Breaking

Showing posts with label Link Accreditation Application. Show all posts
Showing posts with label Link Accreditation Application. Show all posts

Sunday, August 21, 2022

August 21, 2022

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க Links

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

மதுரை, ஆக. 20: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக் கிழமை (ஆக.21) நடைபெறும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் கள் தங்களது ஆதார் எண்ணை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (www.nvsp.in, www.voterportal.eci.gov.in) மற்றும் வாக்காளர் ஹெ ல்ப்லைன் கைப்பேசி செயலி வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இப்பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவ லர்கள், இதர தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணைப் பெற்று கைப்பேசி செயலி மூலமாக இணைக் கும் பணியைச் செய்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. ஆகவே, வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களுடன் சென்று, படிவம் 6 பி-ஐப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.

Aadhaar Card - EPIC Card Linking Steps

Step-1: Download and Install Voter Helpline App from Google play store & App store.

Step-2: Open Voter Helpline App. Click on I Agree and then click on Next.

Step - 3: Click on 1st Option VOTER REGISTRATION.

Step - 4: Click on Electoral Authentication Form (Form-6B)

Step-5: Click on Lets Start.

Step-6: Enter Your Mobile Number and click on send OTP.

Step - 7: Enter OTP and then click on Verify.

Step - 8: Select first option YES I HAVE VOTER ID and click on Next.

Step - 9: Enter Your Voter ID (EPIC) number, Select the State and then click on Fetch details and Click on PROCEED.

Step - 10: Verify Your Details shown in the screen and then click on NEXT.

Step -11: Enter Your

> AADHAAR Number

> Mobile Number

> Place of Application and then click on Done.

Step - 12: After click on Done, Form - 6B Preview page is displayed. Once again you

check your details and Click on CONFIRM for Final Submission of Form-6B.

After Final Confirmation You will receive a Form-6B Reference Number.

You can also link your Aadhaar Number with

Voter ID through https://www.nvsp.in web portal

Wednesday, April 20, 2022

April 20, 2022

இணைப்பு அங்கீகார விண்ணப்பம் - அண்ணா பல்கலை அவகாசம்

இணைப்பு அங்கீகாரம்

இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், மத்திய அரசின் தொழில்நுட்ப அங்கீகார அமைப்பான, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும்,

AICTE

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும்.இதன்பின், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பித்து, அதற்கான அங்கீகாரமும் பெற வேண்டும்.இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் கோரி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 22ம் தேதியுடன் முடிவதாக இருந்தது.

அண்ணா பல்கலை அவகாசம்

இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்காத இன்ஜினியரிங் கல்லுாரிகள், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 22ம் தேதிக்கு பின் விண்ணப்பிக்கும் கல்லுாரிகள், அபராத கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog