Breaking

Showing posts with label Diploma In Elementary Education Examination. Show all posts
Showing posts with label Diploma In Elementary Education Examination. Show all posts

Wednesday, March 20, 2024

Sunday, May 28, 2023

May 28, 2023

ஆசிரியர் கல்வி - 2023-2024 - ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET/GTTL/BITE ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை செய்தல் நிதி உதவிபெறும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அந்தந்த நிறுவனங்களில் இணையதளம் (Online) மூலம் மாணவர் சேர்க்கை செய்தல் சார்பு.

Friday, January 27, 2023

January 27, 2023

தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

சென்னை: தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

Tuesday, June 21, 2022

June 21, 2022

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு, ஆகஸ்ட் 2022 - Diploma In Elementary Education Examination August 2022 - Notification - PDF



அரசுத் தேர்வுத் துறை, சென்னை 600 006

தொடக்கக் கல்விபட்டயத் தேர்வு, ஆகஸ்ட் 2022 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செய்திக் குறிப்பு

ஆகஸ்ட் 2022-ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளவழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்குமாறும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள (Web Camera) வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Diploma In Elementary Education Examination August 2022 - Notification - PDF CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog