Breaking

Showing posts with label NEWSPAPERS. Show all posts
Showing posts with label NEWSPAPERS. Show all posts

Monday, July 31, 2023

July 31, 2023

Veritikodi - அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ்!



'Veritikodi' student newspaper to increase reading ability of government school students - Minister Anbil Mahes! - அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது. பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

Tuesday, May 16, 2023

Monday, August 08, 2022

August 08, 2022

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

அரசுப் பள்ளிகளில் ஆக. 12 முதல் விழிப்புணா்வு வாரம்

தமிழக அரசுப் பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு, சமூகநலன், காவல் துறை சாா்பில் ஆக.12-ஆம் தேதி முதல் விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஆக.11-ஆம் தேதி விழிப்புணா்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், ஆக. 12 முதல் 19 வரை மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணா்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை: பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், பற்றாக்குறைகள், குழந்தை பருவ நோய்கள், தாமதமான வளா்ச்சி மற்றும் குறைபாடுகள் குறித்தும் அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும். வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணா்வு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக நலத்துறை: சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுதல், குழந்தை திருமண தடை சட்டம், மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல், இளஞ்சிறாா் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். காவல்துறை: போதைப் பொருள்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மேற்கூறியவை மட்டுமின்றி, மாணவா்களுக்கான அவசர உதவி எண் - 1098, பள்ளிக் கல்வித்துறையின் மாணவா் உதவி எண் 14417 ஆகியவை குறித்தும் தெரியப்படுத்தப்படவுள்ளது.

ஆக. 11-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணா்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும். போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்து மாணவா்களுக்கான கட்டுரை, ஓவியம், வினா- விடை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

Sunday, February 06, 2022

February 06, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்-1க்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு: ஓட்டுப்பதிவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு

தமிழகத்தில் நடைபெற வுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடிகளில் பணியாற்ற அனைத்து துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங் கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. இவர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி நடத் தப்படவுள்ளது. இதனிடையே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது டன் வாக்குப்பதிவில் கால தாமதம் ஏற்படும் என சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்குள் பெரும் பாலும் ஆசிரியர்கள் தான் பணியமர்த்தப்படு கின்றனர். இதில், வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆக பணிபுரிபவர்களுக்கு வாக்காளர்களைஅடையாளம் கண்டறிவது. வாக்காளர் பட்டிய லில் குறிப்பிடுதல், ஆண், பெண் வாக்காளர் களை பிரித்தறிவது மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு உதவி புரியும் பணி கள் வழங்கப்படும். ஏற்கனவே நடந்த பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முதல் கடந்த ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தல் வரை இந்த அடிப்படை யில் தான் பணி வழங்கப்பட்டது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. அதில், வாக் குச்சாவடி அலுவலர் -1க்கு கூடுதலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பதிவேட் டில் வாக்காளரின் விபரங்களை பதிவு செய்து, கையொப்பம் பெறுவது, வாக்களிப்பதற்கான ஆவணங்களை பதிவேட்டில் பதிவு செய்வது, வாக் காளர்களுக்கு துண்டுச் சீட்டு (சிலிப்) வழங்குவது என கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்-1 க்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் வாக்குப்பதிவிற்கும் கூடுதல் கால தாமதம் ஏற்படும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர் -1 க்கு ஏற்கனவே உள்ள பழைய பணிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கூடுதல் பணிக்காக, கூடுதலாக வேறு ஒரு வரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

Monday, December 06, 2021

December 06, 2021

பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்

'பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அமைப்பின் நிறுவனர் மாயவன், செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம் மாசிநாயக்கன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒழுங்கீன நடவடிக்கையை கண்டித்ததால் ஆசிரியை இந்திராவை, மாணவர் தாக்கியுள்ளார். அவரின் செயலை ஆசிரியர்கள் கண்டிக்கிறோம்.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதும், ஆசிரியர்களுக்கு தக்கப்பாதுகாப்பு கொடுப்பதும் கல்வித்துறையின் கடமை. அம்மாணவரை அப்பள்ளியில் இருந்து விடுவித்து, வேறு பள்ளிக்கு அல்லது சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.தாக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாக அவ்வூர் மக்கள் அணிதிரண்டு வந்திருப்பதை பாராட்டுகிறோம்.நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக சட்டம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
December 06, 2021

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் : பள்ளிக்கல்வித் துறை தகவல்

பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் 23-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய முறையில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி போதுமான இடமின்றி இயங்கிவரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம். எனினும், இட வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இதுதவிர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும். பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 17, 2021

November 17, 2021

37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்தது உயர்கல்வித்துறை!!

