Breaking

Showing posts with label IMPORTANT. Show all posts
Showing posts with label IMPORTANT. Show all posts

Wednesday, December 29, 2021

December 29, 2021

பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை PFMS இணையத்தில் பதிவு செய்து Payment Advice எடுப்பதற்கான வழிமுறைகள் - Step By Step விளக்கம்

பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை PFMS இணையத்தில் பதிவு செய்து Payment Advice எடுப்பதற்கான வழிமுறைகள் - Step By Step விளக்கம் - Download here...

( குறிப்பு: தங்களது பள்ளிக்கு ஏற்றவாறு Vendor, Amount, Customized Name ஆகியவற்றை மாற்றி கொள்ளவும்) Instructions for registering grants for schools on PFMS website and taking Payment Advice - Step By Step Description (Note: Change Vendor, Amount, Customized Name to suit your school).

Tuesday, December 14, 2021

December 14, 2021

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி வெளியீடு!

2017-2018ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடைபெற்றது.

இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது.
Candidates who have appeared for the exam can download using the Step given below :

1. Go to : https://trbpolviewap.onlineapplicationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp

2. Enter Registration Number

3. Select Date of Birth

4. Select Date of Exam

5. Select Batch

6. Enter the Captcha letters

7. Click Submit

Saturday, December 11, 2021

December 11, 2021

அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன? - தற்காலிக பணி நீக்கம் என்றால் என்ன?

*🛑⚡அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன?* *💢தற்காலிக பணி நீக்கம் என்றால் என்ன?*

*⭕அரசு பணியில் இருக்கும் போது தவறு ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும்.*

*⭕இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.*

*⭕அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்கு குற்றம் செய்தவரை உட்படுத்தவும், விசாரணை முடியும் வரை அரசுப்பணியிலிருந்து ஒருவரை தற்காலிகமாக விலக்கி வைப்பதுமே தற்காலிக பணி நீக்கத்தின் நோக்கமாகும்.* *⭕தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டவர் விசாரணை முடித்து இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை அவர் அரசுப்பணியில் பணிபுரிபவராகவே கருதப்படுவார்.*

*⭕Tamilnadu civil Services (Discipline & Appeal) Rule 17(e) ன்படி, ஒருவரை தகுதியான அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.*

*⭕Removal, Dismissal போன்ற பெருந்தண்டனைகளை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் புரிந்ததாக கருதப்படுபவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கலாம். அல்லது ஒருவர் தொடர்ந்து அரசுப்பணி புரிவது இந்திய இறையாண்மைக்கோ, பொதுநலனுக்கு குந்தகமோ, பாதகமோ ஏற்படும் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கலாம்.*

*⭕இருப்பினும் தகுந்த காரணமும், முகாந்திரம் இன்றி ஒருவரை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை முடிந்தவுடன் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விதி 17(e)(6) ல் கூறப்பட்டுள்ளது.*

*⭕திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி சந்தேக மரணம் அடைந்தால், காவல் நிலையத்திலிருந்து இதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசு ஊழியரான கணவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என Govt. Lr. No - 95405/Per-87-2 P & A. R, Date - 23.3.1988 உள்ளது.*

*⭕பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு கீழ்கண்டவாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.* *G. O. Ms. No - 7681, P & A. R, date - 2.7.1979*

*Govt. Lr. No - 94184/Per-83-5 P&A. R, date - 1.7.1985*

*Govt. Lr. No - 20513/Per-N/89-1 P&A. R, date - 4.3.1989*

*G. O. Ms. No - 439, P&A. R, date - 27.7.1989*

*Govt. Lr. No - 75671/Per-N /92-1, P&A. R, date - 9.12.1992*

*G. O. Ms. No - 37, P&A. R, date - 3.2.1995*

*Govt. Lr. No - 97772/N/94-1/P&A.R, date - 24.3.1995*

*Govt. Lr. No - 73552/N/95-3/ P&A. ஏ, date - 9.11.1995*

*Govt. Lr. (Ms). No - 4/N/2000/P&A.R, date - 21.7.2000*

*Govt. Lr. No - 198 /P&A. R, date - 29.12.2005*

*G. O. Ms. No - 144, P&A. R, date - 8.6.2007*

*Govt. Lr. No - 70374/N/2007-2/P&A.R, date - 14.3.2008*

*⭕இதில் 8.6.2007 ஆம் தேதியிட்ட G. O. Ms. No - 144 என்ற அரசாணையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் போது என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.*

*⭕பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யக்கூடாது. தேவை இருந்தால் பணி ஓய்வு நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கையை துவக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு எடுக்கும் நடவடிக்கை போர்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.*

*⭕விடுப்பில் இருக்கும் அரசு ஊழியரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். இதற்காக அவர் விடுப்பு முடிந்து பணி ஏற்ற பிறகு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இல்லை. தற்காலிக பணி நீக்கம் செய்வதால் அவர் அனுபவிக்காமல் எஞ்சியிருக்கிற விடுப்பை ரத்து செய்து அவர் எடுத்த விடுப்பை, இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் ஆணை தேவையில்லை.*

*⭕ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதாக எதிர்காலத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் deemed suspension ல் வைக்க வேண்டும் (F. R. 54(B)* *⭕பொதுவாக பணி அமர்த்த அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பணி நீக்கம் சம்மந்தப்பட்ட ஆணைகளை வழங்க வேண்டும். யாரெல்லாம் தற்காலிக பணி நீக்கம் செய்ய அதிகாரம் உடைய அதிகாரிகள் என விதி 13 மற்றும் 14(a)(1) ல் கூறப்பட்டுள்ளது.*

*⭕இருந்தாலும் விதி 14(a)(1) ன்படி பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய பெருந்தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றம் இருந்தால் immediate higher officer கூட தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.*

*⭕தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விவரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.*

*⭕பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவர் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தாலோ அல்லது பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டியிருந்தாலோ "பணியமர்வு அதிகாரி" தவறு செய்தவரை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கி தற்காலிக பணி நீக்கத்திலேயே தொடர ஆணையிட வேண்டும். (F. R. 56(1)(c) மற்றும் G. O. Ms. No - 216, P&A. R, date - 1.9.1998)*

Wednesday, December 08, 2021

December 08, 2021

CPS - பிடித்த பணம் முதலீடு விபரம் கண்டுபிடிப்பு! இனியாவது பழைய ஓய்வூதியம் கிடைக்குமா?

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமி ருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய் வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என எதிர்பார்ப்பு எழுந்துள் ளது . தமிழக அரசு ஊழியர்களுக்கு , பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டுவருகிறது . புதிய ஓய்வூதியத் இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை அரசு ஊழி யர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது . இதனிடையே , 2003 - க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய் வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர் . இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ .44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21 - ஆம் ஆண்டுக் கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

2008 - ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு ( 2003 ) பிடித்தம் செய் யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப் பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்துவந்தது . இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய் வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ . 27 - ஆம் தேதி வழங்கப் பட்டது. ஆனாலும் , அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளி யிடப்படவில்லை . ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தில் ( எல்.ஐ.சி. ) முதலீடு : இந்நி லையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப் பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியி லும் , ஏல அடிப்படையிலான கரு வூலப்பட்டியிலும் ( Treasury Bill ) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த 2019 - ஆம் ஆண்டு மே 30 - ஆம் தேதி முதல் முறையாக ரூ .2,500 கோடி , ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது . தற்போதுவரை 8 தவணைகளில் ரூ .25,510 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது . அதற்கு வட்டியாக ரூ .2,759.13 கோடியுடன் சேர்த்து , மொத்தம் ரூ .28,269.13 கோடி உள் ளது . மேலும் , ஏல அடிப்படையி கருவூலப்பட்டியில் லான தற் போது வரை ரூ .16,500 கோடி முத லீடு செய்யப்பட்டுள்ளது . மொத் தம் ரூ .44,769 கோடி முதலீடு செய் யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது . இதன் மூலம் சுமார் ஆண்டுக ளாக அரசு ஊழியர்களிடம் பிடித் தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுல கிற்கு தெரிய வந்துள்ளது . இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம் : பிடித்தம் செய்யப் பட்ட பங்களிப்பு நிதியின் நிலவ ரம் குறித்து தெரியாததால் , கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும் , பணியின் போது உயி ரிழந்தும் , விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . தற்போது பங்களிப்பு நிதி முத லீடு செய்யப்பட்ட விவரம் , தக வல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால் , இனி யாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண் டும் என புதிய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள் ளது . இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங் கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங் கல்ஸ் கூறியதாவது : இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங் களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது . ஆனால் , தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம் , புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்த வொரு முடிவும் இறுதி செய்யப் படாமல் உள்ளது . புதிய ஓய்வூதி யத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில் , தமிழக அரசுக்கு சுமார் ரூ .23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம் . திமுகவின் தேர்தல் வாக்குறுதிப் படி , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் . இதன் மூலம் , புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன் பெறவும் , எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார் .

Sunday, November 28, 2021

November 28, 2021

PG Teachers Vacancy List - All District - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் :

அரசாணைாநிலைய எண் .18 , பள்ளிக் கல்வித் துறை , நாள் 01.02.2021 - ன்படி தரம் உயர்த்தப்பட்ட 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் விவரம் :

PG Teachers Vacancy List - All District - Download here...

Wednesday, November 17, 2021

Sunday, November 14, 2021

November 14, 2021

NHIS 2021 - புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான விரிவான தொகுப்பு

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 - தொடர்பான விரிவான தொகுப்பு :

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு , பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும்பொருட்டு , ஏற்கனவே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -2016 , 30.06.2021 உடன் முடிவடைந்ததை தொடர்ந்து , புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 அமல்படுத்தப்பட்டு , யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , 2021 - இல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன :

1.காப்பீட்டு காலம் :

மருத்துவ காப்பீட்டு வசதியானது , 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும்

2. காப்பீட்டு தொகை :

அரசாணை ( பல்வகை ) எண் .160 , நிதி ( ஊதியம் ) துறை , நாள் : 29.06.2021 இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .5,00,000 / - ( ரூபாய் ஐந்து இலட்சம் ) வரை வழங்கப்படும்.

இணைப்பு- IA- இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ .10,00,000 / - ( ரூபாய் பத்து இலட்ச வரை வழங்கப்படும்.

மேலும் அரிதான நோய்கள் மற்றும் சிகிச்சைகளுக்கு , ரூ .20,00,000 / - ( ரூபாய் இருபது இலட்சம் ) வரை , நிதிதுறைச் செயலாளர் , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும்.

கண்புரை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ஒரு கண்ணிற்கு ரூ .30,000 / வரையிலும் மற்றம் கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக ரூ .50,000 / - வரையிலும் வழங்கப்படும் .

3. காப்பீட்டு சந்தா தொகை :

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - 2021 - இல் , மாதாந்திர சந்தா ரூ .300 / ( ரூபாய் முன்னூறு மட்டும் ) ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பின் , இருவரில் யார் இளையவரோ , அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும்.

4.காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள் :

கீழ்கண்ட வகையில் நியமணம் பெற்று பணிபுரிபவர்கள் , இத்திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள்.

5. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கான காப்பீடு : ( i ) மேற்கண்ட அரசாணையில் உள்ள இணைப்பு- II இல் , அங்கீகரிக்கப்பட்ட 1169 மருத்துவமனைகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவ மனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா இணைப்பு -IA இல் சிகிச்சை ரூ .5 இலட்சம் வரையிலும் மற்றும் வகைப்படுத்தப்பட்டுள்ள 07 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பணச்செலவில்லா சிகிச்சை ரூ .10 இலட்சம் வரையிலும் வழங்கப்படும்.

( ii ) அரசாணையின் இணைப்பு- IV இல் குறிப்பிடப்பட்டுள்ள , சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் 180 வகையான பொருட்களுக்கான செலவு தொகைகள் , பணச்செலவில்லா சிகிச்சையின் வரம்பிற்குள் வராது.

( iii ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மை உடையது ( Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் , சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அத்தொகையில் , தகுதியான செலவுத் தொகையை மீளப்பெறலாம்.

( iv ) அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் , அரசாணையின் இணைப்பு -1 மற்றும் IA இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு , அச்சிகிச்சை அவசர தன்மையற்றது ( Non - Emergency Care ) எனக் கருதப்படும் பட்சத்தில் . சிகிச்சைக்கான தொகையை மருத்துவமனையில் செலுத்திய பின் , அச்சிகிச்சையை அங்கீகரிக்கப்பட்ட கடைநிலை ( Lowest Grade ) மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ஏற்படும் செலவீனத் தொகையில் 75 % தொகையை மீளப்பெறலாம்.

6. தகுதியான குடும்ப உறுப்பினர்கள் :

1. கணவன் ( அல்லது ) மனைவி .

2.குழந்தைகள் 25 வயது பூர்த்தி அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை - ( இதில் எது முன்னரோ

3. திருமணம் ஆகாத அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் . ( அரசு ஊழியருக்கு திருமணம் ஆகும் வரை )

4. விவாகரத்து குழந்தைகள் இல்லாத பெற்ற அரசு ஊழியருக்கு பட்சத்தில் , அவரது பெற்றோர்கள் . ( விவாகரத்து பெற்ற அரசு ஊழியர் மறுமணம் செய்துகொள்ளும் வரை )

5. அரசு ஊழியரை சார்ந்திருக்கும் குறைந்தபட்சம் 40 % சதவீத அளவில் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் வயது வரம்பின்றி .

7. காப்பீட்டு தொகை தொடர்பான குறைதீரப்பு முறையீடு :

இத்திட்டத்தில் சந்தாதாரர்கள் சிகிச்சை மற்றும் காப்பீட்டு தொகை பெறுவதில் ஏற்படும் குறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநரிடம் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களின் நகல்கள் மற்றும் தொகை மீளப்பெறுவதற்கான படிவத்துடன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனு செய்து முறையிடலாம். முறையீடு தொடர்பாக , மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு , தொகை மீளப்பெறுவது தொடர்பான தகுதி அறிக்கையுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நடைபெறும் மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தின் பரிந்துரைக்கு மேலனுப்பப்படும். மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவில் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் , சந்தாதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் , மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற குழுவிடமிருந்து பதில் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் , சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரிடம் மேல்முறையிடலாம்.

8.உதவி தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள் :

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - 2021 இன் விவரங்கள் அறிய , அரசாணையின் இணைப்பு- v இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ( 1800 233 5666 ) தொடர்பு கொள்ளலாம். அவ்விணைப்பில் , காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையிட முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளன . மேலும் இணைப்பின் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரிகளின் ( Nodal Officers ) அலைபேசி சி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன . இணைப்பு : மேற்கண்டவாறு...

NHIS 2021 Full Details pdf - Download here...

Sunday, October 24, 2021

October 24, 2021

ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு!

பென்ஷன் வாங்குவோர் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கபட்டுள்ளது. இப்போது எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

பென்ஷன்:

இந்தியாவில் ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்டுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் பேருதவி புரிகிறது. வேலையை விட்டு நின்ற பின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அரசு வழங்கும் பென்ஷன் தொகை மூலம் வாழ்க்கையை நடத்தலாம். பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல் தற்போது எளிய ஒன்றாக மாறி விட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்பிக்கலாம். தபால்காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார்கள். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகிறது. doorstepbanks.com அல்லது www.dsb.imfast.co.in/doorstep/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது மூலம் வங்கி அதிகாரி நீங்கள் சொன்ன தேதியில் உங்களை தேடி வந்து ஆயுள் சான்றிதழை ஜீவன் பிரமான் ஆப் மூலமாகப் பெற்றுச் செல்வார்.

