Breaking

Showing posts with label Secondary teachers. Show all posts
Showing posts with label Secondary teachers. Show all posts

Friday, February 23, 2024

February 23, 2024

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள்

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள் Secondary teachers have taken up hunger strike along with continuous blockade

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழக னார் கல்வி வளாகத்தை முற்றுகையிடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதுமான நிலையே நீடித்து வரு கிறது. அதன்படி, நேற்று 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி னார்கள். அப்போது ஆசிரியர்கள் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்தபோது,போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கைது செய்த ஆசிரியர்கள் ஆங்காங்கே சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டும், அரசு தரப்பில் பேச் சுவார்த்தைக்கு இதுவரை அழைப்பு இல்லாததால், முற்றுகை போராட்டத்தில் கைதான ஆசிரியர்கள் சமூகநலக்கூடத்தில் இருந்தவாறு உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்தனர். இதனால் சில ஆசிரியர்கள் மயங்கி கீழே விழுந் ததை பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தைதொடர இருக்கின்றனர். அரசு தொடர்ந்து பேசாமல் இருந்தால், மற்ற ஆசிரியர் சங் கங்களும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sunday, January 01, 2023

January 01, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்வு கொடுக்குமா அரசு? கண்டுகொள்ளாத தி.மு.க - Will the government give life to secondary teachers? The DMK did not notice

இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்வு கொடுக்குமா அரசு? கண்டுகொள்ளாத தி.மு.க - Will the government give life to secondary teachers? The DMK did not notice

இடைநிலை ஆசிரியர்களை கண்டு கொள்ளவில்லை தமிழக அரசு என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம், தகுதி தேர்வு ரத்து செய்தல் என பல்வேறு அறிக்கைகளையும் தன்னுடைய தேர்தல் பணிகளில் கொடுத்தது தி.மு.க. ஆனால் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதிகளையும் தற்போது வரை நிறைவேற்றாமல் மௌனம் சாதிப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்கள். பள்ளி கல்வித்துறையில் வேறொரு பணிகளிலும் இல்லாத அளவிற்கு ஊதியம் முரண்பாடு பிரச்சனையை தான் இடைநிலை ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். பணியாற்றியவர்களுக்கு காலம் முறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படை ஊதியம் 4000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு ஏழாவது ஊதிய குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு 4,200 ரூபாய் தர வேண்டும் ஊதியம் இணை நிர்ணயித்தது.

ஆனால் மாநில அரசு வெறும் 2,800 தான் வழங்குகிறது. தொடர்ந்து இதனுடைய ஆசிரியர்களுக்கு நடக்கும் ஊதியம் முரண்பாடுகள் குறித்து தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். தனது வாக்கு வங்கியை மாற்ற தி.மு க பல்வேறு அறிக்கைகளை தனது வாக்குறுதியாக வெளியிட்டது. ஆனால் ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள்.

Wednesday, September 28, 2022

September 28, 2022

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

இடைநிலை ஆசிரியர்களை எள்ளி நகையாடும் கல்வித் துறை - Education department making fun of secondary teachers

நாசா விஞ்ஞானிகளுக்கே நாக்கு தள்ளும் ! இந்த அரிய கண்டுபிடிப்பு..!!!

*விடுமுறைக்குள் ஒரு விடுமுறை*!!! *குடைக்குள் பெய்யும் மழை போல*....

*விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதை வேலை நாட்களில் ஈடு கட்டுவதே வழக்கம். தற்போது விடுமுறை நாட்களில் செய்த வேலையை விடுமுறை நாட்களிலேயே ஈடுகட்டும் தாராளமய,தனியார்மய சிந்தனைவாதிகள்*.

பள்ளிக்கல்வித்துறையின் நாற்றங்காலே ஆரம்பக்கல்விதான் அந்த ஆரம்பக் கல்வியை போதிக்கும் இ.நி.ஆசிரியர்களை கால்பந்து போல தன் விருப்பத்திற்கு எட்டி உதைக்கிறார்கள்...

கல்விச்சூழலில் ஆசிரியர்களும்,மாணவர்களும் ஒன்றுதான்....

கற்பவர்களுக்கு எப்படி விடுமுறை தேவைப்படுகிறதோ அதே போலத்தான் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தேவைப்படும் நமது நாடு சுதந்திரம் பெற்று குடியரசு ஆன காலத்திருந்தே மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் சேர்த்தே காலாண்டு,அரையாண்டு கோடை விடுமுறையென விடப்பட்டு வருகிறது.

நம்மை ஆண்ட மாபெரும் ஆளுமைகள் படிக்காத மாமேதை கர்மவீரர் காமராசர் ,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர்- அண்ணா,முத்துவேல் ஈன்றெடுத்த முத்தமிழ்க் கடல் கலைஞர்- கருணாநிதி, ஏழைகளின் ஏந்தல் புரட்சித் தலைவர் M.G.R ,தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தெரியாத ஒரு கண்டுபிடிப்பை தற்போது சில மெத்தப்படித்த மேதாவிகள் கண்டுபிடித்துள்ளார்கள்..

விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு கிடையாதென்று....

நித்தம் ஒரு அறிக்கை !,நிமிடத்திற்கு ஒரு அறிக்கை பாடம் நடத்தச் சொல்லுவதைத் தவிர பிற வேலைகளுக்கான அறிக்கை ....

நவீனப்படுத்துகிறோம் என்கிறோம் என்கிற பெயரில் தாய்மை குணம் கொண்ட தொடக்கக் கல்வியை சீரழிக்காதீர்கள்!!!

இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்தாதீர்கள் விடுமுறைக்குள் விடுமுறை விடாதீர்கள்.

*நீங்கள் அளித்திருப்பது ஈடுசெய்யும் விடுப்பல்ல !!!இ.நி.ஆசிரியர்களை இழிவு செய்யும் விடுப்பு* !!!

இந்தச் செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி காஞ்சிபுரம் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது

மாவட்ட மையம் .

TNPTF KANCHEEPURAM DISTRICT

Tuesday, July 19, 2022

July 19, 2022

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ( 19.07.2022 )

முன்னுரிமை வரிசை எண் 3776 முதல் 4336 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 19.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 19.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

இதையும் படிக்க | யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயரும்? இதோ பட்டியல்

எனவே , இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கலாம். அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்

Total Pageviews

Search This Blog