதிவேற்றினால்போதும்' என்றனர்.

Friday, April 07, 2023

April 07, 2023

கோட்டை முற்றுகை | ஜாக்டோ- ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு குழு அமைப்பு.

கோட்டை முற்றுகை | ஜாக்டோ- ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு குழு அமைப்பு.

ஜாக்டோ- ஜியோ கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நமது கோரிக்கைகள் முறையீடுகள் சார்ந்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு நாளை (08.04.23)காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வருமாறு மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Thursday, February 16, 2023

February 16, 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - நாமக்கல் மாவட்டம்

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) - “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - நாமக்கல் மாவட்டம் - JACTTO - GEO “Restoration of Livelihood Rights” District Struggle Preparatory Conference - Namakkal District

1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது ஆறு மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது.

ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லுாரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும் . மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் . சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள் , சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் . உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக வேண்டும் . அனைத்து பள்ளிகளிலும் , கல்லுாரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.
February 16, 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம்

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) - “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - திருச்சிராப்பள்ளி மாவட்டம்

Total Pageviews

Search This Blog