studies
January 16, 2026
Showing posts with label INFORMATION. Show all posts
Showing posts with label INFORMATION. Show all posts
Friday, January 16, 2026
Wednesday, April 16, 2025
Wednesday, August 07, 2024
Study Materials
August 07, 2024
INDEPENDENCE DAY SPEECH FOR PRIMARY STUDENTS - PDF
INDEPENDENCE DAY SPEECH FOR PRIMARY STUDENTS - PDF
👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD INDEPENDENCE DAY SPEECH PDF
Wednesday, May 08, 2024
Monday, May 06, 2024
Saturday, March 30, 2024
Wednesday, March 27, 2024
Monday, March 18, 2024
Monday, February 12, 2024
laptops
February 12, 2024
புதிய Laptop வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? What to consider when buying a new laptop?
புதிய Laptop வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுத்தியுள்ளது.
அப்பாக்களின் ஆப்ஷன்கள் மூன்று.
கம்பெனி லேப்டாப் கம்மி ரேட்டுக்கு அசெம்பிள் செட் கவர்ன்மென்ட் கொடுத்த லேப்டாப்.
இதுவும் கிடைக்காத பட்சத்தில் புது லேப்டாப் வாங்க வருகின்றனர்.
லேப்டாப் வாங்குவதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில தகவல்களை நாங்கள் பட்டியலிடுகிறோம். அதன்மூலம் நீங்கள் விரும்பும்படியான புதிய லேப்டாப் வாங்க முடியும்.
பட்ஜெட்:
புதிதாய் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
யுகேஜி படிக்கும் மகனுக்கு M.E, M.tech லெவல் வேண்டாம். மினிமம் வசதியுள்ள லேப்டாப் ஆப்ஷன் வைத்துக் கொள்ளலாம்.
லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது மிகவும் அவசியமான ஒன்று.
பிராசசர் மற்றும் ரேம்:
லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை வரையறுக்கிறது. ரேம் தடையில்லா வேகமான பணியை உறுதி செய்கிறது. பெரும்பாலான மடிக்கணினிகள் Intel அல்லது AMD CPU உடன் வருகின்றன. ஆனால், பெரிய அளவில் Intel செயலி மூலம் இயங்கும் மடிக்கணினியை அதிகம் தேர்வு செய்யப்படுகிறது. இன்டெல்லின் கோர் i3 பொதுவாகத் தொடக்க நிலை லேப்டாப்-ல் காணப்படுகிறது, அதேசமயம் கோர் i5 பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Life long வரணுமில்ல என்பதையும் நம்ப வேண்டாம். இணைய உலகில் இன்னைக்கு வாங்கினா நாளைக்கு அப்டேட் மாடல் வந்திடும். Processor என்பது எல்லா மதர் போர்டுகளிலும் இருக்கும் ஒரு சிப். இப்போதைக்கு processor ஐ3 & ஐ5 வாங்கலாம். ஆனால், ஐ7, ஐ9 வரை வந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். இதில் processor-க்கு அருகில் இருக்கும் 2.80GHz என்பது பிராசசரின் வேகம். இது குறையும் போது வேகம் குறைவாய் இருக்கும்.
intel, AMD brand-ல் இன்டெல் அட்வான்ஸ் வெர்ஷன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம்ம கணினிக்கேற்ற பொருத்தமான மணமகனாய் இருப்பார்.
RAM எனும் வேகப்படுத்தி மடிக்கணினியில் மினிமம் 4 GB இருக்கணும். 8 GB இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. DDR3 அல்லது DDR4 RAM பொருத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.
தற்போது பெரும்பாலும் 1-TB மெமரி உள்ள லேப்டாப் தான் வருகிறது.
மற்றது சாலிட் ஸ்டேட் ட்ரைவ் வேகம் அதிகம், விலையும் அதிகம், நினைவுத் திறன் குறைவு.
Bluetooth, WiFi, Memory Card Slot, HDMI cable option, DVD RW Drive அல்லது பென் ட்ரைவ் ஆப்ஷன் தற்போது இரண்டு வந்து விட்டது.
USB தற்போது 3.0 வெர்சன் வந்துள்ளதால் கொஞ்சம் வேகமாய் இருக்கும்.
வெப்கேமரா அனைத்து லேப்டாப்புகளிலும் வருகிறது. தரமாய் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்
பேட்டரி 8 மணி நேரம் இருப்பது போல் வாங்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சார்ஜர் போட வேண்டும். சைஸ்:
பெரும்பாலான லேப்டாப்கள் 15.6-இன்ச் திரையுடன் வருகின்றன. ஆனால், சிறிய 14-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் அமைப்புகள் நிறைய உள்ளன. உங்கள் பணிக்கு நிறையப் பயணம் செய்ய வேண்டியிருந்தால், சிறிய வடிவ காரணியை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அது பொதுவாக இலகுவானது மற்றும் உங்கள் பையில் வைப்பது எளிதாக இருக்கும். பெரிய மடிக்கணினிகள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது. ஒரே இடத்தில் வைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் பெரிய திரை கொண்ட லேப்டாப்-யை தேர்வு செய்யலாம்.
15.6 அல்லது 14 இன்ச் display LED monitor வாங்கலாம். அதிலும் Full HD, Ultra HD என வந்து விட்டதால் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் memory card slot, Front mic, audio speaker system இணைந்ததா எனப் பார்த்துக் கொள்ளவும்
Screen resolution ஐ கண் பார்வையை உறுத்தாத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
Hard disc பயன்பாட்டின் வேகத்தைப் பொறுத்து தேர்வு செய்யலாம். இதன் வேகம் 7200RPM, 5400RPM போன்றவற்றை பார்க்கவும். 320GB,160GB, 80GB எனும் அளவில் கிடைப்பதால் பயன்பாட்டைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம். ஸ்டோரேஜ்:
அதிக சேமிப்பு சிறந்தது. 500ஜிபி மற்றும் 1டிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ் (எச்டிடி) கொண்ட லேப்டாப்கள் இன்று மிகவும் பொதுவானவை. இருப்பினும், SDD வேகமானதாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் குறைவான சேமிப்பகத்துடன் வருகிறது. எனவே, லேப்டாப் வாங்கும் போது உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பகத்தைக் கருத்தில் கொள்ள மறக்காதீர்கள்.
SSD (solid state drive) இருந்தால் லேப்டாப் ஆன் செய்தவுடன் துரித வேகத்தில் உடனே ஆன் ஆகிவிடும். குறைவாய் இருந்தால் ஆன் ஆவதில் தாமதம் ஆகும். ஆனால், சற்றுவிலை அதிகமாய் இருக்கும்.
O.S எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முக்கியமானது. இதுதான் லேப்டாப்பின் இதயம் போலே. தற்போது விண்டோஸ் 10 புது வெர்ஷன் வந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு வாங்கவும்.
எனக்கு செக்யூரிட்டி அதிகம் தேவையெனில் ஆப்பிளின் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நாடலாம்.
Graphic card இருந்தால் ஆன்லைன் வகுப்பில் அனிமேஷன் சப்போர்ட் ஆவது எளிதாய் இருக்கும். இதில் இருவகையாய் இருக்கும். அதிக வீடியோக்கள் பார்ப்பதாய் இருந்தால் Dedicated graphic card உபயோகிக்கலாம். கணினி வேகம் குறையாது. குறைவான பயன்பாடு மட்டும் போதுமென்றால் integrated graphic card போதும்.
ஆன்ட்டி வைரஸ் புரோக்கிராம் முக்கியமாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆமை புகுந்த வீடும் ஆன்ட்டி வைரஸ் இல்லாத கணினியும் நல்லாயிருக்காது.
i3-4GB , i5-8GB, i7-8GB இருக்கும். தேவைக்கேற்ப பார்த்து வாங்கலாம். பேட்டரி:
ஒரு நல்ல பேட்டரி இல்லாமல், உங்கள் லேப்டாப் உங்களுக்குத் திருப்தியைக் கொடுக்காது. உங்கள் லேப்டாப் குறைந்தபட்சம் 4-6 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்க வேண்டும். எட்டு மணிநேர பேட்டரி நன்றாகக் கருதப்படுகிறது.
எல்லோரும் வைத்துள்ளனர் என வாங்காமல் தேவையாக இருப்பின் வாங்கவும். பள்ளிவயது குழந்தைக்கு எனில் i3-4GB-1TB போதும். கல்லூரி மாணவர்க்கு எனில், i5-8GB-2TB -Grabhic card போதும். பிசினஸ்க்காக வாங்க வேண்டுமெனில் கமர்ஷியல் லேப்டாப் வாங்கலாம். ஏனெனில் வெயில், தூசு, வெப்பம் ஆகியவற்றுக்குப் பொருந்தும். எல்லாமே இருப்பதுபோல தேவை எனில் i7-8GB-16GB RAM-SSD Hard disc- graphic card 8GB.
பட்ஜெட், பயன்பாடு இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன லேப்டாப் வாங்குவதில். இணைய வல்லுநர் நண்பர்கள் மற்றும் துறைசார் நண்பர்களின் ஆலோசனையுடன் வாங்கலாம். நல்லன தேர்தெடுத்தால் பிறகு வரும் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.
ஆன்லைன் வசதியும் ஆண்ட்ராய்டு போனும் இல்லாத மாணவ மாணவியரின் கதி என்ன எனவும் யோசிக்க வைத்துள்ளது.
Tuesday, January 16, 2024
NEWS
January 16, 2024
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் பெறுவது எப்படி? - எளிய விளக்கம்! How to get belt replacement online? - Simple explanation!
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் பெறுவது எப்படி? - எளிய விளக்கம்!
'பட்டா' ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் ஆவணம். இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது. தமிழ்நாட்டில் பட்டா வாங்குவது மற்றும் மாற்றத்துக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
‘பட்டா’ - வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்கவேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் ஆவணம் இது. இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது. இதில் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இருக்கும். மொத்தத்தில் அசையா சொத்தான நிலத்திற்கு மிகவும் முக்கியமான ஆவணம். தமிழ்நாட்டில் பட்டா மாற்றத்தை ஆன்லைன் வழியே பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நில உரிமையாளர்கள் இதனை எளிய முறையில் இணையவழியில் மேற்கொள்ளலாம். தங்கள் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என எண்ணும் உரிமையாளர்கள் உட்பிரிவற்ற பட்டா மாற்றம், உட்பிரிவுடன் பட்டா மாற்றம் செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் விவரம், நில விவரம், இணைப்பு விவரம் மற்றும் கட்டணம் செலுத்துதல் என மொத்தம் நான்கு நிலைகள் கொண்டது இந்த விண்ணப்ப முறை.
மற்றும்
ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி?
பாட்டா-வுக்கு விண்ணப்பதாரர்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதில்,
‘பட்டா மாறுதல் விண்ணப்பிக்க’ (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு செல்லும்.
அதில், பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தியாக ஓடிபி வரும்.
அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளப்படும். தொடர்ந்து மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக கொடுக்க வேண்டும்.
பின்னர், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம் போன்ற ஏதேனும் ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் கொடுக்க வேண்டும். டாக்குமெண்ட் வடிவில் இதனை வலைதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டி இருக்கும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும். கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும், அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும்.
அதில், குறிப்பிட்டுள்ளது போல அதற்கான பணிகள் நடைபெறும். அதன் பின்னர், பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும்.
மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.
Saturday, December 30, 2023
INFORMATION
December 30, 2023
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - செய்தி வெளியீடு...
இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamilnadu platform based gig workers welfare board) என்ற பெயரில் புதிதாக நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு நல திட்ட உதவிகள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் சார்ந்த 'கிக்' தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்களில் இணையவழி விற்பனை, வர்த்தக சேவை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான பணியமைப்பில் மரபான முறையில் அல்லாமல், இணையதள நிறுவனங்கள், தொழிலாளர்களிடையே உடன்படிக்கை அடிப்படையில் வேலை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என சுதந்திர தின உரையில் அறிவித்தார். அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் (Gig) தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்ட அட்டவணையில் சேர்த்துஅரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாரியத்துக்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு, நலவாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுஉள்ளது.
இவ்வாரியத்தில் 18 வயதுமுதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின்கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு பெற்றதொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 28, 2023
INFORMATION
December 28, 2023
Internet Connection - Primary & Middle HM's , EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
Internet Connection - Primary & Middle HM's , EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* தலைமை ஆசிரியர்கள் EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
1️⃣ *நடுநிலைப் பள்ளிகள்*
🔹• School Login --> school --> Infrastructure --> Tech --> Fill the Details
*1) Device Details*
தங்கள் பள்ளியில் உள்ள சாதனங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
*2) Internet Connectivity Details*
100Mbps வேகத்திற்கு மேல் உள்ள இணைய இணைப்பு வசதி பெற்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
*3) Smart Board Details*
தங்கள் பள்ளியில் Smart Board இருப்பின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்
🔹School Login --> school --> Infrastructure --> Hi-Tech Lab Site Preparation
நடுநிலைப் பள்ளியில் Hi Tech Lab வசதி ஏற்படுத்த உள்ளதால் Emis வலைதளத்தில் Hi-Tech Lab Site Preparation சார்ந்த தகவல்களை புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும் 1️⃣ *தொடக்கப் பள்ளிகள்*

தொடக்கப் பள்ளியில் Smart Class Room வசதி ஏற்படுத்த உள்ளதால் Emis வலைதளத்தில் Smart Class Room Preparation சார்ந்த தகவல்களை புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும்

பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...
பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை...
அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL,railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு
1. Static IP address
2. Gateway IP
3. Network mask
பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால் இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
Wednesday, December 27, 2023
TNEB
December 27, 2023
மின்கட்டணம் தொடர்பாக பயனாளிகள் பெறும் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்
மின்கட்டணம் தொடர்பாக பயனாளிகள் பெறும் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்!
Step-1
குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link)
Step-2
கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below)
புது வசதி,
இப்போது இன்னும் எளிது
இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் இன்னும் எளிதாக!
கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க "PAYMENT OPTIONS" मालकं कैलीकं செய்யவும். பரிவர்த்தனைக்கான பாதுகாப்பான கட்டண நுழைவாயிலுக்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
(Click on the "PAYMENT OPTIONS" button to initiate the payment process. You will be redirected to a secure payment gateway for the transaction) தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை கட்டலாம். இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் இன்னும் எளிதாக செலுத்தலாம். குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link). கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below). கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க “PAYMENT OPTIONS” கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம்.

அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!
அமரும் விதத்தை வைத்தே ஆளுமைத் தன்மையை கண்டறியலாம்!
நீங்கள் எப்படி அமர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் ஆளுமை தன்மையும் இருக்கும். சிலர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமருவார்கள். சிலர் ஒரு காலை எடுத்து மடியில் வைத்து அமர்வார்கள். அதற்கு ஏற்றபடி அவர்களின் குணாதிசயங்கள் இருக்கும்.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமருதல் ( cross legged):
இப்படி அமரும் நபர்கள் எப்போதும் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்த எண்ணுவார்கள். ஆனால், பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். பிறர் பார்வையில் மிகுந்த தோழமை உணர்வுள்ள நபராகக் காட்சியளிப்பார்கள்.
எந்தத் தலைப்பிலும் பிறர் மனம் கவரும்படி உரையாடுவதில் வல்லவர்கள். சில விஷயங்களை தங்கள் மனதிற்குள்ளேயே மறைத்துக் கொண்டாலும் நிறைய விஷயங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்வார்கள். பிறரை தேவையில்லாமல் மதிப்பிட மாட்டார்கள்.
தம் மனதையும் ஆன்மாவையும் திருப்திப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். உலகியல் விஷயங்கள் அவ்வளவாக இவர்களை ஈர்க்காது. தம் வாழ்க்கைத்துணை மேல் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். தம் வார்த்தையை எப்போதும் காப்பாற்றுவார்கள். கணுக்கால்களை ஒன்றின் மேல் ஒன்று போட்டுக் கொண்டு அமர்பவர்கள் ((Ankles crossed):
இவர்களுக்கு எப்போதும் ஒரு லட்சியமும் அதை அடைவதற்கான ஆர்வமும் இருக்கும். அதை மிக எளிதாக தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் கடத்துவார்கள். மிகுந்த செழுமையான பணக்காரராக, சமூகத்தில் அந்தஸ்து உள்ளவராக இருக்க விரும்புவார்கள். பிறர் பேசுவதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள். தங்கள் ரகசியத்தை இவர்களிடம் பகிர்ந்துகொள்ள பிறர் விரும்புவார்கள். ஆனால், அவற்றை ஒரு சிறிது கூட வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால், அதேசமயம் தங்களைப் பற்றிய ஒரு சிறு விஷயத்தைக் கூட பிறருக்கு சொல்லவே மாட்டார்கள். தம் நிழலைக்கூட பிறர் பின் தொடர விரும்ப மாட்டார்கள். இவர்களுடைய ஆடை, அலங்காரங்கள் மிகுந்த நாகரிகமாக ஃபேஷனபிளாக இருக்கும். அது எல்லா சந்தர்ப்பங்களிலுமே வெளிப்படும். உள்ளுக்குள் எப்போதும் ஒரு சின்ன பாதுகாப்பற்ற தன்மை இருக்கும். ஆனால், அதை தங்களுடைய புன்னகையால் மறைத்துக் கொள்வார்கள்.
காதலிலும் திருமண பந்தத்திலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பார்கள். எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்த பின்பே அவர்களை வாழ்க்கை துணையாகவோ காதலியாகவோ ஏற்றுக் கொள்வார்கள். வலது காலை மடித்து இடது தொடை மேல் போட்டுக்கொண்டு அமர்தல் (Figure four lock):
இவர்கள் தன்னம்பிக்கை உடையவராக, தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆசைபடுபவர்களாக, பிறரை அதிகாரம் செய்ய விரும்புவராக இருப்பார்கள். எந்த இடத்திலும் தம் ஆளுமை தன்மையை நிரூபிக்க விரும்புவார்கள். பார்ப்பதற்கு மிகுந்த பக்குவப்பட்ட மனிதர் போல தோற்றமளித்தாலும் உள்ளுக்குள் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கும்.
பிறரை சார்ந்து வாழ விரும்ப மாட்டார்கள். இவர்களது நம்பிக்கையும் சுயபுரிதலும் பிறரை வசீகரிக்கும். பிறரை அடக்கி ஆள நினைத்தாலும் அதை ஒரு வசீகரமாக, கலையுணர்வுடன் செய்வார்கள். தம்மைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய நேரம் செலவழிப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் அறிவுத் தேடலிலும் அதிக ஆர்வம் இருக்கும். தம் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கல்வியிலும் பொது வாழ்க்கையிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள். தங்களை பிறருக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணையிடம் அவ்வளவாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாகவே அவர்களை அணுகுவார்கள். மனைவி அல்லது காதலியை சுயமாக செயல்பட அனுமதிப்பார்கள்.
Sunday, December 10, 2023
LAW
December 10, 2023
இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு
*இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு காண்போமா?*
*வசதியுரிமைக்கு ஏற்படும் தொல்லைகள்*
ஒரு நிலத்தின் உரிமையாளர், தன்னுடைய நிலத்தை நல்லமுறையில் அனுபவிப்பதற்காக, அருகில் உள்ள நிலத்தில் சில வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அல்லது அந்நிலத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உள்ள உரிமையே வசதியுரிமை எனப்படும். வசதியுரிமை என்பதை "இந்திய வசதியுரிமைகள் சட்டம்" (Indian Easements Act 1882) பிரிவு 4 வரையறை செய்கிறது. மற்றொருவருடைய நிலத்தில் இருந்து வசதியுரிமை பெறும் சொத்து ஓங்கு சொத்து (Dominent heritage) என்றும் ஓங்கு சொத்துக்கு வசதி உரிமைகளை வழங்கும் சொத்துக்கு ஓடுங்கு சொத்து (Servient heritage) என்றும் அழைக்கப்படும். காற்று அல்லது வெளிச்சம் பெறும் உரிமை, பாதை உரிமை, மழைநீர் அல்லது கழிவுநீர் கடத்தும் உரிமை, ஒரு சொத்து சேதமடையாமல் இருக்க அருகிலுள்ள சொத்தை தாங்கி பிடித்துக் கொள்ளும் உரிமை ஆகியன வசதியுரிமைக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். வசதி உரிமைகளுக்கு ஏற்படும் தொல்லைகளால் ஏற்பட்ட இழப்பை வாதி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தனக்குரிய வசதியுரிமையை நிரூபித்தாலே போதுமானதாகும்.
1. தாங்கு வசதியுரிமை (Right to support)
ஒரு நிலம் சரிந்து விழாமல் இருப்பதற்கு அந்நிலம் அதன் அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு நிலம் சரிந்து விழாமல் இருக்க அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்வதற்கு இருக்கும் உரிமையே தாங்கு வசதியுரிமை எனப்படும். இது எல்லா நிலங்களுக்கும் உரிய இயற்கை உரிமையாகும். எனவே ஒரு நிலம் சரிந்து விழுகின்ற வகையில் அல்லது சேதமடையும் வகையில், அருகில் உள்ள நிலத்தில் பள்ளம் தோண்டுவதோ மண்பிடிப்பை அகற்றுவதோ கூடாது. தாங்கு வசதியுரிமைக்கு தீங்கிழைக்கும் வகையில், அருகில் உள்ள நிலத்தை தோண்டுவது அல்லது சுரங்கம் வெட்டுவது ஆகியன தொல்லை தீங்காக கருதப்படும். இத்தகைய இயற்கையான தாங்கு வசதியுரிமை, கட்டிடங்கள் இல்லாத காலி நிலங்களுக்கு மட்டுமே உண்டு. கட்டிடங்கள் கீழே விழாமல் இருப்பதற்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமை அல்ல. ஆனால் கட்டிடங்களுக்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமையாக கிடைக்காவிட்டாலும், அது பக்கத்து நிலத்தின் உரிமையாளரின் அனுமதி மற்றும் நீடாணுபோக உரிமையின் மூலம் பெறப்படலாம்.
Dalton -Vs- Angus (1881) 6 A.C.740 என்ற வழக்கில் வாதியின் வீடும் பிரதிவாதியின் வீடும் அருகருகே உள்ள நிலங்களில் அமைந்திருந்தது. வாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தொழிற் சாலையாக மாற்றி விட்டார். இப்போது வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு பிரதிவாதியின் நிலத்திலிருந்து முன்பைக் காட்டிலும் கூடுதலான தாங்கும் வசதியுரிமை தேவைப்பட்டது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, பிரதிவாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய நிலத்தில் சில பள்ளங்கள் தோண்டினார். இதனால் வாதியின் கட்டிடம் தாங்கும் வசதியுரிமையை இழந்து கீழே விழுந்து விட்டது. வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு இயற்கையாக தாங்கும் வசதியுரிமை இல்லாவிட்டாலும், அது கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வசதியுரிமையை அனுபவித்து வந்துள்ளது. எனவே, அக்கட்டிடம் நீடாணுபோக உரிமை (Presscription) யின் மூலம் தாங்கு வசதியுரிமையைப் பெற்றுள்ளது. எனவே பிரதிவாதி, வாதிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2. வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமை (Right to light and air)
வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமைகள் நிலங்களின் தாங்குவசதியுரிமையைப் போல் இயற்கை உரிமை அல்ல. எனவே, அவ்வசதி உரிமைகளை அனுமதி மற்றும் நீடாணுபோகத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும். அவ்விதம் நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த வெளிச்சம் அல்லது காற்றுக்கான வசதியுரிமைக்கு ஊறுவிளைவிப்பது தொல்லை தீங்காகும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த வெளிச்சத்தை தடை செய்யும் தொல்லை தீங்கிற்காக வழக்கிடும் வாதி, பிரதிவாதியின் செயலால், தான் இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு போதுமான அளவைக் காட்டிலும் பெருமளவு குறைந்து விட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். Colls -Vs- Home and Colonial stores Ltd., (1904) A.C. 179 என்ற வழக்கில் பிரதிவாதி எழுப்பிய 42 அடி உயர கட்டிடத்தால் வாதி இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சம் பாதிக்கப்பட்டதாகக் கூறி அக்கட்டிடம் கட்டப்படுவதை தடைசெய்யக் கோரி வழக்கிடப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் வாதியின் கட்டிடத்திற்கு வரும் வெளிச்சம் முன்பு இருந்த அளவிற்கு வராவிட்டாலும் போதுமான