Breaking

Showing posts with label ssc exams. Show all posts
Showing posts with label ssc exams. Show all posts

Tuesday, November 21, 2023

November 21, 2023

SSC- Staff Selection commission மூலம் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு - மொத்த பணியிடங்கள் 75768 - Notification PDF - Last date - 28.12.2023

SSC- Staff Selection commission மூலம் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு... Notification avail in pdf

CRPF VACANCIES

MALE - 22196

FEMALE - 3231

SSB VACANCIES

MALE - 4839

FEMALE - 439

ITBP VACANCIES

MALE - 2564

FEMALE - 442

AR VACANCIES

MALE - 4624

FEMALE - 152

SSF VACANCIES

MALE - 458

FEMALE - 125

NIA VACANCIES

TOTAL - 225

மொத்த பணியிடங்கள் 75768

IMPORTANT DATES

Dates for submission of online application - 24.11.2023-28.12.2023

Last date and time for generation of offline challan 28.12.2023 (23:00)

Last date and time for making online fee payment 29.12.2023 (23:00)

Last date for payment through challan 29.12.2023

Schedule of Computer Based Examination

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, October 12, 2023

October 12, 2023

22 மொழிகளில் SSC தேர்வு!



The SSC CHSL Tier 2 exam 2023 will be held on November 2, 2023. SSC CGL Exam: The SSC CGL result 2023 was released on September 19, 2023. SSC CGL answer key 2023 was released on August 1, 2023. The SSC CGL 2023 exam was held from July 14 to 27, 2023.

22 மொழிகளில் SSC தேர்வு! SSC exam in 22 languages!

2014ம் ஆண்டுக்கு முன்பு, தேர்வர்களுக்கு ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.ஆனால், வரவிருக்கும் காலங்களில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டித் தேர்வுகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஜே.இ.இ., நீட் மற்றும் யு.ஜி.சி., தேர்வுகள் 12 இந்திய மொழிகளிலும் நடத்தப்படுகின்றன, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, August 21, 2023

August 21, 2023

மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் எப்போது?- அட்டவணை வெளியிட்ட பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகள் எப்போது?- அட்டவணை வெளியிட்ட பணியாளர் தேர்வாணையம்

2023ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, சிஜிஎல் எனப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, சிஎச்எஸ்எல் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளி அளவிலான தேர்வு, இளநிலை பொறியாளர் தேர்வு, மத்திய ஆயுதப்படை தேர்வு ஆகியவற்றுக்கான தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அட்டவணை வெளியாகி உள்ளது. தேர்வு அட்டவணை

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - இரண்டாம் நிலைத் தேர்வு)- அக்டோபர் 25, 26 மற்றும் 27, 2023.

ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level Examination, இரண்டாம் நிலைத் தேர்வு)- நவம்பர் 2 2023.

இளநிலை பொறியாளர் தேர்வு ( சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் JE தேர்வு, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2023 இரண்டாம் தாள்)- டிசம்பர் 4 2023.

டெல்லி காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய ஆயுதப்படை தேர்வு ( CPO Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination,இரண்டாம் நிலைத் தேர்வு)- டிசம்பர் 22 2023. கடந்த ஆண்டு தேர்வு எப்படி?

இரண்டாம் நிலைத் தேர்வு பொதுவாக மூன்று தாள்களை கொண்டிருக்கிறது. முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடக்க உள்ளது.

செஷன் 1 மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலை ஒரு மணி நேர தேர்வு- கணிதம், பொது அறிவி திறனறிதல் உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகளை கொண்டிருக்கும்.

செஷன் 2 - ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதில் ஆங்கிலம், மொழி, பொது அறிவு உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். செஷன் 3- இது 15 நிமிடங்கள். கம்யூட்டர் அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும்.

இதை தொடர்ந்து இரண்டாம் நிலைத் தேர்விற்கான செஷன் -2 தேர்வு நடைபெறும். ஆன்லைன் தேர்வு என்பதால் நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட கால அளவு முடிந்த பிறகு போர்ட்டல் செயல்படாது.

கூடுதல் விவரங்களை அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Schedule%20of%20Examination_19082023.pdf என்ற முகவரியை அணுகலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய இணையதளம்: https://ssc.nic.in/

Sunday, August 20, 2023

August 20, 2023

49,590 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது!



BREAKING: SSC 49,590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ரிசல்ட் வெளியானது!

CAPF, CISF, CRPF, ITBP, SSF, அசாம் ரைபிள்மேன், Narcotics Bureau போன்ற 49,590 GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான இறுதி முடிவுகளை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது

PET/PST முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 7 வரை மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றது. முடிவுகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணுங்கள்

https://ssc.nic.in/portal/results

Tuesday, April 18, 2023

April 18, 2023

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முன்னதாக சி.ஆர்.பி.எப். தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 28, 2023

February 28, 2023

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் S. அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு (SSC MTS, SSC CGL, SSC CHSL, SSC JE) 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் //ssc.nic.in வெளியிடப்பட்டுள்ளது.

11,000 காலியான அரசு பணியிடங்கள் இத்தேர்வு மூலம் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற Veranda RACE என்ற நிறுவனத்துடன் இணைந்து தாட்கோ மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு , ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். Computer Based Test, Physical efficiency Test, Physical Standard Test(Only for the post of Havalder) , Document Verification ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளது. இப்போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000/- முதல் ரூ.22,000/- வரை பணியமர்த்தப்படுவார்கள்.

மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் S. அமிர்தஜோதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும் மற்றும் பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு 044-25246344 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்

Saturday, February 18, 2023

February 18, 2023

SSC தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ssc தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எஸ்.எஸ்.சி. தேர்வாணையம் அறிவித்துள்ள எம்டிஎஸ் (மல்டி டாஸ்கிங் ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 26ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி அறிவித்தது.

விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், நேற்று கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்தனர். இதனால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால், இணையதளம் முடங்கியது.

இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Friday, February 17, 2023

February 17, 2023

SSC Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் அவகாசம்

SSC Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் அவகாசம்

எஸ்எஸ்சி தேர்வு ஒரு வார காலம் அவகாசம்

Important Notice

F. No. HQPPI03/26/2022-P&P I - The Commission has decided to extend the closing date for receipt of online application for Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022 to 24-02-2023. Accordingly, other important dates have also been changed. Following are the important dates:

2. It is informed that relevant part in the notice of Examination where closing date has been treated as crucial date for ascertaining eligibility, will now be as per new closing date i.e. 24-02-2023.

ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளான நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டது

Thursday, February 16, 2023

February 16, 2023

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க கோரிக்கை!

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க கோரிக்கை! Request for extension of time to apply for SSC exam!

இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி. பி.ஐ.சி , சி.பி என்) பதவிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்ப கடைசித் தேதி 17.02.2023. ஆனால் நேற்று (15.02.2023) அதற்கான இணைய தளம் இயங்கவில்லை. இன்று சரியாகுமா என தெரியவில்லை. பல விண்ணப்பதாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இதில் தலையிட்டு தீர்வுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்டாப் செலக்சன் கமிஷனுக்கும் இத்தகைய புகார்கள் நேரடியாக சென்றிருக்கும். எனவே உடனே இணைய தளத்தை சரி செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கடைசி தேதி நெருங்கும் வேளையில் இப்படி தொழில் நுட்ப பிரச்சினைகள் குறுக்கிட்டு இருப்பதால் நேர இழப்பை ஈடு கட்டும் வகையில் விண்ணப்ப கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குனருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன். தீர்வு விரைவில் காணப்படுமென்று நம்புகிறேன்., இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 01, 2023

February 01, 2023

SSC MTS தேர்வு : அடுத்த 60 நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் - தமிழ்நாடு அரசு திட்டம்

SSC MTS தேர்வு : அடுத்த 60 நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் - தமிழ்நாடு அரசு திட்டம் SSC MTS Exam : 100+ Practice Videos for Next 60 Days - Tamil Nadu Govt

விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு நாளை அண்மையில் அறிவுத்துள்ளது. ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான நேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத் துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சித் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள தனது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தற்போது இந்தச் சீரிய முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அது தனது AIM TN என்ற யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்காக நடத்திய போட்டித் தேர்வுகளுக்கும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A மெயின்ஸ் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து அதன் யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்து வருகிறது. இம்முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்தவுள்ளது. தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவிட்டுப்பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டித் தேர்வில் போட்டி போட்டு, வெற்றி பெற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது ATM TN என்ற காணொலிப்பாதையில் (YouTube) பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்

Tuesday, January 31, 2023

January 31, 2023

Free Coaching Course for Union Civil Service Exams - ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் பல்நோக்கு பணியாளர், ஹவில்தார் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) மற்றும் Havidar என்ற பணியிடத்திற்கு ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தேர்வினை தமிழில் எழுதவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 01.01.2023 தேதியில் 18 வயது முதல் 27ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.0.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 01.02.2023 நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்போட்டி தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 044 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Thursday, January 19, 2023

January 19, 2023

SSC தேர்வை தமிழில் எழுத அனுமதி Permission to write SSC exam in Tamil

SSC தேர்வை தமிழில் எழுத அனுமதி Permission to write SSC exam in Tamil

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் பல்திறன் தேர்வை தமிழிலும் எழுத மத்திய அரசு அனுமதி.

தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

தகுதி உள்ளவர்கள் பிப்ரவரி 17ம் தேதிக்குள், https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளில், வினாத் தாட்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முன்னதாக, நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வுகள் (CGL Examination 2022) அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி மாநிலச் செயலாளருமான கனிமொழி, " இந்திய அரசின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" என்று தெரிவித்தார். அதேபோன்று, கடந்த அக்டோபர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையில், மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரை வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், " இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷாவின் தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது?" என்று வினவினார் .

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தில், " தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

Thursday, October 20, 2022

Tuesday, September 27, 2022

September 27, 2022

20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மத்திய அரசின் தேர்வாணையத்தால் அறிவிப்பு!

20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மத்திய அரசின் தேர்வாணையத்தால் அறிவிப்பு! - More than 20,000 vacancies announced by Central Government Selection Board!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2022 ஆகும்.

How many vacancies are there in SSC?

How many vacancies are there in SSC each year?

Is SSC is a Government job?

What is SSC Phase 9 selection Post?

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பணிக்காலியிடங்களில் பணிவாய்ப்பு பெற இப்போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும்.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம்.

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மீள இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் ‘TN Career Services Employment’ என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

Tuesday, September 20, 2022

September 20, 2022

How to crack SSC exam easily? - SSC தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

எஸ்.எஸ்.சி. தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

Important tips to crack SSC CGL

Go through the Syllabus and focus on study accordingly.

Solve Previous Year Papers.

Prepare your study plan and follow it.

Choose only best books as study material.

Solve practice set regularly.

Set your study goal.

Make Important Study Notes.

Do revision of your notes every week.

எஸ்.எஸ்.சி. தேர்வில் சாதிப்பது எப்படி?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...

முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.

உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

தினமும் பயிற்சி

எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆங்கிலம்

பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள்

நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

கணிதம்

கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

ரீசனிங்

இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

பொது அறிவுப் பகுதி

இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

பயம் தவிர்ப்போம்



எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

நம்பிக்கையுடன் இன்றே விண்ணப்பியுங்கள். விடாமுயற்சியுடனும், ஆர்வத்துடனும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Saturday, August 27, 2022

August 27, 2022

இளநிலை பொறியாளர் தேர்வு-2022: SSC புதிய அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2022

மத்திய பணிக்காக காத்திருக்கும் பொறியியல் இளைஞர்களுக்கான வாய்ப்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் பணிக்காக கவனம் செலுத்தி வரும் இளைஞர்கள் இதுபோன்ற மத்திய அரசு தேர்வுகள் மீதும் கவனம் செலுத்தி முயற்சித்தால் வெற்றியடையலாம். 

விளம்பர எண். HQ-PRII03(2)/2/2022-PP-II

பணி: இளநிலை பொறியாளர் (Junior Engineer)

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I - கொள் குறிவகை கேள்விகளும், தாள் II - விரிவாக விடையளிக்கும் வகையான கேள்விகளும் கொண்டதா இருக்கும். 

எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2022

மேலும் விவரங்கள் அறிய www.sss.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Friday, July 29, 2022

July 29, 2022

2022 SSC எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கண்டிப்பாக தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது

பட்டப்படிப்பு, மேல்நிலைப்பள்ளி நிலை, மெட்ரிக் பள்ளி ஆகிய மூன்று நிலை பணியிடங்களுக்கான பேஸ் X / 2022 / நியமன (Phase X/2022/Selection Posts) தேர்வுகளை 2022 ஆகஸ்ட் 1 முதல், 5 வரை கணினி அடிப்படையில் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளது. பணியாளர் தேர்வாணையத்தின் சென்னையில் உள்ள தென் மண்டலத்தில் 31 பிரிவுகளின் கீழ் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தென்மண்டலத்தில் 45,773 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் 5 நாட்களில், ஒவ்வொரு நாளும், 4 ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது ஷிப்டு 11:45 மணி முதல் 12:45 மணி வரை, 3-வது ஷிப்டு பிற்பகல் 02:30 மணி முதல் 03:30 மணி வரை, 4-வது ஷிப்டு மாலை 05:15 மணி முதல் 06:15 மணி வரை நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் தென்மண்டல இயக்குநர் கே நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதிச் சீட்டு:

மின்னணு முறையில் அனுமதி சான்றிதழ்கள் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தேர்வாளர்களின் சரியான தேர்வுத் தேதிக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். இதற்கான விவரங்கள் தேர்வாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முறையிலும் அனுப்பிவைக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள்:

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கண்டிப்பாக தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வாளரின் அனுமதி ரத்து செய்யப்படுவதோடு குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஆணையத்தின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தடை செய்யப்படும்.

மின்னணு முறையிலான அனுமதிச் சான்றிதழ் மற்றும் செல்லுபடியாகும் மூல அடையாள சான்றிதழ் இல்லாதவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விவரங்களை அறிய தென்மண்டல அலுவலகத்தின் 044 – 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94451 95946 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

கொவிட் -19 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் தென்மண்டல இயக்குநர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

Total Pageviews

Search This Blog