Breaking

Showing posts with label TAMIL NADU ENGINEERING ADMISSION. Show all posts
Showing posts with label TAMIL NADU ENGINEERING ADMISSION. Show all posts

Friday, May 05, 2023

Sunday, March 26, 2023

March 26, 2023

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இருந்த தடையை ஏஐசிடிஇ நீக்கியுள்ளது. மேலும், சேர்க்கை இடங்கள் அதிகரிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் வழங்கியுள்ளது.

நம் நாட்டில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை வகுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஏஐசிடிஇ ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை வரும் 2023-24-ம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதையடுத்து போதிய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் கல்லூரிகள் தொடங்க உரிய விதிகளின்படி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்.

எனினும், வளரும் தொழில்நுட்பப் படிப்புகள் தொடங்குதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை அந்த கல்வி மையங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுதவிர சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 360 வரை கல்லூரிகள் உயர்த்திக் கொள்ளலாம். புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

அதன்படி 50 சதவீத மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளுக்கும் இனி செயற்கை நுண்ணறிவு உட்பட வளரும் தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனுமதிக்கப்படும். எனினும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை, அந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் 3 முதன்மைப் படிப்புகளை ஏற்கெனவே கொண்டிருக்க வேண்டும். ஆலோசகர்கள் நியமனம்: பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிஎம் கேர் சூப்பர் நியூமரரி சேர்க்கை திட்டம் தொடரப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க கல்லூரிகளில் பிரத்யேக ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பல்கலை.கள் மற்றும் ஆய்வு மையங்களுடன் நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறவும், நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

Tuesday, August 16, 2022

August 16, 2022

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

பொறியியல் தரவரிசை பட்டியலில் 133 பேர் 200-க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர்.

2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். இதில் ரஞ்சிதா, ஹரிணிகா, லோகேஷ் கண்ணன் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிருந்தா, ரோகித், அனிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

விளையாட்டுப் பிரிவில் 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் மமதிஷியா, கார்த்திகேயனி, ரிஷப் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

Tuesday, August 02, 2022

August 02, 2022

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும். அவர்களுக்கு பின்னால் இருக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும். அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த இடம் தனக்கு தேவை எனவும், அடுத்த சுற்றில் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேற்று 250 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 146 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

Monday, August 01, 2022

August 01, 2022

TAMIL NADU ENGINEERING ADMISSION - 2022 - Download Sports Certificate Verification Schedule - II

PLACE: ANNA UNIVERSITY, GUINDY CAMPUS, CHENNAI - 25

The Phase -II Schedule for Sports Certificate Verification for Sports Category is given below.

All the Students who have applied for SPORTS QUOTA are informed to attend the certificate verification IN-PERSON, along with all their ORIGINAL SPORTS Certificates and relevant forms at Center for Entrance Examinations and Admissions - Annex, ANNA UNIVERSITY, GUINDY CAMPUS, CHENNAI -25 as per the given schedule (Date and Time). COVID-19 prevention protocol will be strictly followed



CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog