Breaking

Showing posts with label salary. Show all posts
Showing posts with label salary. Show all posts

Thursday, January 15, 2026

Friday, December 05, 2025

Monday, December 01, 2025

Friday, May 30, 2025

Tuesday, April 29, 2025

Monday, April 21, 2025

Monday, March 17, 2025

Wednesday, October 09, 2024

Thursday, April 25, 2024

Saturday, December 16, 2023

December 16, 2023

சம்பள பட்டியல் தயாரிப்பில் சவாலாகும் சர்வர் பிரச்னை மனஉளைச்சலில் அலுவலர்கள்



சம்பள பட்டியல் தயாரிப்பில் சவாலாகும் சர்வர் பிரச்னை மனஉளைச்சலில் அலுவலர்கள்

தமிழகத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் சர்வர் பிரச்னை காரணமாக சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்வதில் கல்வித்துறை அலுவலர்கள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். மாதம் 15 தேதிக்கு மேல் வரும் திங்களில் சென்னை, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக ஆன்லைனில் ஆசிரியர், அலுவலர்களுக்கான சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். 24 மணிநேரத்தில் பில் ஜெனரேட் ஆனபின் அதற்கான தகவல் தெரிவிக்கப்படும். பின் 25 தேதிக்குள் கருவூலத்தில் ஒப்படைத்தால் தான் சம்பளம் பெற முடியும்.

ஆனால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்வதால்பெரும்பாலும் சர்வர் முடங்கியே கிடப்பதும்,நள்ளிரவுக்கு மேல்சர்வர் வேலை செய்வதும்அலுவலர்களை மனஉளைச்சலில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் டிச., 24 முதல் சர்வர் புதுப்பிக்கப்படவுள்ளதால் டிச., 8 க்குள் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்ப பிரச்னையால் இதுவரை பதிவேற்றப் பணிகள் முடிந்தபாடில்லை என ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர். சவாலாக உள்ளது அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் இந்த சர்வர் பிரச்னையால் அரசு அலுவலர்கள் படாதபாடு படுகின்றனர். 95 சதவீதம் நள்ளிரவில் தான் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த சர்வரை கையாளும் தனியார் நிறுவனம் 15 ம் தேதிக்கு பின் தான் ஆன்லைனில் பதிவேற்ற முடியும் என தெரிவித்து வந்த நிலையில்இம்மாதம் மட்டும் 8 முதல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இருந்தே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கலாமே. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பதிவேற்றம் நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்திலும் ஆன்லைன் வேலை செய்வதில்லை. உதவிபெறும் பள்ளிகளுக்கு இப்பணி மேலும் சவாலாக உள்ளது. இம்முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.

Wednesday, October 04, 2023

October 04, 2023

பணிக்கு செல்லாத இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் - பள்ளி கல்வித்துறை

பணிக்கு செல்லாத இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் - பள்ளி கல்வித்துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை பதிவு ஆசிரியர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி!

மாநிலம் முழுவதும் இன்று எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்காத இடைநிலை ஆசிரியர்கள், பயிற்சி அளிக்க பணிக்கு வராத இடங்களை வைத்து ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இடைநிலை பதிவு ஆசிரியர்களிடம் கேட்டபோது,

“அது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும் சம்பளம் பிடிப்பதனால், எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, June 13, 2023

Saturday, June 10, 2023

Monday, June 05, 2023

Wednesday, May 17, 2023

Monday, May 01, 2023

Saturday, April 08, 2023

April 08, 2023

ஆசிரியர்கள் சம்பள பிரச்னை; கமிஷனரிடம் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் சம்பள பிரச்னை; கமிஷனரிடம் வலியுறுத்தல்

'மதுரையில் மாநகராட்சி ஆசிரியர்களுக்கு தவறான கணக்கீடால் சம்பளம் குறைவாக வழங்கப்பட்டுள்ள பிரச்னைக்கு மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்கிற்கு அனுப்பிய மனு: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களின் வங்கி கணக்கை சரிபார்த்தபோது மார்ச் சம்பளம் பல்வேறு பிடித்தங்களில் தவறான முறையில் பிடித்தம் செய்யப்பட்டு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்விப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை மீண்டும் பெற்றுத்தரவும், கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Friday, January 13, 2023

January 13, 2023

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள் உரிய காலத்தில் சம்பளம், பொங்கல் போனஸ் எடுக்க முடியாத வகையில் IFHRMS வெப்சைட் முடங்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) வெப்சைடில் பில்களை ஏற்றி கருவூலகம் வழியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களை காட்டிலும், ஆசிரியர்கள் வெப்சைட் உடன் போராட வேண்டியுள்ளது.தற்போது பொங்கல் போனஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர். போனஸ் பெறுவதற்காக இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சில நாட்களாக இந்த வெப்சைட் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம், போனஸ் பெற முடியாமல் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியது:தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) சாப்ட்வேர் தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு தனியார் நிறுவனம் வசம் தரப்பட்டது. அந்நிறுவனமும் சம்பள பில் தயாரிக்கும் ஊழியர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெப்சைட்டில் சிக்கல் ஏற்பட்டால், சென்னையில் தான் கேட்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக 4 மாதமாக சம்பளம் பெற முடியாத நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் உள்ளனர். அரசு இத்திட்டத்தை அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Sunday, January 08, 2023

January 08, 2023

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாளன்று அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபா் மாதம் நிலவியது.

இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், பணியாளா்கள் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்பதும் தற்போது தெரியவருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

Monday, January 02, 2023

January 02, 2023

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு : மாநில பொதுச்செயலர் தகவல்

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு : மாநில பொதுச்செயலர் தகவல்

''தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளத்தை இழந்து வருகின்றனர்,'' என, தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் கே.காமராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

பழைய பென்ஷன் திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, உயர்கல்விக்கான ஊக்க உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை சிறிதும் கண்டு கொள்ளாததால், தி.மு.க., அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'ஜாக்டோ --- ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி ஜன., 5 மாலை மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும். மேலும் 2009 மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவித சம்பளமும், 2009 ஜூன் 1க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மற்றொரு சம்பளம் வழங்கப்படுகிறது.

இதனால் அடிப்படை சம்பளத்தில் மாதத்திற்கு 3,170 ரூபாயை 20 ஆயிரம் ஆசிரியர்கள் இழந்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் இதை நன்கு பரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில தலைவர் ஜோசப் சேவியர், சிவகங்கை தலைவர் ராமராஜ், பொருளாளர் பாண்டியராஜன் உடனிருந்தனர்.

Total Pageviews

Search This Blog