Breaking

Showing posts with label mbbs tamil college. Show all posts
Showing posts with label mbbs tamil college. Show all posts

Monday, February 12, 2024

February 12, 2024

தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - ஏன் தெரியுமா?



தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - ஏன் தெரியுமா? Can't start a new medical college in Tamil Nadu?" - Do you know why?

தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - `MBBS' பெரும் கனவில் விழுந்த பேரிடி



வீடியோ செய்தி👇

CLICK HERE

Saturday, September 23, 2023

September 23, 2023

தமிழ்நாட்டில்இனி கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்ட முடியாது! - தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளால் முட்டுக்கட்டை!

தமிழ்நாட்டில் இனி கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்ட முடியாது! தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளால் முட்டுக்கட்டை!

தேசிய மருத்துவ ஆணையத்தின்புதிய விதிகளின்படி தமிழ்நாட்டில் இனிபுதிதாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடியாது. அதைப்போல ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் கூடுத லாக மாணவர்களையும் சேர்க்க முடியாது.

கல்வித்துறையானது மாநிலப்பட்டியலிலும் உள்ளது; மத்திய அரசின் பட்டியலிலும் உள்ளது. மத்திய அரசு சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தப்படுகின்றன. உயர்கல்வியில்ஐ.ஐ.டி. போன்ற பொறியியல் கல்வி நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளையும் மத்திய அரசே நடத்துகின்றது

Tuesday, December 27, 2022

December 27, 2022

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில்வதற்காக உடனடியாக இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றுகளை வழங்கவேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை. மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவக்கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புக்கு சேரும் பொழுது அரசுக்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவையில் பணியாற்றவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதை தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் தங்கள் ஏற்கனவே கொரோனா காலத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே மேலும் பணியாற்ற அவசியம் இல்லை. எனவே தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டானர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் மருத்துவக்கல்வி சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

Tuesday, November 01, 2022

November 01, 2022

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்வழியில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரியை சென்னையில் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்காக மருத்துவப் பாட நூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் இருப்பதால், அங்கு தமிழ்மொழியில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கடந்த ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் அதனை பரிசீலித்து வருகிறாா்.

தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும்.

மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணியில் 3 மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதலாமாண்டு பாடப்புத்தகங்கள் தற்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்.

பின்னா், மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் மொழியியல் வல்லுநா்களிடம் கொடுத்து மொழிபெயா்ப்பு 100 சதவீதம் சரியாக உள்ளதா என்று சரிபாா்க்கப்படும். அதன்பிறகு, அந்த புத்தகங்களை முதல்வா் வெளியிடுவாா். படிப்படியாக அனைத்து ஆண்டு மருத்துவப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றாா் அவா்.

Total Pageviews

Search This Blog