அளவு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் தடை செய்யப்படுவதை தொல்லையாக கருதுவதற்கு, ஏற்கனவே அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு குறைந்துள்ளதா ? என்பதைக் கணக்கில் கொள்ளக் கூடாது போதுமான அளவு வெளிச்சம் வருகின்றதா என்பதையே கணக்கில் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு வெளிச்சத்திற்கும் குறை வருமாறு வெளிச்சம் தடை செய்யப்பட்டால் மட்டுமே அது தொல்லையாக கருதப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கில் வாதியின் கட்டிடத்திற்கு போதுமான அளவு வெளிச்சம் வருவதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அனுமதி அல்லது நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த காற்றுக்கான வசதியுரிமையை பொதுவாக அண்டை நிலத்தின் எல்லையற்ற மேற்பரப்பு முழுவதிலும் இருந்து கோர முடியாது என்று Webb-Vs- Bird, (1861) 10 C.B. (N.S.) 268- என்ற வழக்கில் பிரதிவாதி கட்டும் கட்டிடம் தன்னுடைய காற்றாலைக்கு வரும் காற்றின் வழியை தடுப்பதாகக் கூறி லாதி வழக்கு தொடர்ந்தார். ஆனால் வாதி அக்காற்றுக் கான வசதியுரிமையை நீடாணுபோகத்தின் மூலம் அடையவில்லை (அதாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்திருக்கவில்லை) என்பதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
( தீங்கியல் சட்டம் The Law of Tort) என்ற சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும். இதன் நூல் ஆசிரியர் த.சிவகுமார், B. A. B. L
Friday, December 01, 2023
INFORMATION
December 01, 2023
தமிழ்நாட்டில் நாளை (02.12.2023) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விபரங்கள்
தமிழ்நாட்டில் நாளை (02.12.2023) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விபரங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), சாய்பாபா காலனி, வனக் கல்லூரி, வடக்கு கோயம்புத்தூர், பட்டேல் சாலை,, RGst,, மரக்கடை, ராம்நகர், காந்திபுரம் பூமார்க்கெட், சுகுர்னார்பேட்டை, ஆவாரம்பாளையம் (பகுதி), ரத்தின.*
ஈரோடு மாவட்டம் - வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கே.*
கன்னியாகுமரி மாவட்டம் - ஆற்றூர், குலசேகரம் உண்ணாமலை கடை, வேர்கிளம்பி,பேச்சிப்பாறை, திற்பரப்பு , திருவட்டார்,திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி,இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம்.* புதுக்கோட்டை மாவட்டம் - அரிமளம் முழுவதும்,அலியானிலை பகுதி முழுவதும்,தல்லாம்பட்டி பகுதி முழுவதும்,அறந்தாங்கி பகுதி முழுவதும்,அவனத்தன்கோட்டை பகுதி முழுவதும்,மரமடக்கி பகுதி முழுவதும்,நாகுடி பகுதி முழுவதும்,கொடிக்குளம் சுற்று வட்டார பகுதி,ஆவுடையார்கோயில் பகுதி முழுவதும்,கீரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்,புதுக்கோட்டை கீரமங்கலம் கீரமங்கலம் கீரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்,வல்லவரி பகுதி முழுவதும்,அமரடக்கி பகுதி முழுவதும்.*
சிவகங்கை - இடைமேலூர், தாமர்க்கி, மலம்பட்டி, கண்டாங்கிபட்டி.*
*தஞ்சாவூர் மாவட்டம் - திருப்புறம்பியம்,சுவாமிமலை,திருப்பனந்தாள், சோழபுரம்,பட்டுக்கோட்டை*
தேனி - லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்,ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருச்சி மாவட்டம் - தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்,பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்தா NGR, NSB RD, வலக்கை கிருஷ்ணா மண்டி, பூலோகநாதர், விஸ்வநாதர் கோவில் வசந்தா என்ஜிஆர்,அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்,புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி,முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி.
திருப்பூர் மாவட்டம் - அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்,வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி*
Tuesday, November 28, 2023
INFORMATION
November 28, 2023
வரிசைகட்டும் வேலை வாய்ப்புகள்... புதிய பட்டப்படிப்பான ‘B.Plan’ பற்றி தெரியுமா?
வரிசைகட்டும் வேலை வாய்ப்புகள்... புதிய பட்டப்படிப்பான ‘B.Plan’ பற்றி தெரியுமா?
பொறியியல் பட்டதாரிகள் தங்கள் பெயருடன் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., என்றெல்லாம் போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றில் புதிதாக பி.பிளான் (B.Plan) என்பதும் சேர இருக்கிறது. புதிதாக அறிமுகமான பி.பிளான் படிப்பு குறித்து பலர் அறியாது இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த படிப்பு இன்னும் பிரபலமாக இருப்பதால், தற்போதைய பள்ளி மாணவர்கள் அது குறித்து அறிந்து கொள்வது நல்லது. புதிய படிப்பு: நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகிப்பதிலும் அரசுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்காற்றும் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, உயர் கல்வி துறைக்கு முக்கியமான வழிகாட்டுதல் வழங்கியது. அதில் நாட்டின் நகர்ப்புற திட்டமிடல் திறன் தொடர்பான ஒரு பரிந்துரையும் அடங்கும். வருங்காலத்தில் திறன் வாய்ந்த பிளானர்கள் (திட்ட அமைப்பாளர்கள்) நாட்டில் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்றும், ஆண்டுக்கு சராசரியாக 6,000 பி.பிளான் பட்டதாரிகள், 2,000 எம்.பிளான் பட்டதாரிகள் தேவைப்படுவதாகவும் நிதி ஆயோக் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் தமிழக அரசும் தம் பங்குக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘பி.பிளான்’ பட்டப்படிப்பை கடந்த கல்வியாண்டு முதல் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிடக்கலை (பி.ஆர்க்) பொறியியலை கற்பிக்கும் ‘ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்’ மூலமாக பி.பிளான் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான 40 சீட்டுகளில் பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றிலேயே 38 இருக்கைகள் நிரம்பி விட்டன. வரவேற்புக்குரிய பி.பிளான் படிப்பை இதர கல்லூரிகளிலும் விரைவில் எதிர்பார்க்கலாம். பி.பிளான் என்பதில் கட்டிடங்கள் மற்றும் நகரியங்களுக்கான திட்ட வடிவமைப்பு தயாரிப்பது முக்கிய இடம் பிடித்திருக்கும். இந்தியாவில் நகர்மயமாதலும், ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கமும் அதிகரித்திருப்பதால் பி.பிளான் பட்டதாரிகளின் தேவையும் அதிகரிக்கும். அவை சார்ந்த அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கட்டிடம் கட்டுதல், கட்டிடக்கலை ஆகியவை மட்டுமன்றி இன்டீரியர் டிசைனிங் துறையில் எதிர்காலத்தை திட்டமிடுவோருக்கும் பி.பிளான் பட்டப்படிப்பு உதவும்.
நுழைவுத்தேர்வு இல்லை: பி.ஆர்க்., படிப்பில் சேர நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். ஆனால், பி.பிளான் படிப்பில் சேர தமிழ்நாட்டின் வழக்கமான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்றால் போதும். பி.இ. சிவில், பி.ஆர்க்., டிசைனிங் படிப்புகளில் ஆர்வம் கொண்டோர் அவற்றுக்கு மாற்றாகவும் பி.பிளான் படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் பி.பிளான் சேர்க்கை சாத்தியமாகும் என்பதால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவது நம் கையில் இருக்கிறது.
கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை ஊன்றி படிப்பதுடன், படங்களை வரைவதில் ஆர்வம் கொண்டோரும் அதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும் இப்போதிருந்தே பி.பிளான் படிப்புக்கு தயாராகலாம். எனவே, பி.பிளான் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்போதிருந்தே ‘பிளான் பண்ணி’ படிக்க ஆரம்பிக்கலாம்?
- எஸ்.எஸ்.லெனின் | தொடர்புக்கு: leninsuman4k@gmail.com