Breaking

Showing posts with label TAX. Show all posts
Showing posts with label TAX. Show all posts

Wednesday, September 06, 2023

September 06, 2023

எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?

தொழில் வரி குறித்த செய்தி - எவ்வாறு தொழில் வரி செலுத்துவது? *தொழில் வரி குறித்த செய்தி*

ஊராட்சி செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட விவரங்களை நாம் அளிக்க வேண்டும்.அவை

வரி செலுத்துவதற்கான Direct ஆன்லைன் லிங்க் கீழே உள்ளது..

1. பெயர் - ஆங்கிலம் மற்றும் தமிழில்

2. பதவி- ஆங்கிலம் மற்றும் தமிழில்

3. பணிபுரியும் பள்ளி - ஆங்கிலம் மற்றும் தமிழில்

4. ஆதார் எண்

5. மின்னஞ்சல் முகவரி

6. வருமான வரி கணக்கு எண் ( PAN NUMBER)

7. அலைபேசி எண்

8. ஊதியம் (6 மாதத்திற்கு)- ₹ 75,000 இக்கு மேல் மேற்கண்ட விவரங்களை ஊராட்சி செயலாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்து நமக்கு வரிவிதிப்பு எண் என்ற ஒன்றை நமக்கு அளிப்பார்

பின்னர் நாம் நமது தொழில் வரியினை இணைய வழியில் நமது தொடுதிரை அலைபேசி மூலமாக செலுத்தி , வரி செலுத்தியதற்கான இரசீதினை பதிவிறக்கி நகல் எடுத்துக் கொள்ளலாம். *எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?*

1. Open Chrome browser

2. Type search box - vp tax

3. Click - Rural development and panchayat raj

4. Click - விரைவாக வரி செலுத்த

5. Click - pay tax

6. Type- Name in english
Mobile number
E-mail I'd

Select - district, union
Panchayat

Type - வரிவிதிப்பு எண்
Enter - captcha
Click - search

7. Click - online & pay(Alt+shipt+p)
8. Net banking, debit card
Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.
Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.
CLICK HERE TO வரி செலுத்துவதற்கான Direct ஆன்லைன் லிங்க்

Monday, January 16, 2023

January 16, 2023

ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி இருக்காது: நிர்மலா சீதாராமன்

ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி இருக்காது: நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு இருக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.,ன் பஞ்ச்ஜன்யா பத்திரிகை நடத்திய விழாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்தான். என்னால் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்க கூடிய பிரச்னைகளை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு ஏதும் இருக்காது. ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்த இருக்கிறோம். மொத்தம் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை வழங்கியுள்ளோம். மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களுக்காக அரசு நிறைய திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது.

வரும் காலத்திலும் அவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை முன்னெடுப்போம். 2020ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அரசு மூலதன செலவுகளை உயர்த்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Monday, August 08, 2022

August 08, 2022

வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.!

ITR Refund | வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

2022 - 2023ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவடைந்து விட்டது. ஜூலை 31 அல்லது அதற்கு முன் ஐடி வருமானத்தைத் தாக்கல் செய்தவர்கள் கூடுதலாக செலுத்திய வரியை மத்திய நேரடி வரி அமைப்பு மூலம் திரும்ப பெறுவார்கள். இருப்பினும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியவர்கள், டிசம்பர் 31, 2022க்குள் ஐடி ரிட்டனைத் தாக்கல் செய்வதன் மூலம் தங்களுக்கான கூடுதல் வரித்தொகையை திரும்ப பெறலாம்.

வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். ஐடிஆர் ரீஃபண்ட் என்பது வருமானம் இல்லை என்றாலும், அந்த ரீஃபண்ட் தொகைக்கான வட்டி வருமானமாக கருதப்படுகிறது. எனவே அந்த தொகைக்கான வருமான வரியானது அடுத்த ஆண்டுக்கான கணக்கில் சேர்க்கப்படுகிறது. வருமான வரி ரீஃபண்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை பற்றி இங்கே பார்க்கலாம்...

தகுதி:

வருமான வரித் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் அல்லது அதற்கு முன்னதாக வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியானவர்கள். நீங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதி வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும்.

ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டி:

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதிக்கு வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கான வட்டித் தொகை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கு வரி இல்லை என்றாலும், ரீஃபண்ட் தொகைக்கான வட்டியானது வரிக்குட்பட்டது.

ரீஃபண்ட் வட்டி விகிதம்:

மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு ஐடிஆர் ரீஃபண்ட் தொகையில் 0.50 சதவீத மாதாந்திர வட்டி கிடைக்கும். வரிவிதிப்பு விதிகள்:

தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கிற்கான ரீ ஃபண்ட் தொகை என்பது, வரி செலுத்துவோர் ஏற்கனவே தெரிவித்த வருமானமாகும். எனவே தான் ஐடிஆர் ரீஃபண்ட் தொகைக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் ஐடிஆர் ரீஃபண்ட் தொகை மூலமாக ஈட்டப்படும் வட்டியானது, தனிநபரின் நிகர ஆண்டு வருமானமாக கணக்கிடப்படுவதால் அதற்கு வருமான வரி விதிக்கப்படுகிறது.

வட்டி கணக்கீடு:

வருமான வரிச் சட்டம் பிரிவு 234D வருமான வரி ரீஃபண்ட் தொகை கணக்கிடப்படுகிறது. ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டியைக் கணக்கிடும் போது, ​​மாதத்தின் எந்தப் பகுதியும் ஒரு மாதமாக கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களுக்கு ரூ.8,489 வட்டியைக் கணக்கிட வேண்டும் என வைத்துக்கொள்வோம். அப்போது 100 ஆக முழுமை பெறாத தொகையானது கணக்கில் இருந்து கழிக்கப்படும். அதாவது 8,489 ரூபாயில் உள்ள ரூ.89 கழிக்கப்பட்டு, மீதமுள்ள 8.400 ரூபாய்க்கான வட்டித்தொகை மட்டுமே கணக்கிடப்படும்.

Monday, August 01, 2022

August 01, 2022

ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா?

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் அடுத்து என்ன செய்வது.

வருமானவரி ரிட்டன் 2021-22ம் ஆண்டுக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதன்படி நேற்று இரவு 10 மணிவரை ஏறக்குறைய 65 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 5 கோடி பேர் ரிட்டன் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காலக்கெடுவை தவறவிட்டவர்கள் என்ன செய்ய முடியும். சட்ட நடவடிக்கையை எவ்வாறு தவிர்க்கலாம்.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதியை தவறவிட்டவர்கள் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ம்தேதிவரை கால அவகாசம் இருக்கிறது.

இதற்கு தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும் பிரிவில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். இந்த முறையில் தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

ஆண்டுக்கு ரூ.5லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வருமானவரிச் சட்டம் 243(எப்) பிரிவில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருந்துத. ஆனால், பட்ஜெட்டில் இந்த அபராதத்தை ரூ.5 ஆயிரமாக மத்திய நிதியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டுவோர் தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால், அதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். புதிய வருமானவரித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர், எந்தவிதமான அபராதமும் செலுத்தத் தேவையில்லை.

காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்

ஐடிஆர் கடைசித் தேதியையும தவறவிட்டால் வரி செலுத்துவோருக்கு பல பின்னடைவுகள் ஏற்படும். அதாவது வரி செலுத்துவோர் வரி அளவுக்கு ஏற்பட வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். இது கடந்த ஐடிஆர் தாக்கல் செய்த தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

காலதாமதமான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர், மூலதனச் செலவுகளில் ஏற்பட்ட இழப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், சொத்து விற்பனையால் ஏற்படும் இழப்பு முன்னெடுத்துச்செல்லலாம்

Monday, July 18, 2022

July 18, 2022

GST வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீட் தேர்வு எழுதிய தந்தை, மகள்: 50 வயதிலும் பார்மசிஸ்ட் ஆர்வம் | Teachers ஹோட்டல் அறைகளின் வாடகை ஒரு நாளைக்கு ரூ.1000க்குள் குறைவாக இருந்தால் தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ஐடிசி இல்லாத அறைக்கு 5 சதவீதம் வசூலிக்கப்படும்.

எல்இடி விளக்குகள், சாதனங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளதால் இந்த பொருட்களின் விலையும் உயரும்.

வெட்டும் கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள் கொண்ட கத்திகள், கரண்டிகள், ஃபோர்க்ஸ், லேடில்ஸ், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள் போன்றவை 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீத ஜிஎஸ்டி என உயர்கிறது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுக்கு இன்று முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அது 12 சதவிகிதமாக மாறுவதால் வாடகை குறையும் வாய்ப்பு உள்ளது.

பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய அணியும் அல்லது உடன் எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்பட்ட பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது. எனவே இவற்றின் விலை குறையும்.

இதனைத் தவிர பாதுகாப்புப் படைகளுக்கு பயன்படும் பொருட்கள், தனியார் நிறுவனங்கள்/ விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Monday, July 04, 2022

July 04, 2022

சமூக வலைதளத்தில் வருமானம் ஈட்டினால் வரி பிடித்தம்.. புதிய வரி விதிப்பு

சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது

இந்தியாவில் வருமான வரியை பொறுத்தவரை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தனி நபர் வருமானம், சம்பளம் வாங்குபவர், நிறுவனங்கள் என்று ஒவ்வொரு வகையான வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எனவே, வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வருமானம் வழங்கும் நிறுவனங்கள் வரி பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையை தான் வழங்கும் பழக்கம் நாடு முழுவதும் உள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகையை, நிறுவனம் / ஊதியம் வழங்குபவர் செலுத்தி விடுவார்.

உதாரணமாக ஒரு நபர் ஆண்டுக்கு ₹5,00,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் ஆண்டுக்கு அந்த நபர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனமே கணக்கிட்டு அந்த தொகையை மாதா மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையாக பிடித்தம் செய்து, TDS செலுத்தி அதற்கான சான்றிதழை ஆண்டு இறுதியில் வழங்குவார்கள். இதுதான் TDS என்று கூறப்படும் டாக்ஸ் டிடக்டட் அட் சோர்ஸ் என்று கூறப்படுகிறது. ஏதேனும் காண்ட்ராக்ட், professional கட்டணம் அல்லது சேவைகளுக்கு வெகுமதி பெற்றுக்கொள்ளும் போதும் 10 சதவிகிதம் முதல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகைதான் வழங்கப்படும். எந்த துறையில் பணியாற்றி அதற்கான வருமானம் வழங்கப்படுகிறதோ அதற்கு ஏற்ற அளவுக்கு வருமான வரி சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி விட்ட நிலையில் அவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்ற கண்காணிப்பு தேவைப்படும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்று கூறப்படும் நபர்கள் ஈட்டும் பணத்துக்கு இனி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது

Wednesday, June 15, 2022

June 15, 2022

அட்வான்ஸ் வரி ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இன்று கடைசி தேதி

சம்பளம் இல்லாமல் ஒருவருக்கு வாடகை, பங்கு மூலதனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாயம், வைப்புத் தொகை வட்டி, லாட்டரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் வரி செலுத்த வேண்டி இருந்தால், அவர்கள் அந்த வரி தொகையை கணக்கிட்டு நான்கு தவணைகளாக முன் கூட்டியே செலுத்த வேண்டும். முதல் தவணையாக 15% வரித்தொகை செலுத்த இன்று (ஜூன் 15) கடைசி தேதி. தவறும் பட்சத்தில் அத்தொகைக்கு 1% அபராத வட்டி வசூலிக்கப்படும். யார் எல்லாம் இவ்வரி செலுத்த வேண்டும்!

சம்பளதாரர்கள் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு நிறுவனமே வரிப் பிடித்தம் செய்யும். சம்பளதாரர்கள் இல்லாத சுயதொழில் செய்யும் தனிநபர்களான மருத்துவர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர், ஓவியர், நிதி ஆலோசகர்கள் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்து, அவர்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருக்குமாயின் அவர்கள் இந்த அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரிக்கான தவணை!

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் எனக் கொள்வோம். அதில் தனிநபர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது. மேலும் 80சியின் கீழ் ரூ.1.5 லட்சத்துக்கு முதலீடுகள் மேற்கொண்டிருந்தால் அதற்கு விலக்கும் பெறலாம். தற்போது ரூ.8.5 லட்சதுக்கு உங்களுக்கான வரி செஸ் ஆகியவை சேர்த்து ரூ.54,600 ஆகும். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருப்பதால் நீங்கள் இந்த ரூ.54,600-ஐ நான்கு தவணையாக முன் கூட்டியே செலுத்த வேண்டும்.

நிதியாண்டின் முதல் தவணையாக 15 சதவீதத்தை (ரூ.8,190) ஜூன் 15க்குள் செலுத்த வேண்டும். 2ம்தவணையாக செப்., 15-க்குள் 45% வரியை செலுத்த வேண்டும். முதல் தவனையாக 15 சதவீதம் செலுத்தியிருப்போம். அதனுடன் 30% தொகையை (ரூ.16,380) செலுத்த வேண்டும். மூன்றாவது தவனையாக 75% வரியை செலுத்தியிருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே செலுத்தியுள்ள 45% போக 30% தொகையான ரூ.16,380. நான்காம் தவணையாக நிதியாண்டின் மார்ச் 15-க்குள் 100% தொகையை செலுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே மொத்த வரியில் 75% செலுத்தியிருப்போம். அதனால் மீதமுள்ள 25% தொகையான ரூ.13,650 செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரி செலுத்தும் வழிகள்!

முதலில் உங்களின் வரி வருவாயை கணக்கிட்டுக் கொண்டு வருமான வரித்துறை வழங்கும் https://www.tin-nsdl.com/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சர்வீசஸ் பிரிவில் இ-பேமென்ட்: பே டேக்சஸ் ஆன்லைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் நான் டி.டி.எஸ்/டி.சி.எஸ்., பிரிவின் கீழ் சலான் எண் 280 என இருப்பதை கிளிக் செய்து கேட்கும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக அட்வான்ஸ் வரியை செலுத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாதோர் சலான் 280-ஐ பதிவிறக்கம் செய்து வங்கியில் சென்று செலுத்தலாம்.

Thursday, February 03, 2022

February 03, 2022

வருமான வரி கணிப்பான் 2021 - 22 ( New & old Method IT Calculator )

வருமான வரி கணிப்பான் 2021 - 22 ( New & old Method IT Calculator )

வருமான வரி கணிப்பான் 2021 - 22

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியினை புதிய & பழைய கணக்கீட்டு முறைகளில் ஒரே நேரத்தில் கணக்கிட்டு, தேவையானதை இரண்டே பக்கங்களில் 'நிரப்பப்பட்ட Income Tax படிவமாக' A4 தாளில் Print செய்து கொள்ளலாம்.

2021 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்கள் போதுமானது.

DA (17% - 31%), CPS (10%) & 1 நாள் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிட்டுக் கொள்ளும்.

New & old Method IT Calculator 2021 - 2022 | Download here...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & தனிநபர் வருமானவாி செலுத்தத் தகுதியுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியினை பழைய & புதிய கணக்கீட்டு வழிகளில் ஒரே நிமிடத்தில் கணக்கிட்டு, அதில் ஏற்ற முறையில் இரு பக்க 'நிரப்பப்பட்ட Income Tax படிவமாக' A4 தாளில் Print செய்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் பொறுத்தவரை தங்களின் 2021 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களே போதுமானது.

DA (17% - 31%), CPS (10%) & 1 நாள் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிட்டுக் கொள்ளும்.

CPS பிடித்தத்திற்கு Arrear பிடிக்கப்பட்டுவந்தால் அதை மட்டும் உரிய மஞ்சள் கட்டங்களில் உள்ளிட வேண்டும்.

CPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது.

மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் காண்பித்து கழித்துக் கொள்ளலாம். NHIS / HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை உரிய மஞ்சள் கட்டத்தில் கொடுக்கவும்.

கொரோனா ஊரடங்கு நிவாரண ஒரு நாள் ஊதியம் தவிர கூடுதல் தொகையை 80G-ல் கழிக்க விரும்பினால், உரிய மஞ்சள் கட்டத்தில் நிரப்பவும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத காப்பீடுகளின் மொத்தத் தொகையை அதன் காப்பீட்டு எண்ணுடன் உரிய கட்டத்தில் நிரப்பவும்.

12 மாத Pay Drawn Particulars தானியங்கி முறையில் கணக்கிடப்படும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) திருத்தம் செய்து கொள்ளலாம்.

தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டும் தங்களுக்கான 12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினைக் கணக்கிட இயலும்.

இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளினாலான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும். அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) Print செய்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog