Breaking

Showing posts with label Kalvi TV. Show all posts
Showing posts with label Kalvi TV. Show all posts

Tuesday, February 06, 2024

February 06, 2024

Opening of new studio for educational television; Hi-tech lab in middle schools too - Minister Anbil Mahes announcement.



கல்வி தொலைக்காட்சிக்கு புதிய படப்பதிவு கூடம் திறப்பு; நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் அடுத்த கட்டமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி துறை அலுவலக வளாகத்தில் (டிபிஐ) கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப படப்பதிவு கூடங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று திறந்து வைத்து, அங்கு இருந்த கேமராவை இயக்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கல்வி தொலைக்காட்சிக்கு படப்பதிவு கூடங்கள் (ஸ்டுடியோ), உயர் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோக்களை உலக தரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற முதல்வரின் ஆசை நிறைவேறியுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதுப்புது உத்திகளோடு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரவேண்டும் என்று விரும்பினோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில், நெய்தல், பாலை, மருதம் போன்ற நிலப் பகுதிகளையும் உயர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளோம். சொல்லிக் கொடுத்து படிப்பதைவிட, நேரடியாக மாணவர்களின் கற்பனை திறனை அங்கேயே கொண்டு செல்லும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை அனைத்து பாடங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். 1-ம் வகுப்பு குழந்தைக்கு ரைம்ஸ், கதைகள் சொல்லித் தருவதில் தொடங்கி, 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளோம். பாடம் நடத்துவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மாணவர்களின் இடைநிற்றலும் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் 6,218 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கி வலுப்படுத்தி உள்ளோம், அடுத்த கட்டமாக நடுநிலைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்,

மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம், வழிகாட்டுதல் தேவைப்பட்டால் ‘14417’ என்ற தொலைபேசி எண் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2023 மார்ச் முதல் கடந்த ஜனவரி வரை 2.96 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், துறை செயலர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, October 22, 2022

October 22, 2022

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவியின் முடிவின்படி மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள கல்வி தொலைக்காட்சி இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது

Sunday, September 04, 2022

September 04, 2022

இன்று புதிதாய் பிறப்போம் |INTRU PUTHITHAAI PIRAPPOM |EPI14

இன்று புதிதாய் பிறப்போம் |INTRU PUTHITHAAI PIRAPPOM |EPI14

சிந்தனை வளி சிறப்பான செல்வம் பெற்று நம்மை சீர்படுத்தும்படி ஆசிரியர் விவரிக்கிறார்

September 04, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15

INTRU PUTHITHAAI PIRAPPOM | இன்று புதிதாய் பிறப்போம் | EPI 15

இன்று புதிதாய் பிறப்போம் மாணவர் திறனுக்கேற்ப ஆசிரியர் பாடம் நடத்துகிறவராக இருத்தல் பற்றியும் மாணவர் மனதில் அழியா ஓவியமாக ஆசிரியர் மாற செய்ய வேண்டியது பற்றியும் இப்பகுதியில் ஆசிரியர் விவரிக்கிறார்

September 04, 2022

INTRU PUTHITHAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |EPI 17|

INTRU PUTHITHAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |EPI 17|

இன்று புதிதாய் பிறப்போம் நல்ல செய்திகளை நல்ல விதமாக பகிர்தல் நாட்டில் நல்லவை நடப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் .

September 04, 2022

இன்று புதிதாய் பிறப்போம் .INTRU PUTHITHAAI PIRAPPOM|EPI 18|

இன்று புதிதாய் பிறப்போம் .INTRU PUTHITHAAI PIRAPPOM|EPI 18|

வாசிப்பு நம்மை உயிர்ப்புள்ள மனிதர்களாய் நிலை நிறுத்தும் ,வாசிப்பு பயிற்சியின் முக்கியத்துவம் உலகின் மிக பெரிய தலைவர்களின் வாசிப்பு பழக்கங்கள் பற்றி ஆசிரியர் இப்பகுதியில் தெளிவாக குறிப்பிடுகிறார்

Thursday, September 01, 2022

September 01, 2022

இன்றுபுதிதாய்பிறப்போம்|INTRUPUTHITHAAIPIRAPPOM|EPI12|KALVI TV|

இன்றுபுதிதாய்பிறப்போம்|INTRUPUTHITHAAIPIRAPPOM|EPI12|KALVI TV|

வாழுகிறபோது பிறருக்கு பயனுள்ளவர்களாய் ய் எப்படி வாழமுடிகிறது என்பது பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்

Tuesday, August 30, 2022

August 30, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALVI TV

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம் |KALVI TV - நாம் ஒருவரை ஏமாற்றினால் நாம் மற்றவரால் ஏமாற்றப்படுவோம். மற்றவர் நம்மை புகழும்போது புகழ்ச்சிக்கு தகுதி உடையவனா என்ற விழிப்புணர்வோடு நடந்து கொள்ள முடியும் என்பதனை ஆசிரியர் விவரிக்கிறார் .
August 30, 2022

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| |Kalvi tv

INTRU PUTHITHAAI PIRAPPOM |இன்று புதிதாய் பிறப்போம்| EPI 2| |Kalvi tv - மஹாத்மா காந்தி சக மனிதர்களை சமமாய்,சரியாய் மதித்தார் என்பதனை ஆசிரியர் மிக விரிவாய் தெளிவு படுத்துகிறார்.

Sunday, August 28, 2022

Tuesday, August 16, 2022

August 16, 2022

கல்வி தொலைக்காட்சி - உத்தரவு நிறுத்தி வைப்பு



கல்வி தொலைக்காட்சி சிஇஓ வாக நியமனம் செய்யப்பட்டவர் பணியில் சேர வேண்டாம் என வாய்மொழி உத்தரவு..

ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர் என சர்ச்சை கிளம்பியதால் நடவடிக்கை..

கடந்த 13ஆம் தேதி நியமன உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவு நிறுத்திவைப்பு..

Saturday, August 13, 2022

August 13, 2022

தொடக்க கல்வி,உயர் தொடக்கக்கல்வி |இல்லம் தேடி கல்வி |தமிழ்

விளையாட்டு,கதைவழியாக ஆர்வமூட்டுதல் ,உயிரெழுத்துக்களை உணவுப்பொருட்களோடு தொடர்புபடுத்தி கற்பித்தல் பற்றி ஆசிரியர் விவரிக்கிறார்
August 13, 2022

தொடக்கக்கல்வி ,உயர் தொடக்ககல்வி| ,இல்லம் தேடிக்கல்வி|தமிழ்

ஆர்வமூட்டுதல், தொடர்பயிற்சி, உடல் இயக்கத்தோடு கூடிய மொழி விளையாட்டு இவற்றை ஆசிரியர் விவரிக்கிறார்

Total Pageviews

Search This Blog