Breaking

Showing posts with label College Admission. Show all posts
Showing posts with label College Admission. Show all posts

Sunday, September 24, 2023

September 24, 2023

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - அக்டோபர் 15-ந்தேதி கடைசி நாள்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 1.7.2024-ல் 8-ம் வகுப்பில் சேர பள்ளி மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நுழைவுத்தேர்வு எழுதும் மாணவருக்கு 1.7.2024 அன்று 11/2 வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை என்.ஐ.எம்.சி. என்ற இணையதளத்தில் பொதுப் பிரிவினர் ரூ.600. அட்டவணை இனத்தவர் ரூ.555 செலுத்தி பதிவிறக்கம் செய்து பணம் செலுத்திய ரசீது. முகவரியை தெளிவாக குறிப்பிட்டு அஞ்சல் மூலம் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கார்கிகேன்ட், உத்திரகண்ட் என்ற முகவரிக்கு அக்டோபர் 15-ந்தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, September 11, 2023

September 11, 2023

ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு - அக்.,15 விண்ணப்பிக்க கடைசி நாள்!



ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு

டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நடப்பாண்டில், 7ம் வகுப்பு படிக்கும் மற்றும் படித்து முடித்துள்ள மாணவர்கள், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேர, டிசம்பர் 2ம் தேதி ராணுவ தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், www.rimc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள கமாண்டன்ட், இந்திய ராணுவ கல்லுாரி என்ற முகவரிக்கு, வங்கி வரைவோலை அனுப்பி, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன் நகலை, அக்.,15க்குள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்

Friday, June 23, 2023

Monday, January 23, 2023

January 23, 2023

இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம்

இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம் Engg., Time to get college admission approval

சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.

பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.

பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.

இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 31, 2022

October 31, 2022

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீர்ப்பளித்துள்ளது.

வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்க முடியாது எனக் கூறி, மதிப்பீட்டு அதிகாரி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்ட விதிகளை மீறி, நன்கொடை வசூலித்ததுடன், அதற்கு வரிவிலக்கு பெறவும் முயற்சித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இத்தொகைகள் நன்கொடையே என ஆதாரங்கள் மூலம் மதிப்பீட்டு அதிகாரி நிரூபித்துள்ளதாகக் கூறி, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்கொடை தொகைக்கான, வருமான வரியை கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என்பதால், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை, மதிப்பீட்டு அதிகாரி, ஆதாரங்கள் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், நன்கொடை இல்லாமல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நன்கொடை வசூலை தடுக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தை உருவாக்கி, எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதன்படி மாநில அரசுகள் கல்வி வழங்காததால், பெற்றோர்கள் அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கல்வி போதித்தல் என்பது ஒரு புனிதமான சேவை. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Thursday, September 22, 2022

September 22, 2022

Medical College Admission - Bonafide certificate to eligible students - Issue - Instructions Reg - State Project Office, Samagra Shiksha

State Project Office, Samagra Shiksha Chennai 600 006.

Rc.No.137/C1/MRA/EMIS/SS/2022 dated 22. Sub: Medical College Admission - Bonafide certificate to eligible students - Issue - Instructions Reg.

All the Chief Educational Officers are hereb Bonafide Certificate shall be issued only to those sta Repeaters, (students who passed class 12 in academic years) and are eligible to claim preference in Tamil Nadu Admission to Undergraduate professic preferential basis to students of Government Schools Act However, for the current academic (students who passed class 12 in 2022) the ba uploaded by the Headmasters through EMIS will direc School Education Department with the concerned Depart Certificate shall not be issued to these students passed class 12 in 2022) again for this purpose Stata

Total Pageviews

Search This Blog