Breaking

Showing posts with label government school students. Show all posts
Showing posts with label government school students. Show all posts

Saturday, July 18, 2026

Friday, June 12, 2026

Wednesday, June 10, 2026

Saturday, March 21, 2026

Tuesday, January 27, 2026

Monday, December 29, 2025

Monday, November 03, 2025

Monday, March 24, 2025

Monday, March 10, 2025

Sunday, March 09, 2025

Friday, February 14, 2025

Thursday, January 30, 2025

Monday, December 16, 2024

Monday, November 25, 2024

Thursday, February 22, 2024

February 22, 2024

பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம்



பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம். பள்ளி மாணவர்களுக்கு தனி ஆதார் முகாம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் Separate Aadhaar camp for school students - School Education Secretary letter

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக தனித்தனி எண்கள் எமிஸ் வளையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் முழு தகவல்கள் இடம்பெற்றுள்ளன மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை ஒரே எண் பராமரிக்கப்படுகிறது

மாணவர் பற்றிய தகவல் மற்றும் மாணவருக்கு தேவையான அரசு உதவிகள் அரசின் திட்டங்கள் சென்றடைய இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆதார் எண் குழந்தையில் பிடிக்கப்பட்டுள்ளதால் "பயோ மெட்ரிக்" அதில் இணைக்க இணைக்காமல் உள்ளது எனவே பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் ஆதார் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும்பான்மையான ஆதார் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடும் ஒன்றை அனுப்பி உள்ளது அதில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேகமாக ஒரு ஆதார் முகாம் நடத்த பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் இதில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார திருத்தங்கள் பயோ மெட்ரிக் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

Wednesday, February 21, 2024

Monday, February 19, 2024

February 19, 2024

TN Budget 2024 | Tamil Puthulavan Scheme for 6th - 12th standard government school students



TN Budget 2024 | 6 - 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் TN Budget 2024 | Tamil Puthulavan Scheme for 6th - 12th standard government school students

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் , அரசுப் பள்ளிகளில் பயின்ற , ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ' தமிழ்ப் புதல்வன் ' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்

இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் , பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் , மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் . இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.

இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் . உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

Monday, December 18, 2023

December 18, 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம் Biometric attendance registration will soon be introduced for government school students as well



அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.. கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.

ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.

பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அளிக்க முடியாத ஆவணமாகிவிடும்.என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Monday, October 30, 2023

October 30, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் When are laptops for government school students? Information from Minister Anbil Mages

நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்(நிப்டெம்) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிப்டெம் இயக்குநர் வி.பழனிமுத்து வரவேற்றார்.

விழாவில், அரசுப் பள்ளியில் படித்து இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ள 13 பேருக்கு லேப்டாப்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் மாதிரி பள்ளித் திட்டத்தின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்ஐடி, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதிநிலை சரியான பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், 6,218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்த விழாவில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா.சுதன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மேயர் சண். ராமநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய சட்டப் பள்ளியில்...

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய சட்டப் பள்ளி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் 17 மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடும் நிகழ்ச்சி தேசிய சட்டப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி உள்ளோம்.

தற்போது ஒரு மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பதுபோல, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கவும், தொடர்ந்து

பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டையும் தொடங்கியுள்ளோம்” என்றார். இதில், ரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Total Pageviews

Search This Blog