Breaking

Showing posts with label viral video. Show all posts
Showing posts with label viral video. Show all posts

Sunday, March 26, 2023

March 26, 2023

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?
டி.என்.பி.எஸ்.சி நில அளவையர், வரைவாளர் பணியிட தேர்வுகளில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்தநிலையில் ஆயிரம் நில அளவையர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களுக்கு, காரைக்குடியில் இருந்து மட்டும் 700 பேர் தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறிப்பிட்ட ஒரே மையத்திலிருந்து தேர்வாகியுள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றதுபோல், மிகப்பெரிய முறைகேடு காரைக்குடியில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட வேண்டும் எனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Thursday, March 16, 2023

March 16, 2023

குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்

குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்

கன்னியாகுமரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பு, அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகளை, தாய்மாமன் சுரேஷ் என்பவர் வளர்த்து வந்துள்ளார். 17 வயதான சிறுமி, நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். மாணவி பொதுத் தேர்வை எழுத இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மாணவியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிக்கு அதிக சத்து மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போன் மாயமானதால், கடைசியாக செல்போனில் பேசிய நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Saturday, March 11, 2023

March 11, 2023

விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்... - இணையத்தில் பரவிய வைரல் வீடியோ!

விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்... - இணையத்தில் பரவிய வைரல் வீடியோ!

அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்... - இணையத்தில் பரவிய வைரல் வீடியோ!

சேலம் அரசு பள்ளியில் விடைத்தாள் முகப்பு பகுதி தைக்கும் பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு விடைத்தாள் முகப்பு பகுதியில் தைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து தந்திடிவியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா பரிந்துரை செய்திருந்தார். இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வீடியோ தொடர்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Monday, March 06, 2023

March 06, 2023

"100% தேர்ச்சி அளிக்க வேண்டும் என நெருக்கடி...மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்" - ஆசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

"100% தேர்ச்சி அளிக்க வேண்டும் என நெருக்கடி...மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்" - ஆசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கப்படுவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள், பள்ளிக் கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோதும், இதே போன்று நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் புயலை ஏற்படுத்தியுள்ளது.





CLICK HERE TO READ OFFICIAL NEWS

Saturday, February 18, 2023

February 18, 2023

மாணவர்களை பள்ளி கட்டிட பழுது பார்க்கும் பணிக்கு ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்... வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பெற்றோர்

பள்ளிக்கு மாணவர்களை படிக்க அனுப்பினால் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்... வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பெற்றோர்

புதுக்கோட்டை அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிட பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பள்ளி மாணவர்களையே சித்தாள் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அனுமதியின்றி மாயனூர் காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மாணவிகளில் நால்வர், நீரில் மூழ்கி உயிரிழந்ததின் சோக வடு மறைவதற்குள், அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CLICK HERE TO WATCH THE VIDEO

Friday, February 10, 2023

February 10, 2023

TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி - Team EMIS

TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி - Team EMIS

🛑 அனைத்து வகை அரசுப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கவனத்திற்கு

⭕ TNSED Schools App -இல் எவ்வாறு Leaves Update, Apply மற்றும் Approve செய்வது என்பதற்கான விளக்கக் காணொளி.

⭕ அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிரவும்.

⭕ இப்பணியை அவரவர் 8 இலக்க Staff ID-யை பயன்படுத்தி TNSED Schools Leave Management Option வழியே உடனே முடித்துவிடவும்.

⭕ For Doubts contact your BRTEs, DCs and other officials.

- Team EMIS

Video Link 👇🏻

https://youtu.be/MrY4RaUfOCI

Sunday, January 29, 2023

January 29, 2023

ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ

ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ Do you know what democracy is? A comedic portrayal of a schoolboy; A viral video

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ந்தேதி உற்சாகமுடன் நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மூவர்ண கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில், பலரும் பல விசயங்களை பற்றி பேசினர். ஆனால், மராட்டியத்தில் உள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய பேச்சுகள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில் சிறுவன், உண்மையில் இன்றுதான் ஜனநாயக தினம். இந்த நாளில் இருந்தே நாட்டில் ஜனநாயகம் தொடங்கியது. அதனை நான் நேசிக்கிறேன். ஜனநாயகத்தில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். சண்டை போடலாம். நண்பர்களாக இருக்கலாம். காதல் செய்யலாம்.

ஆனால், சிறு சிறு தவறுகளை செய்வதிலும், பிராங்க் விளையாடுவதிலும், வனத்தில் நடந்து செல்வதும், குரங்கு போல் மரத்தில் ஏறுவதும் எனக்கு விருப்பம் ஆகும். இது எல்லாவற்றிற்காகவும் எனது தந்தை என்னை அடிக்கமாட்டார். ஏனெனில், ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கிராமத்தில் உள்ள சின்ன பையன்கள், எனது ஆசிரியரிடம் என்னை பற்றி புகார் கூறி விடுகின்றனர்.

அதன்பின்பு, பயங்கரவாதிகள் ஜனநாயகத்தின் மதிப்புகளை தூக்கி போட்டு மிதிப்பது போல், ஆசிரியர் என்னை மிதித்து விடுவார். சில சமயங்களில் ஆசிரியர் என்னை உக்கி போட சொல்கிறார். எனது அணுகுமுறை ஜனநாயக முறையில் இல்லை என கூறுவார்.

எனக்கு எதிராக அவருக்கு நிறைய புகார்கள் வரும். உண்மையை கூறுவதென்றால், என்னை போன்ற எளிமையான மற்றும் ஏழ்மையான சிறுவன் இந்த ஒட்டுமொத்த தாலுகாவிலேயே கிடையாது. இத்துடன், என்னுடைய விலைமதிப்பற்ற எண்ணங்களை நான் நிறுத்தி கொள்கிறேன். வாழ்க ஜனநாயகம் என சிறுவன் பேசியுள்ளான்.

இதனை கேட்டு கொண்டிருந்தவர்கள் அடக்க முடியாமல் சிரிக்கும் காட்சிகளும் வீடியோவில் காணப்படுகின்றன. வருங்காலத்தில் ஒரு பெரிய தலைவராக இந்த சிறுவன் வருவான் என டுவிட்டர் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த இளம் வயதில் ஜனநாயகம் பற்றி சிறுவனுக்கு நிறைய புரிதல்கள் உள்ளன என மற்றொருவர் தெரிவித்து உள்ளா

Total Pageviews

Search This Blog