அரசு கலை - அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித் தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்தது உயர்கல்வித்துறை. புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு கலை - அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித் தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக உயர்கல்வித்துறை நியமித்துள்ளது. தமிழகத்தில் தனியார், அரசு கல்லூரிகள் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. பொதுவாக ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக உள்ள பேராசிரியர் அதற்கு முன்பு வேறு ஒரு தனியார் கல்லூரியில் உயரிய பதவியை பெற்று உள்ளவராக காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார். ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரகம்பட்டி, வானூர் ஆகிய அரசு கல்லூரிகளுக்கும் கல்லூரி முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Monday, November 15, 2021

November 15, 2021

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்தாண்டுக்கு தள்ளிப் போகிறது?

தினமலர் செய்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

.தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், விருப்பமான இடங்களுக்கு மாறுதல் பெறுவதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு மாற்றலாமா என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், பள்ளிகள் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் பணிகள் நடக்காமல், மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது.அதை மீட்டெடுக்கும் வகையில், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுக்கும் வகையில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை அரசு துவங்கியுள்ளது. மேலும், பள்ளிகளை நவ., 1ல் திறந்த நிலையில் மறுநாளே மூடப்பட்டது. தீபாவளி மற்றும் மழை காரணமாக தொடர்ச்சியான விடுமுறை விடப்பட்டது.பாடங்களை இன்னும் நடத்த துவங்கவில்லை. அதற்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளித்தால், சரியாக இருக்காது என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், திடீரென ஆசிரியர்களை மாற்றினால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tuesday, August 24, 2021

August 24, 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை

பத்திரிக்கை செய்தி....

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தை பதிவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Tuesday, August 10, 2021

August 10, 2021

அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும் - எங்கள் தலையில் ரூ.2.60 லட்சம் கடன்: பொதுமக்கள் குமுறல் - தினமலர் பத்திரிகை செய்தி

அரசு ஊழியர் சம்பளம், பென்ஷன் இந்திய அளவில் தமிழகம் போல எங்கும் கிடையாது - எங்கள் தலையில் ரூ.2.60 லட்சம் கடன்: பொதுமக்கள் குமுறல் - அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும்
அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும்

பொதுமக்கள் மேலும் கூறுகையில், அரசு ஊழியர்கள் சம்பளத்தை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க முதல்வர் ஸ்டாலினுக்கோ, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ தைரியமில்லை.
எந்த அரசும் நிதி சுமையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர் சம்பளத்தை குறைக் காதது இத்தகைய நிதி பிரச்னைக்கு காரணம். எனவே தற்போதைய நிதி சுமையை சீர்படுத்தவேண்டுமானால் அரசு ஊழியர்களின் சம் பளத்தை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும். இது தமிழகத் திற்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, August 03, 2021

August 03, 2021

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் ( RTE ) மாணவர்களை சேர்க்க ஆகஸ்ட் 13 வரை அவகாசம்.

மெட்ரிக் கல்வி இயக்குநரகத்தின் கோரிக்கையை ஏற்று கல்வித்துறை உத்தரவு.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஆர்.டிஇ. எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8,000-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

ஜூலை 5 முதல் ஆக.3 வரை ஆர்.டி.இ.யின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 73 ஆயிரத்து 86 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையிலும் ஊரடங்கை கருத்தில் கொண்டும் கால அவகாசத்தை வரும் 13ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, July 28, 2021

July 28, 2021

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 5 மாதமாக காத்திருக்கும் 576 சிறப்பு ஆசிரியர்கள் - பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 5 மாதமாக காத்திருக்கும் 576 சிறப்பு ஆசிரியர்கள் - பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை

தமிழகத் தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த 576 தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு, உடனடி யாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக பள்ளிக்கல் வித்துறையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க,நடுநிலை, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. மாண வர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர்கள் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமும் நியமிக்கப்பட்டு வருகின்ற னர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி என பல்வேறு சிறப்பு ஆசிரியர் நியமனமும் நடை பெற்று வருகிறது. காலியாக உள்ள தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளி யானது. இதனைத்தொடர்ந்து நடப்பாண்டு (2021) பிப்ரவரி மாதம் சான்றி தழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், பணி நியமன ஆணை ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, இதனை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள்கழ கத்தின் மாநில பொதுச் செயலாளர் அப்துல்ரஹ் மான் கூறுகையில், “தமிழக அரசுப்பள்ளிகளில் காலி யாக உள்ள 327 ஓவியம் மற்றும் 249 தையல் ஆசி ரியர் என மொத்தம் 576 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும், கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஓவிய ஆசிரியர்களுக்கும், 12ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் சரி பார்ப்புபணிகள் நடந்தன. அப்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2, தொழிலாசிரியர் (டிடிசி) சான்றிதழ் மற்றும் தமிழ்வழிச்சான்று என அனைத்தும் சரிபார்க் கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் பணிநிய மன ஆணை வழங்கப்பட வில்லை.இதனால், கடந்த 5 மாதங்களாக ஆசிரியர் கள் காத்திருக்கின்றனர். எனவே, அனைவருக்கும் உடனடியாக பணிநிய மன ஆணைகளை வழங்க வேண்டும். இதனை வலி யுறுத்தி, தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட் டுள்ளது. இதேபோல், தொழிலாசிரியர்களுக் கான டிடிசி பயிற்சி மற்றும் தேர்வு பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Tuesday, July 27, 2021

July 27, 2021

ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு - அனைத்து ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

July 27, 2021

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப் புத்தகங்களின் கதி

சமச்சீர் கணினி அறிவியல் பாடப் புத்தகங்களை குப்பைகளாக மாற்றிவிட்டது முந்தைய அரசு...

நன்றி: தீக்கதிர்

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப் புத்தகங்களின் கதி
ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப் புத்தகங்கள் குப்பைக் கூலமாய் அரசு கிடங்கில் உள்ளதாக கணினி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.

2011-12-ஆம் ஆண்டு 28 லட்சம் மாண வர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப் பட்ட கணினி பாடப்புத்தகம் இன்று வரை வழங்கப்படாமல் ஆட்சி மாற்றம் காரண மாக அரசுக் கிடங்குகளில் குப்பையாக கிடக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்தி ருந்தோம். அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர் பணியிடம் கூட வழங்கப்பட வில்லை. கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் இருந்து கணினி அறிவியல் பாடத்திட்டம் அமலாக்கப்பட்டு வருகின்றன. கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படு கின்றனர். கணினி அறிவியலைக் கற்பிக்கும் முதல் மாநிலமாக கேரளா விளங்குகிறது. ஒன்றிய பாஜக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி வழங்குவதற்காக கணினி ஆய்வகம் அமைக்க ரூ.900 கோடி ஒதுக்கி பயன் படுத்தாமல் எட்டு ஆண்டுகள் கழித்து ஒன்றிய அரசுக்கே திருப்பி உள்ளது.

மா.பா. பாண்டியராசன் கல்விஅமைச்சராக இருந்த போது அந்த நிதியை மீண்டும் பெற்றுத் தந்தார். மீண்டும் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தாமல் 2019-ஆம் ஆண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது. கணினி அறிவியல் பாடம் தனி பாடமாக இல்லாமல் புதிய பாடத்திட்டத்தில் மூன்று பக்கம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அமைச்சர்கள் மாறி மாறி வந்தாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி பாடத்திட்டம் சென்றடையவில்லை. 2011-ஆம் ஆண்டு 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதிமுக அரசு நியமித்தது. அதிலும் குளறுபடிகள் உள்ளன. கிட்டத்தட்ட 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.

Thursday, July 22, 2021

July 22, 2021

பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பும் தாக்கமும்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-2

மத்திய அரசு வெளியிட்ட 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 15 லட்சம் பள்ளிகளில் 26.4 கோடி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். இதில் இந்திய அளவில் மாணவ சேர்க்கைக்கான மொத்தப் பதிவு விகித குறியீடு (Gross Enrolment Ratio) தொடக்கப் பள்ளி அளவில் 102.7% என்றும்; நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை 89.7% என்றும் உள்ளது. இதுவே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தொடக்கப் பள்ளிகளில் 98.9% என்றும், நடுநிலைப் பள்ளிகளில் 96.5% என்றும் உள்ளது. மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கும், மொத்த பதிவு விகிதத்துக்கும் நெருங்கிய தொடர்பொன்று உள்ளது. அதாவது, மொத்த பதிவு விகிதமென்பது (GER) பள்ளிப் படிப்பில் இருந்து ஒருநிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்களின் ஒட்டுமொத்த விகிதத்தை குறிக்கும். இது குறையும்போது மொத்த மாணவ, மாணவியர் எண்ணிக்கையில் குறைவுகள் ஏற்படும். அந்த வகையில் இது இரண்டுக்கும் உண்டான இடைவெளியை வைத்து, அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையானது எந்தளவுக்கு குறைகிறது என்பதை நாம் அறியலாம். எந்தளவுக்கு இந்த விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு குழந்தைகள் மத்தியில் நாம் கல்வியறிவை அதிகரிக்கிறோம் என அர்த்தம். இந்த GER-ல், தமிழகத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேரும் 98.6 விகித மாணவர்கள் - 99.3 விகித மாணவிகள் தங்களின் அடுத்த நிலையான நடுநிலை கல்விக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 66.3 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 80.6 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களின் அடுத்தகட்ட உயர் கல்விக்கு செல்கின்றனர். அதாவது, மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் சிலர், தங்களின் உயர்க்கல்வி படிப்புகளுக்கு செல்வது தமிழகத்தில் குறைவாக குறைகிறது. இதனால் 12-ம் வகுப்புக்கு பிறகான படிப்பே கேள்விக்குறியாகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன்மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10 ம் வகுப்போடு தங்களின் பள்ளிக்கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 ஆக உள்ளது. இதை இந்திய அளவில் பார்த்தால், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளின் இடைநிற்றல் விகிதமானது 16 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 2.6 சதவிகிதமும்; 1 முதல் 5 வரையிலான ஆரம்பப் பள்ளிகளில் 1.5 சதவிகிதமும் உள்ளது. அதாவது, 10-ம் வகுப்புக்குப் பின் பல மாணவர்கள் 11, 12 வகுப்புக்கு செல்வதில்லை; அல்லது பலர் 10-ம் வகுப்பை முடிப்பதேயில்லை. இதேபோல் தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 1.4 சதவிகிதமாகவும், மாணவிகளில் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவிகிதமாகவும் உள்ளது. இதுவே உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகளை விட மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றல் 5.6% ஆகவும், மாணவர்களின் இடைநிற்றல் 13.4% ஆகவும் இருந்துள்ளனர். இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 3.3 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிகையில் குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இடைநிற்றல் விகிதமானது 14.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், பீகாரில் 21.4 சதவிகிதம் இடைநிற்றல் விகிதம் உள்ளது. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக பள்ளிகளும் அதிக மாணவர் சேர்க்கையும் உள்ளதென்பது இங்கே கவனிக்கத்தக்கது. வேதனை என்னவென்றால், அங்கும் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ மாணவியரும் அதிகம். அருணாச்சலப் பிரதேசம், அசாம், போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் விகிதம் 30%-க்கும் அதிகமாக உள்ளன. குஜராத், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவின் விகிதத்தை விட அதிகமான இடைநிற்றல் விகிதத்தை பெற்றுள்ளன. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவில் இடைநிற்றல் காணப்படும் மாநிலம் பஞ்சாப். பஞ்சாபின் இடைநிற்றல் விகிதம் 1.5% மட்டுமே. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிகையும், இடைநிற்றல் விகிதமும் மேலும் அதிகரித்து வருவதாக கல்வியலாளர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் இடைநிற்றல் விகிதத்தை எடுத்துக்கொண்டால், மாணவர்களை விட மாணவிகளின் இடைநிற்றல் விகிதமானது 2% குறைவாக உள்ளது. இடைநிற்றலுக்கான மற்றுமொரு காரணமாக, உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைவும் அமைகிறது. அதாவது, இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் 81.1 சதவிகித மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 80.1% மாணவர்களும், 82.3% மாணவிகளும் அடங்குவர். தமிழகத்தில் 90.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 94.4% பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களைப் பொறுத்தவரை, நடுநிலைப் பள்ளிகளில் 99.6% பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.7% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அசாம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உயர்நிலைப் பள்ளிகளில், மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இப்படியாக ஒரு வகுப்பில் தேர்வில் தோல்வி பெறும்போது, அவர்கள் இடையிலேயே பள்ளிப்படிப்பை மொத்தமாக முடித்துக்கொள்கின்றனர். இதுபோன்ற சூழலை தடுக்கவே தமிழகத்தில் 8ம் ஆண்டு வரை கட்டாய தேர்ச்சி உள்ளதென்பது நினைவுகூறத்தக்கது. இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் (97.9), இரண்டாவது இடத்தில் கேரளா (92.0), நான்காவது இடத்தில் மணிப்பூர் (90.1) உள்ளது. புதுச்சேரி 89.9 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இக்காரணத்தினால், இங்கெல்லாம் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவ, மாணவியர் பிற மாநிலங்களைவிட கொஞ்சம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது மொத்தமாக 2.8 சதவீதமாக உள்ளது. இதில், 2.9 சதவிகிதம் பெண்களும், 2.7 சதவிகிதம் ஆண்களும் அடங்குவர். இந்திய மாநிலங்களில், குறிப்பாக, டெல்லி, நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதமானது அதிகமாகவே உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் விகிதம் 0 சதவிகிதமாக உள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் குறிப்பாக (தேர்ச்சி பெறாதோர் 0% என்றிருக்கும் தமிழ்நாட்டு உட்பட) நடப்பாண்டில் தேர்ச்சி அடைந்தாலும், அடுத்த நிலை கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில், 14.15 சதவிகிதம் பேர் உயர்நிலைப் படிப்பிற்குப் பின், மேல்நிலைக் கல்விக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அளவில் பார்க்கும்போது, தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கு 92.80%, நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு 91.4% பேர் சென்றாலும், உயர்நிலைப் பள்ளியை முடித்துவிட்டு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றவர்களின் எண்ணிகையானது 71.60 சதவிகிதமாக உள்ளது. இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர். இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம், கல்விக் கட்டணம், மற்ற வசதிகளை எதிர்ப்பார்த்து பள்ளிகளை மாற்றம் செய்துவருபர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதாவது, எட்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 மற்றும் 10 வகுப்பு ஒரு பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பள்ளியும் என மாற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளிகளில் தக்க வைப்பு விகிதமானது குறைந்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்தவர்கள் 87% பேர் அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 40.2 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வியை தொடர்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர் மட்டும்தான் அதே பள்ளியில் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில், 100 பேர் சேர்ந்தால் அதில் 68 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு வரை கல்வியை தொடர்வதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 94.8% பேர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் கல்வியை தொடர்ந்து வந்தாலும், மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக 68.1% பேர் மட்டுமே அதே பள்ளியை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் சண்டிகர், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 100% தக்கவைப்பு விகிதமானது காணப்படுகிறது. இதனால் சிக்கல் ஏதும் உருவாவதில்லை என்பதால், இது கவலைக்கொள்ள வேண்டாத தரவாகவே இருக்கிறது.

இங்கு நாம் கவலை கொள்ள வேண்டியது, இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்களைப் பற்றிதான். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய, பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இடைநிற்றலுக்கு உள்ளாக்காமல், அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்க வேண்டும் என்கின்றனர் கல்வியலாளர்கள். தமிழகத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு பெருமளவில் இருக்கிறதென்பதே இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல். அந்தவகையில் சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில், பலர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. முறையான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வியையும் கொடுத்து அரசுப் பள்ளிகள் இனிவரும் காலத்தில் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இடைநிற்றல் விகிதமென்பது பெருமளவில் குறையும். இல்லாதபட்சத்தில், இடைநிற்றல் அதிகரிக்கலாம். இந்திய அளவிலும் அரசு பள்ளி சார்ந்த விழிப்புணர்வும், இடைநிற்றலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வும் அரசு சார்பில் மக்கள் மத்தியில் அளிக்கப்பட வேண்டியது அவசியப்படுகிறது. குழந்தைத் திருமணங்கள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பை தடுக்க, மாணவ, மாணவியரின் இடைநிற்றல் விகிதத்தை சரிசெய்தாலே போதும். இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றை தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, குடிநீருக்கான முக்கிய ஆதாரங்கள், ஆண்கள் - பெண்கள் கழிவறை வசதி, கைகழுவும் வசதி, மருத்துவ பரிசோதனை நடத்திய பள்ளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான படிகட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (handrails) மற்றும் வளைவுகளை (ramps) கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் குறித்து விரிவாக அலசுவோம்.

Wednesday, July 21, 2021

July 21, 2021

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ‘வேலை இல்லாத’ அதிகாரிகள்! ஆண்டுக்கு ரூ.11.25 கோடி வீண்

"தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 250 உபரி பணியிடங்களின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11.25 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், கடந்த ஓராண்டுக்கு முன்பு தொழில் நெறி வழிகாட்டு மையங்களாக மாற்றப்பட்டன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை அடுத்து, 6 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், உதவியாளா் மற்றும் தட்டச்சா் என 3 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 அலகுகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் எண்ணிக்கை சரிவு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு பெரும்பாலானோா் ஆா்வம் காட்டாத நிலையில், பதிவுக்காக வரும் இளைஞா்களை கட்டாயப்படுத்தி பயனாளிகள் பட்டியலில் சோ்க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சரிவடையத் தொடங்கிய பயனாளிகள் எண்ணிக்கை, தற்போது மாவட்டத்திற்கு சராசரியாக 1200 வீதம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், 2 அலகுகளைச் சோ்ந்த 6 பணியாளா்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டு அந்த பணியிடங்கள் உபரியாக உள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் சுமாா் 200 பணியிடங்களிலுள்ள ஆள்கள் வேலை இல்லாமல் உள்ளனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அலுவலா்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக 24 மாவட்டங்களில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 24 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும், உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதும் இந்த இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்களின் பிரதான பணிகள். ஆனால், தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக பின்பற்றப்படாமல், கோப்புகளில் மட்டுமே பயனாளிகள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000-க்கும் குறைவான பயனாளிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தப் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு, பொதுப் பிரிவினரோடு சோ்த்தால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு தவிா்க்கப்படும் என துறை சாா்ந்த ஊழியா்கள் கூறுகின்றனா். எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது:
ஒரே பணிக்கு 18 இடங்களில் 2 வேலைவாய்ப்பு அலுவலா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்நெறி வழிகாட்டு மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமாா் 20 மாவட்டங்களிலுள்ள அலுவலகங்களில், வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் தொழில் நெறி வழிகாட்டல் என 2 பணியிடங்கள் உள்ளன. அரசாணை வெளியிடப்பட்ட பின் (நாளிதழ் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே ஆள்களை தோ்வு செய்ய வேண்டும்) வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிகளுக்கு பரிந்துரைப் பட்டியல் அனுப்பும் பணி தற்போது இல்லாத நிலை உள்ளது. வழிகாட்டுதல் பணியே பிரதானமாக உள்ள நிலையில், அதனை வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மற்றும் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) என இரு அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பணியில் சுமாா் 70 சதவீதம் குறைந்துவிட்ட சூழலில், வழிகாட்டுதல் பணியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மட்டுமே மேற்கொள்ளும் பட்சத்தில், வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) பணியிடம் தேவையற்ாகிவிடும். தமிழகம் முழுவதும் மொத்தம் 18 வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) பணியிடங்கள் தலா ரூ.75ஆயிரம் ஊதியத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடம் நீக்கப்படும்பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.1.62 கோடி இழப்பு தவிா்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.11.25 கோடி நிதி இழப்பை தவிா்க்கலாம்:
இதுதொடா்பாக தொழில்நெறி வழிகாட்டு மைய வட்டாரங்கள் கூறியது: பொதுப் பிரிவிலிருந்தும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிலிருந்தும் வேலைவாய்ப்பாற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் எண்ணிக்கை மாவட்டத்திற்கு சராசரியாக 1500 போ் மட்டுமே இருப்பதால், ஒரே அலகாக மாற்றி அமைக்கலாம். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், உதவியாளா், தட்டச்சா் என 250 பணியாளா்களின் மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதைத் தவிா்க்க முடியும்.

இந்த பணியாளா்களில் ஒரு பகுதியினரை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யவும், எஞ்சியுள்ளவா்களை பிற துறைகளுக்கு மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால், ஆண்டுக்கு சுமாா் ரூ.11.25 கோடி இழப்பு தவிா்க்கப்படும். கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக அரசு, இதுபோன்ற நிா்வாக சீா்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தனா்."

Total Pageviews

Search This Blog