Breaking

Showing posts with label Anna University. Show all posts
Showing posts with label Anna University. Show all posts

Saturday, August 24, 2024

Wednesday, January 10, 2024

January 10, 2024

COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS (CEETA-PG-2024) - STEPS FOR ONLINE REGISTRATION - PDF

COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS (CEETA-PG-2024) - STEPS FOR ONLINE REGISTRATION - PDF

COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS

(CEETA-PG-2024) - FOR M.E./M.Tech./M.Arch./M.Plan. DEGREE PROGRAMMES

Applications are invited for Common Engineering Entrance Test and Admission (CEETA-PG - 2024) to be conducted by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu from the candidates who seek admission to M.E./M.Tech./M.Arch./M.Plan. Degree Programmes for the academic year 2024-2025 offered at University Departments, Constituent Colleges of Anna University, Annamalai University, Government and Government Aided Engineering Colleges only.

Limited number of monthly Scholarships offered by Government of Tamil Nadu are available to the students as per merit and following the reservation norms to pursue the higher studies.Technical Institutions funded by Central Government affiliated to Anna University may also join in this admission process. Self-Financing Engineering Colleges may also use CEETA-PG score for their admission process.

CEETA - PG EXAM DATE M.E./M.TECH./M.ARCH./M.PLAN: 10-03-2024 (Sunday) [10.00 AM To 12.00 NOON]

CLICK HERE TO DOWNLOAD STEPS FOR ONLINE REGISTRATION PDF
January 10, 2024

MBA, MTech படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள்

What is the entrance exam for MTech in Tamil Nadu?

Tamil Nadu MTech Admission is done on the basis of a state-level entrance exam. Candidates can either qualify for the GATE exam or qualify for the CEETA PG exam. Tamil Nadu MTech Admission is conducted by Anna University and is done based on the CEETA PG 2023.

Which entrance exam is best for MBA in Tamil Nadu?

TANCET – Tamil Nadu Common Entrance Test (TANCET) is a state-level exam administered by Anna University for admission to MBA programmes in Tamil Nadu

Who is eligible for TANCET exam for MTech?

TANCET 2024 MCA Eligibility Criteria

Candidates must have obtained a minimum aggregate of 50 per cent in the qualifying exam (45 per cent for reserved category candidates). Candidates are eligible if they have completed their education in any of the following patterns: 10 + 2 + 3 / 4 / 5 years pattern

Is TANCET compulsory for MBA?

The TANCET eligibility criteria 2024 is also essential for admission to MBA, MCA, and ME/MTech/MArch/MPlan programs. Candidates not satisfying these criteria may be disqualified from the counselling and admission process.

Can I join MTech without GATE?

In order to get direct admission in Mtech without GATE, you must cover the other eligibility of the course: You must have a BTech degree with minimum qualifying marks. If you have a sponsored seat, you must have worked for at least 2 years. You must be granted a 2-year study leave by the employer.


எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் இன்று (ஜனவரி 10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.

இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன. 10) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Monday, December 18, 2023

December 18, 2023

நாளை (டிச.19) நடைபெற இருந்த பட்டயப்படிப்பு கலந்தாய்வு மற்றும் அண்ணா பல்கலை & சுந்தரனார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!



நாளை (டிச.19) நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் மருந்தாளுநர் (DIP) மற்றும் செவிலியர் (DNT) பட்டயப்படிப்புகளுக்கு நாளை (டிச.19) அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு, கனமழை காரணமாக வரும் டிச.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவிப்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Friday, December 08, 2023

December 08, 2023

டிச., 11 முதல் அண்ணா பல்கலைக்கழக தேர்வு துவக்கம்.



பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

பொறியியல் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட பருவத் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் டிசம்பர் 4-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே மிக்ஜாம் புயலின் பாதிப்பையொட்டி கல்லூரிகளுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த வாரம் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்வுக் கால அட்டவணையில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

டிச.11 - பிப்.17 வரை:

அதன்படி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் வரும் டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.17-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்கான புதிய தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் (https://aucoeexam.in/) வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 07, 2023

December 07, 2023

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை



ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் - மறு தேதிகள் வெளியீடு

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகளின் புதிய அட்டவணை வெளியீடு

வரும் 11ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் வாரம் வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.




Monday, December 04, 2023

December 04, 2023

நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.



அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கையால் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வித் திட்டத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.

தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன-அண்ணா பல்கலைக்கழகம்.

Friday, November 17, 2023

November 17, 2023

செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் அறிவிப்பு

அண்ணா பல்கலை. உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு.

பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்கவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர உத்தரவு.



அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் கடும் அதிர்ச்சி!

அண்ணா பல்கலை. தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்தது.

தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம்.

ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல்.

இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்வு.

50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

- மாணவர்கள் கோரிக்கை To

The Principals of all Affiliated Colleges/

Government Colleges/Deans of Regional Offices/ University Colleges under Anna University Sir/Madam,

Sub: Office of the Controller of Examinations- Anna University, Chennai-25- Affiliated Institutions (Non Autonomous)- Examination fee, Certificate and Marksheet fee Revision-Intimation-Regarding

(1) Vice-Chancellor's approval dated 11.05.2023. Ref:

(2) From the Registrar, Anna University Lr. No. 102/Misc/PD4/2023-3, dated 15.05.2023. (3) From the Registrar, Anna University Lr. No. 102/Misc/PD4/2023-4, dated 15.06.2023.

I am by direction to inform that the fees are revised in the reference 2nd and 3rd cited as per the approval of resolution 142.12 of Finance Committee dated 18.01.2023 and 266 Syndicate Meeting Resolution No. 266.9, dated 19.01.2023. The details of the revised fees structure is furnished below:-

Online services fee (only Final year students) Uploading Consolidated mark sheet & Degree Certificate in Digi locker

The revised fees are applicable for all the students with immediate effect and the same may be informed to the students accordingly.

This may be treated as MOST URGENT.

P. Sarthivel. 20-10-2023

CONTROLLER OF EXAMINATIONS i/e

Copy to: (1) The DCOE, Computer Lab, O/o COE for necessary action.

(2) The Zonal Co-ordinator/Zonal Officer, Zone - I to XXIII

Wednesday, September 27, 2023

September 27, 2023

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு!



Anna University Distance Education Center Exam Results Released! - அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் பிப்/மார்ச்-2023 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரின் அதிகாரப்பூர்வ இணையதளமான coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!

Thursday, September 07, 2023

September 07, 2023

பொறியியல் படிப்புகளில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புகளில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு



அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.60 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 முதல்செப்.3-ம் தேதி வரை இணையவழியில் நடந்தது. இதன் முடிவில் 90,201 இடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும் 70,579 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை தெரிவித்தது. அதன்படி, துணை கலந்தாய்வுக்கு 17,710 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போதுவெளியாகியுள்ளது. அதில் பொதுப் பிரிவில் 200-க்கு 199.5கட்ஆஃப் மதிப்பெண் பெற்று மாணவி வேதலட்சுமி முதல் இடம்பெற்றுள்ளார். 199 மதிப்பெண்ணுடன் ராம் பிரசாத், 198.5 மதிப்பெண்ணுடன் துருவன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி பிரியதர்ஷினி 188.5 கட்ஆஃப் மதிப்பெண்ணுடன் தரவரிசையில் முதல் இடம் பெற்றார்.

இவர்களுக்கான துணை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க சுமார் 17,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிமுறைகளின்படி, மாணவர்கள் பிடித்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் செப். 9-ம் தேதி நிறைவு பெறும். பிறகு, எஸ்சிஏ காலி இடங்களுக்கான கலந்தாய்வு செப்.10, 11-ம் தேதிகளில் நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Monday, August 21, 2023

August 21, 2023

தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம்!



அண்ணா பல்கலை. கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆக.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியா்கள் மூலம் நிரப்புவதற்கு அண்ணா பல்கலை. முடிவெடுத்தது.

அந்தவகையில் முதல்கட்டமாக கிண்டி பொறியியல் கல்லூரி(சிஇஜி ) மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரியில்(எம்ஐடி) உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சிஇஜி கல்லூரியில் கட்டுமான பொறியியல்(சிவில்)–2, கணிதம்–5, ஆங்கிலம்–5, இயந்திரவியல் (மெக்கானிக்கல்) பொறியியல் –3 என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், எம்ஐடியில் ஆங்கிலம்–8, கணிதம்–4, இயற்பியல்–1 என 13 பணியிடங்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் www.kalviseithiofficial.com என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான கல்வித்தகுதி, ஊதியம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog