sweet Pongal
January 09, 2025
Showing posts with label pongal. Show all posts

Thursday, January 09, 2025
Saturday, January 04, 2025
Sunday, December 29, 2024
Tuesday, November 26, 2024
Sunday, January 14, 2024
Pongal Bonus
January 14, 2024
பொங்கல் பூஜை செய்வது எப்படி?.. பொங்கல் வைக்க நல்ல நேரம்!

பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி மற்றும் காலை 10.00 மணி முதல் 10.30 மணி.
பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.
பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும். சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் ‘பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.
இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்

Tuesday, January 09, 2024
pongal
January 09, 2024
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ₹1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், அரசு நடவடிக்கை.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படு என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவித்த அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் தற்போது மக்களின் கோரிக்கை முன்னிட்டு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
Saturday, July 15, 2023
Saturday, January 14, 2023
pongal
January 14, 2023
பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதோ

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.
2023 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. எப்போம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதிதான் வரும். ஆனால் இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. தேதி
1. ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல்
2. ஜனவரி 15ஆம் தேதி சூரிய பொங்கல்
3. ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல்
4. ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்
பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 15ஆம் தேதி (தை மாத 01ஆம் தேதி)
பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 07.30 முதல் 08.30 வரை
பகல் 1.30 முதல் 02.30 வரையிலும்
மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 16ஆம் தேதி ( தை 02ஆம் தேதி)
காலை 06.30 முதல் 07.30 வரை,
மாலை 04.30 முதல் 05.30 வரை தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள்.
கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலை செய்வார்கள்.
அந்த பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்

பொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...

