Breaking

Showing posts with label UPI. Show all posts
Showing posts with label UPI. Show all posts

Friday, November 01, 2024

Saturday, December 09, 2023

December 09, 2023

கல்வி நிலையங்களில் 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனைக்கு அனுமதி!

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் 5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது.மேலும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. 2024ம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 5வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை.யுபிஐ பரிமாற்றம்சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வபோது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக பணப்புழக்கம் கொண்டது மற்றும் அதிக மதிப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் இடம் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இனிமேல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றத்தின் அளவு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.

Friday, October 13, 2023

October 13, 2023

ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்

ரேஷன் கடைகளில் யு.பி.ஐ வசதியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி முதல்கட்டமாக இன்று (அக்.,13) முதல் சென்னையில் உள்ள கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது.

Thursday, October 12, 2023

October 12, 2023

தவறுதலான UPI பரிவர்த்தனை: திரும்பப் பெறுவது எப்படி? How to Recover Money Transferred to a Wrong UPI Address

You can report the wrong transaction issue to the customer care support team of your UPI app. Submit relevant proof of the transaction, like a payment screenshot, and request a refund within 24 to 48 hours of reporting


தவறுதலான யுபிஐ பரிவர்த்தனை: திரும்பப் பெறுவது எப்படி?

யுபிஐ எனச் சொல்லப்படுகிற எண்ம முறையில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்திற்கு மாற்றாக எண்ம பரிவர்த்தனைகள் எளிமையாக இருந்தாலும் நிறைய தவறுதலான பரிவர்த்தனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நீங்கள் வேறு ஒருவருக்கு தவறுதலாக யுபிஐ பரிவர்த்தனை செய்திருந்தால் அதனைத் திரும்ப பெற செய்ய வேண்டியவைக் குறித்து பார்க்கலாம்.

- முதலில் எந்த யுபிஐ சேவை வழங்குனர் (ஜிபே, பேடிஎம், போன்பே) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் அளிக்க வேண்டும். அதிகப்பட்சம் 24 - 48 மணிநேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழி செய்யப்படும்.

- வழங்குனரால் தீர்க்கப்படாத கோரிக்கைகளை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்.பி.சி.ஐ.) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். புகாரின் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

என்.பி.சி.ஐ. சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள்.

- அதே வேளையில், வங்கியைத் தொடர்பு கொண்டும் நீங்கள் புகார் அளிக்கலாம். நேரிலோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ இந்தப் புகாரை நீங்கள் அளிக்க முடியும்.

பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யுபிஐ ஐடி, பணம் பெறுபவரின் பெயர், செல்போன் எண், அனுப்பும் தொகை ஆகியவற்றை சரிபார்த்துவிட்டு அனுப்புவது நல்லது.

Wednesday, March 29, 2023

March 29, 2023

UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCI

Don't trust any info on UPI charges - NPCI puts an end to rumours - UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த NPCI

வாடிக்கையாளர்களுக்கு UPI தொடர்ந்து இலவசமாக செயல்படும் என NPCI அறிவித்துள்ளது. UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக பரவிய தகவலுக்கு NPCI அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதில், ஏப்ரல் 1முதல் 1.1 சதவீதம் கட்டணம் என்பது டிஜிட்டல் walletஐ கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கானது என விளக்கமளித்துள்ளது.

எனவே பயனர்கள் UPI கட்டணம் குறித்த எந்த தகவலையும் நம்ப வேண்டாம்.

Total Pageviews

Search This Blog