மேலும் Doorstep Banking மொபைல் ஆப்பையும் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரனாகிலு 18001213721 மற்றும் 18001037188 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்தாண்டு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தனியா முறையாக செய்திருந்தால் தான் பென்ஷன் தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 16, 2021

October 16, 2021

CPS இரத்து செய்யப் படுவதற்கான அரசின் நிலைப்பாட்டை விளக்கி அரசு சார்பு செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்

C. P. S. இரத்து செய்யப் படுவதற்கான அரசின் நிலைப்பாட்டை விளக்கி அரசு சார்பு செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்

Sunday, October 10, 2021

October 10, 2021

பள்ளி திறப்பதற்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் ( சரி பார்ப்புப் பட்டியல் ) -pdf Before School Reopen - BEO's Visit Check List

நவம்பர் 1 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்களுக்கான படிவம். ( சரி பார்ப்புப் பட்டியல் )

Before School Reopen - BEO's Visit Check List - Download here...
October 10, 2021

நீட் தேர்வு தொடர்பாக A.K ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் எடுக்கப்பட்ட முழு விபரம் - தமிழக அரசு வெளியீடு

Friday, October 08, 2021

October 08, 2021

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

1. பார்வையில் காணும் கடிதங்களுக்கு உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.

2. கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாத காரணத்தினாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ உண்மையான அட்டைதார்களுக்கு இன்றிமையாப் பண்டங்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

3. இது தொடர்பாக குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு கூடுதலாக கீழ்காணும் அடுத்த நிலை, படிப்படியான, தெளிவான. சுலபமான வழிகாட்டு முறைகள் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமே இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும். 4. நியாய விலைக்கடைகளுக்கு வருகைத் தரும் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தில் இணைய இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மறுக்கப்படாமல் தொடர்ந்து விநியோகிக்கப்பட வேண்டும்.

5. வயது முதிர்ந்த அல்லது மாற்றுத்திறனாளி அல்லது இதர அட்டைதாரர் நியாய விலைக்கடைக்கு அத்தியாவசியப் பொருள் பெற வருகைத் தரும் போது, முதற் கட்டமாக நட்பு முறையில் கனிவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்று அவரது குடும்ப அட்டையினை ஸ்கேன் செய்து விரல் ரேகை சரிபார்க்க வேண்டும்.

6. விரல் ரேகை பதிவுகள் சரியாக உள்ள அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருள் உடனடியாக வழங்கப்படுகிறது. அதே போல் விரல் ரேகை தெளிவின்மை காரணமாக விரல் ரேகை படிப்பி முறை தோல்வி அடையும் பட்சத்திலும் (Fallure of Bio Metric Authentication) அடுத்த கட்டமாக எவ்வித தடையுமின்றி உடனடியாக விநியோகம் மேற்கொள்ள வேண்டும்.

7. வயது முதிர்ந்த மாற்று திறனாளியாக உள்ள அட்டைதாரர் கடைக்கு வருகைத் தர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக பொருள் பெற விரும்பி படிவம் பெற வருவாராயின் அவருக்கும் உடனடியாக இதர வழிமுறைகளின்படி பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும். 8. அதன் பின்னர் அவரிடம் proxy விண்ணப்ப படிவத்தைக் கொடுத்து அனுப்பலாம்.

9. அடுத்த முறை வருகையில் அவர் proxy விண்ணப்ப படிவத்தை நிரப்பி கடைக்காரரிடம் கொடுக்கலாம் அல்லது மேலும் கால அவகாசம் கோரலாம்.

10. இவ்வாறு விரல் ரேகை சரிபார்ப்பு இன்றி விநியோகம் மேற்கொள்ளப்படுவதனை ஒரு பதிவேட்டில் பதிந்து பொருள் பெற்று செல்பவரின் கையொப்பத்தினை அப்பதிவேட்டில் பெற வேண்டும். யார் பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிந்து கொள்வதற்காகவும் பின்னர் தேவையான பொழுது சரிபார்ப்பதற்காகவும் இப்பதிவேட்டில் பதிவு செய்வது அவசியமாகிறது.

11. அது குறித்து கள அலுவலர்கள் தனியே விசாரித்து கொள்ளலாம்.

12. தொழில் நுட்ப காரணங்களால் AUA (ஆதார் சரிபார்க்கும் இணைப்பு கிடைக்க பெறாமை) வயது குறைந்தவர்கள் கூட ஆதார் இணைப்பு பெற இயலாத சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. இதனால் பல குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நீண்ட வேளை நிற்க நேரிடுகிறது. அதனை தவிர்க்கும் பொருட்டு அரைமணி நேரம் வரையில் காத்திருந்தும் இணையதளத்தில் ஆதார் இணைப்பு பற இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய தொழில்நுட்ப சிக்கல் சரியாகும் வரை இதர வழிமுறைகளின்படி அப்பொழுது பொருள் வாங்க வந்தவர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும். 13.விற்பனை முனைய இயந்திரத்தில் இவ்வாறு விரல் ரேகை படிப்பி சரிபார்ப்பு இல்லாது பட்டியிலிட்டு வழங்க உரிய வசதிகள் ஏற்கனவே உள்ளது. இந்த அறிவுரைகளை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும், கடைகள் தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்களுக்கும் எடுத்து கூறி உண்மையான தேவையுள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி அட்டைதார்களுக்கு உணவுப் பாதுகாப்பு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக இக்காரணங்களை குறிப்பிட்டு வயதான / மாற்றுத்திறனாளி எவருமோ அல்லது அவரது பிரதிநிதியோ நியாப விலைக்கடைக்கு வருகை தரும் போது அவர்களுக்கான உணவுத் தேவை உடனடியாக வழங்குவது தொடர்புடைய அனைவரின் கடமையாகும் என்பதனை அன்புடன் நினைவூட்ட விழைகிறேன்.

14. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் ஐயம் இருப்பின் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டுவரலாம் அதுவரை அவ்வாறான ஐயத்தின் மாற்றுத்திறனாளிகள் நன்மை கருதி செயல்படுத்த வேண்டும்.

Tuesday, October 05, 2021

October 05, 2021

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டுதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தெளிவுரை வழங்குதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.05/10/2021

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டுதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் தெளிவுரை வழங்குதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்.05/10/2021
உயர்கல்வி பயில(ஆராய்ச்சி படிப்புகளான எம்.பில்/பி.எச்டி தவிர்த்து) அனுமதி கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

1) படிவம்

2) நியமனம்,பணிவரன்முறை மற்றும் தகுதிகான் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல்கள் மற்றும் அது பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்கத்தின் புகைப்பட நகல்

3) உயர் கல்வி பயில்வதற்கு தேவையான முன் கல்வி சான்றுகளின் (qualified studies) நகல்கள்

4) உயர்கல்வி பயிலவுள்ள பல்கலைகழகத்தின் விளம்பரத்தின் நகல். 5) பணிப்பதிவேட்டின் முதல் மற்றும் இரண்டாம் பக்கங்கள்

6) கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் உயர்கல்வி பயில(ஆராய்ச்சி படிப்புகளான எம்பில்/பி.எச்டி ஆகியவற்றிற்காக) அனுமதி கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்

1) படிவம்

2) நியமனம், பணிவரன்முறை மற்றும் தகுதிகான் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல்கள் மற்றும் அது பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்கத்தின் புகைப்பட நகல்

3) உயர் கல்வி பயில்வதற்கு தேவையான முன் கல்வி சான்றுகளின் (qualified studies) நகல்கள்

4) உயர்கல்வி பயிலவுள்ள பல்கலைகழகத்தின் விளம்பரத்தின் நகல்.

5) பணிப்பதிவேட்டின் முதல் மற்றும் இரண்டாம் பக்கங்கள்

6) வழிகாட்டி கடிதம்(GUIDE LETTER MUST)

7) பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயிலவுள்ள பாடம் யுஜிசி(University Grants Commission) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ள என்பதற்கான ஆதாரம் 8) கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம்

Total Pageviews

Search This Blog