மிளகு பொங்கல்
பச்சரிசி - 2 கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 12
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் - 50 கிராம்
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் பயத்தம் பருப்பு போட்டு வாசனை வர ஒரு நிமிடம் வறுக்கவும்.
பிறகு அதனுடன் அரிசியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு முறை களைந்து விட்டு, குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
வாணலியில் நெய் 3 மேசைக்கரண்டி ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுத்துக் கொள்ளவும்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, அரிசி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு போடவும்.
அத்துடன் வறுத்து வைத்துள்ளவற்றையும் போட்டு நன்கு கிளறி விடவும்.
மேலும் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, வெய்ட் போட்டு வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
சுமார் 5 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் திறந்து, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான மிளகு பொங்கல் தயார்.
இந்த மிளகு பொங்கலை தயாரித்துக் காட்டியவர், திருமதி. ஜெயா ரவி அவர்கள். வகை வகையான சைவ சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். அனைத்து வகை பிராமண உணவுகளையும் சுவைபட தயாரிக்கக் கூடியவர். புது வகை உணவுகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார் சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: அரிசி - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - 20, பால் - 200 மில்லி, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ மற்றும் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.
சோள வடை
தேவையானவை: இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) - 4 கதிர், பொட்டுக்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இனிப்பு சோளத்தை கத்தியின் உதவியால் சுரண்டி எடுத்து... பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: சோளத்தில் புரதச் சத்து அதிகம். சோளம் அதிக மாக கிடைக்கும் சீஸனில் வடை, அடை, சூப், கஞ்சி என விதம்விதமாக தயாரித்து சாப்பிடலாம்.
வெண் பொங்கல்
தேவையானவை: அரிசி - 250 கிராம், நெய் - 100 மில்லி, பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 20, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு - இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்... வெண் பொங்கல் தயார்.
குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களில் இந்த வெண் பொங்கல் அதிகாலை நைவேத்யம். வடை - தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரை வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக் கிய கீரை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை : உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு வகை கீரையில் செய்யலாம். இதற்கு சாம்பார் சிறந்த காம்பினேஷன்.
புளி பொங்கல்
தேவையானவை: அரிசி - 250 கிராம், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொங்கல். புளிப்பும், காரமுமாக...நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.
துவரைக்காய் அவல் வடை
தேவையானவை: பச்சைத் துவரைக்காய் - 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்), கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத் தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து... எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: துவரைக்காய் சீஸனில் இந்த வடை மிகவும் ஸ்பெஷல் அயிட்டம். துவரைக்காயில் பொரியல், குருமா, கூட்டு என பலவிதமான 'டிஷ்'கள் தயாரிக்கலாம் . மசால் வடை
தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்க வும்.
குறிப்பு: சாம்பார் - சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். புதினாவை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.
சோளம் பார்லி அவல் பொங்கல்
தேவையானவை: பார்லி - 100 கிராம், அவல் - 250 கிராம், உடைத்த சோளம் - ஒரு கப், மிளகு - சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 20, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து... வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு... உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: சுகர் கம்ப்ளெயின்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தப் பொங்கல். ரவை பொங்கல்
தேவையானவை: வறுத்த ரவை - கால் கிலோ, மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வறுத்த முந்திரிப் பருப்பு - 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மிலி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிளகு - சீர கத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு... பொடித்த மிளகு - சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
குறிப்பு: இது, எளிதாக செய்யக் கூடிய பொங்கல். புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
தயிர் வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பச்சை மிளகாய் - 3, மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கேரட் துருவல் - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, தயிர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: தயிர் மிகவும் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இஞ்சி, புதினா, கொத்தமல்லியை அரைத்து தயிரில் கலந்தும் தயிர் வடை தயாரிக்கலாம். வெரைட்டி வெஜிடபிள் வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவு டன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசைய வும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடை களாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்வும்.
குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் சிறந்த காம்பினேஷன்.
பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.
செய்முறை: அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு இறக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.
ஜவ்வரிசி வடை
தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பார்லி, அவல் - தலா அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பார்லி, ஜவ் வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, அவல் சேர்த்துப் பிசையவும். இதனுடன் உப்பு, இஞ்சி, வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம். இதற்கு சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன். வெஜிடபிள் பொங்கல்
தேவையானவை: பாசிப்பருப்பு (வறுத்தது) - 100 கிராம், அரிசி - 250 கிராம், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி - தலா ஒரு கப், இஞ்சி (துருவிக் கொள்ளவும்) - ஒரு சிறிய துண்டு, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு - சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும். நறுக்கிய, துரு விய காய்கறிகள் எல்லாவற் றையும் கடாயில் போட்டு... நெய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய் கறிகள், வறுத்த மிளகு - சீரகம், முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
குறிப்பு: காய்கறிகள் சாப் பிடாத குழந்தைகளை இப்படி காய்கள் சேர்த்த பொங்கல் செய்து சாப்பிட வைக்கலாம். உலர்ந்த திராட்சை, ஸ்வீட் கார்ன் சேர்த்தும் செய்யலாம்.
ஃப்ரூட்ஸ் பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, உலர்ந்த திராட்சை - 20, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஆப்பிள் - ஒன்று, சப்போட்டா - 2, பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு, உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். மேலே உலர்ந்த திராட்சையை தூவவும்... ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!
குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற பொங்கல் இது. பிஸ்தா, பாதாம், பேரீச்சை சேர்த்தும் தயாரிக்கலாம்.

பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை - ஒருபார்வை

பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.
பொங்கலை சூரியனுக்கு படைத்து மகிழலாம்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்யலாம். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தைப்பொங்கல்:-
பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும். மழை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில் தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் இது. உழவுத்தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.
உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச் சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.
குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது. முழுக் கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய், ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிடலாம்.
சூரிய வழிபாட்டை தைப் பொங்கல் அன்று மட்டுமல்ல, தினமும் வழிபடலாம். இயற்கை சக்தியான சூரியனிடம் இருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன.ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன் இருப்பவர்கள், சூரியன் வலிமை குறைந்தவர்கள் , சூரியனுடன் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் தினமும் ஆதித்ய இருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறப்பு. தினமும் சூரிய பகவானை வழிபட்டு ஆதித்திய இருதயம் படித்து அல்லது கேட்டு வந்தால் சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் ஒழியும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும்.
நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக் கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம், யந்திரம், தந்திரம், இரவு வேலை என்று அழைய வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்தமாக ஆதித்ய இருதய சுலோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும்.அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும் ,மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்த தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம். அன்றைய தினம் சுக்ரனின் ஆதிக்கம், மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை என்பது சிறப்பு. காலை 6 மணி முதல் 9 மணி வரை சுக்ரன், புதன், சந்திர ஹோரைகள் இருக்கிறது. அன்றைய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இருப்பதால், காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்ய உகந்த நேரமாகும். மேலும் சூரியன் மகர ராசிக்குள் மதியம் 2.29 மணிக்கு பிரவேசிப்பதால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் பொங்கல் வைக்கலாம். ராகு- காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை எமகண்டம்- மதியம் 3 முதல் 4,30 மணி வரை. ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். பொங்கல் திருநாளான தை மாதம் 1 2 3 ஆகிய நாட்கள் கரிநாளாக வருகிறது . எனவே அன்றைய தினங்களில் சுபநிகழ்ச்சிகளான திருமணம் , திருமணத்திற்கு தாலி செய்தல் . கடை திறப்புவிழா, அலுவலகம் , தொழிற்சாலை, கடைகள் திறப்புவிழா, காதுகுத்து, சீமந்தம், கிரக பிரவேசம் உட்பட அனைத்து சுபநிகழ்ச்சிகளை யும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அன்று சூரியவழிபாடு, சூரியபூஜை , பித்ருக்கள், குலதெய்வ வழிபாடுகள் செய்வது நல்லது.
மாட்டுப் பொங்கல்:- ஜனவரி 15 (தை 2). கடும் உழைப்புக்கும் உழவுக்கும் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல்.
தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். பண மதிப்பு இல்லாத காலத்தில் ஒருவரிடம் உள்ள கால்நடைகளை கொண்டே பொருளாதார நிலையை மதிப்பிட்டார்கள். கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கோமாதா என்றழைக்கப்படும் பசு பிராணிகளில் மிகவும் புனிதமானது. சாதுவானது.
அதனால் நமது பாரம்பரியத்தில் கோமாதா வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பசுவை தொடுவது புனிதம். அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது என்பதால் தான் நமது முன்னோர்கள் பசுவை தெய்வமாக வழிபட்டார்கள். கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும். எனவே தினமும் பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, உணவாக கொடுக்க வேண்டும். தனித்த பசுவை வழிபடுவதுடன் கன்றுடன் சேர்ந்த பசுவை பூஜிக்க வேண்டும்
கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி வீட்டில் நித்தியவாசம் புரிவாள்.
அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குரு ஒரையில் அல்லது 10.30 மணி முதல் 12 மணிக்குள் சுக்ரன், புதன் ஓரையில் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். மாட்டுக் கொட்டகைகளை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு .மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.
அன்று மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் சுக்ரன், புதன் ஒரையில் மங்கள வாத்தியங்களுடன் தெருவலம் அழைத்துச் சென்று கவுரவிக்கலாம். தை 2ம்தேதி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுடன் வீட்டு சாமி , இறந்தவர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்யலாம் . காணும் பொங்கல்:- ஜனவரி 16 (தை 3). போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது. அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் ஊர் மக்களுக்கு எளிதில் எந்த கொடிய நோயோ, இயற்கை சீற்றங்கள் பாதிப்போ ஏற்படாது.
கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது. காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். கொடூர நோய் தாக்கத்தால் உலக இயக்கங்கள் ஸ்தம்பிக்காது.
இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம். காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற, வசதி குறைந்த வயோதிகர்களுக்கு அல்லது ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால் ஸ்ரீ சனி பகவான் மற்றும் பித்ருக்கள் நல்லாசிகள் கிடைக்கும். அன்று இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவைகள் செய்யலாம். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசின் சட்ட திட்டங்களை மதித்து பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்