Order of the Department of Education
April 14, 2024
Showing posts with label Order of the Department of Education. Show all posts

Sunday, April 14, 2024
Wednesday, August 17, 2022
Order of the Department of Education
August 17, 2022
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8.9-10 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம். நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு. மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும்.
இவற்றில் சிறந்த படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் என்றும் இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்கான சிறப்பு திகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றது என்று தெரிவித்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில் வெல்வோர் அறிவுப் பயணம் என்கிற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படும். இந்தப் பயணத்தில் உலகப்புகழ்பெற்ற நூலகங்கள், ஆவணகாப்பகங்கள் போன்றவற்றைக் காணலாம்.
இந்தத் திட்டத்தை, 17.8.2022 இன்று காலை 9:30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் நிகழ்வில் துவக்கி வைத்தார்.
பள்ளி நூலகங்களையும் பாடவேளைகளையும் முறையாகப்பயன்படுத்தவும், அவற்றின் பயன்பாடு மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாகப் பயன்படுத்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Sunday, May 15, 2022
Order of the Department of Education
May 15, 2022
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை - பள்ளிக்கல்வித் துறை தகவல்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுத 26.5 லட்சம் மாணவ, மாணவிகள் தகுதிபெற்றனர்.
ஆனால், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 32 ஆயிரம் பேர் வரை தேர்வில் பங்கேற்கவில்லை. அதேபோல், பிளஸ் 1 வகுப்பில் 43 ஆயிரம் பேரும், 10-ம் வகுப்பில் 42 ஆயிரம் பேரும் தேர்வு எழுத வரவில்லை. குடும்பப் பொருளாதார சிக்கல்
அதன்படி ஒட்டுமொத்தமாக 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளாமல் இருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடும்பப் பொருளாதார சிக்கல் காரணமாக மாணவர்கள் பலர் இடைநின்றது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மாணவர்களின் கணிசமானவர்கள் பள்ளிப்படிப்பைக் கைவிட்டு ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். சிலர் உடல் பாதிப்பு காரணமாக தேர்வைச் சந்திக்க முடியாத நிலை உள்ளது. எனினும், கரோனாவுக்குப் பின்னர் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் குடும்பப் பொருளாதாரம் காரணமாக வேலைக்கு சென்றுள்ளனர். இத்தகைய இடைநிற்றலை தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.