Breaking

Showing posts with label Local Body Election. Show all posts
Showing posts with label Local Body Election. Show all posts

Friday, July 26, 2024

Wednesday, February 23, 2022

February 23, 2022

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - செய்தி வெளியீடு - நாள் 23.02.2022

மறுவாக்குப்பதிவு நடைபெறும் கடலுார் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக்கொள்வது

இதையும் படிக்க | தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள்

தமிழகத்தில் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலுார் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர) தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார், இ.ஆ.ப.(ஓய்வு) அவர்கள் அறிவித்தார்கள்.

Monday, February 21, 2022

February 21, 2022

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 - வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிய இணையதள முகவரி - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு : 54/2022

நாள்: 21.02.2022
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் - 2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான 21 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 மற்றும் மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் 21.02.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, பதிவான வாக்குகள், 268 வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கு எண்ணும் மையங்களில், அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https://tnsec.tn.nic.in-ல் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)

Thursday, February 17, 2022

February 17, 2022

தேர்தல்-2022-வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அரசு/நகராட்சி/அரசு உதவியெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படும் பள்ளிகள் மற்றும் 50% தேர்தல் பணியில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 18.02.2022 அன்று விடுமுறை அளித்தல் - தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Saturday, February 12, 2022

February 12, 2022

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில், நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்கவும், பொருள்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் தலைமையில் இன்று (12-2-2022) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில், முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-2-2022 அன்று 3086 ஆக குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2- 2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும். 1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.

2. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (ப்ளே ஸ்கூல்) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sunday, February 06, 2022

February 06, 2022

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதி ரத்து அதிகாரிகளுக்கு 10ம் தேதி 2வது பயிற்சி: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதியை ரத்து செய்து, தேர்தல் அதிகாரிகளுக்கான இரண்டாவது பயிற்சி வரும் 10ம் தேதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது.

சென்னை மாநகராட்சியை தவிர, இதர மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணி அமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 9ம் தேதி இரண்டாவது பயிற்சி அளிக்க அறிவுறுத்தி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சியை நிர்வாக காரணங்களுக்காக 10.2.2022 (வியாழக்கிழமை) அன்று நடத்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
February 06, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்-1க்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு: ஓட்டுப்பதிவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு

தமிழகத்தில் நடைபெற வுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடிகளில் பணியாற்ற அனைத்து துறைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங் கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. இவர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி நடத் தப்படவுள்ளது. இதனிடையே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கு கூடுதல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது டன் வாக்குப்பதிவில் கால தாமதம் ஏற்படும் என சர்ச்சை எழுந்துள்ளது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்குள் பெரும் பாலும் ஆசிரியர்கள் தான் பணியமர்த்தப்படு கின்றனர். இதில், வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆக பணிபுரிபவர்களுக்கு வாக்காளர்களைஅடையாளம் கண்டறிவது. வாக்காளர் பட்டிய லில் குறிப்பிடுதல், ஆண், பெண் வாக்காளர் களை பிரித்தறிவது மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு உதவி புரியும் பணி கள் வழங்கப்படும். ஏற்கனவே நடந்த பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முதல் கடந்த ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தல் வரை இந்த அடிப்படை யில் தான் பணி வழங்கப்பட்டது. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. அதில், வாக் குச்சாவடி அலுவலர் -1க்கு கூடுதலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பதிவேட் டில் வாக்காளரின் விபரங்களை பதிவு செய்து, கையொப்பம் பெறுவது, வாக்களிப்பதற்கான ஆவணங்களை பதிவேட்டில் பதிவு செய்வது, வாக் காளர்களுக்கு துண்டுச் சீட்டு (சிலிப்) வழங்குவது என கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாக்குச்சாவடி அலுவலர்-1 க்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் வாக்குப்பதிவிற்கும் கூடுதல் கால தாமதம் ஏற்படும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர் -1 க்கு ஏற்கனவே உள்ள பழைய பணிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கூடுதல் பணிக்காக, கூடுதலாக வேறு ஒரு வரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

Total Pageviews

Search This Blog