Breaking

Showing posts with label Central Government Selection. Show all posts
Showing posts with label Central Government Selection. Show all posts

Sunday, March 12, 2023

March 12, 2023

வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்! யாரெல்லாம் இதை பயன்படுத்த முடியும்?

வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்! யாரெல்லாம் இதை பயன்படுத்த முடியும்?

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது.

இந்த வசதியை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குமார் கூறியதாவது: எங்களது குழு படிவம் 12-டி உடன், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்கினை சேகரிப்பர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து அவர்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது. இருப்பினும், வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்த இயலாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது வாக்கினை செலுத்தலாம். இந்த புதிய வசதியில் வாக்காளர்களின் வாக்கு செலுத்தும் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், அவர்கள் வாக்கு செலுத்தத் தொடங்கியது முதல் அந்த செயல் முடியும் வரை அனைத்தும் விடியோக்களாக பதிவு செய்யப்படும். வீடுகளுக்குச் சென்று வாக்கினைப் பெற செல்லும் போது ஒவ்வொரு முறையும் அனைத்துக் கட்சிகளுக்கும் தகவல் கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக ’சக்ஸம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த செயலியின் உள் நுழைந்து தங்களது விவரங்களை அளித்தபின் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தலாம். அதேபோல வேட்பாளர்களுக்காக ‘சுவிதா’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம்.

இந்த செயலியைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெறலாம். இந்தியத் தேர்தல் ஆணையம் ‘உங்களது வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை வாக்களார்கள் பயன்பெறும் வகையில் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அவர்களது இணையதளப் பக்கத்திலும், சமூக ஊடக கணக்கிலும் அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட அவர்கள் ஏன் வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். கர்நாடக சட்டப் பேரவையில் உள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.59 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 16,976 பேர் நூறு வயது நிரம்பியவர்கள். 4,699 பேர் மூன்றாம் பாலினத்தவர். 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள். 12.15 லட்சம் வாக்காளர்கள் 80 வயதுக்கும் மேலானோர். 5.55 லட்சம் மாற்றுத்திறன் வாக்காளர்கள். மாநிலத்தில் மொத்தம் 58,272 வாக்கு மையங்கள் உள்ளன. அவற்றுள், 24,063 வாக்கு மையங்கள் நகர்ப்புறங்களில் உள்ளன. ஒவ்வொரு வாக்கு மையங்களுக்கும் சராசரியாக 883 வாக்காளர்கள் உள்ளனர். 29,141 வாக்கு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 1,200 வாக்கு மையங்கள் பதற்றம் நிறைந்த மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக அளவிலான வாக்கு மையங்கள் அமைக்கப்படும். வாக்கு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் போன்றன அமைக்கப்படும். அவை தேர்தல் முடிவடைந்த பின்பும் நிரந்தரமாக செயலில் இருக்கும். இது பள்ளிக் குழந்தைகளுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் அளிக்கும் பரிசாகும். வருகிற மே 24 ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம். மே 24 ஆம் தேதியுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது என்றார்.

Sunday, February 26, 2023

February 26, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு Salary hike for central government employees soon

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது.

ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிக்குப் பிறகு (மார்ச் 8) மார்ச் மாதத்தில் ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படியை (DA) அரசாங்கம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இப்போது ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. அந்த வகையில் இந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..

கடந்த செப்டம்பர் 2022ல், மத்திய அரசு, அகவிலைப்படியை 3% அதிகரித்தது.. இதன் மூலம் அகவிலைப்படி 38% ஆக அதிகரித்தது.. இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Tuesday, September 27, 2022

September 27, 2022

20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மத்திய அரசின் தேர்வாணையத்தால் அறிவிப்பு!

20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மத்திய அரசின் தேர்வாணையத்தால் அறிவிப்பு! - More than 20,000 vacancies announced by Central Government Selection Board!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2022 ஆகும்.

How many vacancies are there in SSC?

How many vacancies are there in SSC each year?

Is SSC is a Government job?

What is SSC Phase 9 selection Post?

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பணிக்காலியிடங்களில் பணிவாய்ப்பு பெற இப்போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும்.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம்.

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மீள இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் ‘TN Career Services Employment’ என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

Total Pageviews

Search This Blog