Breaking

Showing posts with label BDS. Show all posts
Showing posts with label BDS. Show all posts

Sunday, August 09, 2026

Monday, June 29, 2026

Sunday, November 09, 2025

Tuesday, July 15, 2025

Monday, November 18, 2024

Friday, October 18, 2024

Friday, September 13, 2024

Sunday, August 20, 2023

August 20, 2023

MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் சுற்று கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு

MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் சுற்று கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசை பட்டியல் 1 முதல் 25 ஆயிரத்து 856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் 1 முதல் 13 ஆயிரதது 179 பெற்ற மாணவர்களும் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதைத்தொடர்ந்து வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்றும், இறுதி ஒதுக்கீடு வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 14, 2023

August 14, 2023

MBBS, BDS படிப்பு. மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு. மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்.!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ இடங்கள் பெற்ற செயற்கையாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை மாலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

Sunday, August 06, 2023

August 06, 2023

MBBS / BDS CUTOFF MARK 2023

MBBS / BDS CUTOFF MARK 2023

Monday, July 31, 2023

July 31, 2023

MBBS, BDS படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது. இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள்இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மரில் சேர்ந்த மாணவர்: நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பிடித்த சென்னையைச் சேர்ந்த என்.சூர்யா சித்தார்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 9-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.வருண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். அதேபோல், நீட் தேர்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் கவுஸ்தவ் பவுரி, நீட் தேர்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் சாமுவேல் ஹர்ஷித், நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பிடித்த தமிழகமாணவர் ஜேக்கப் பிவின் ஆகியோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த 3 பேரில் சாமுவேல் ஹர்ஷித், மாநில அரசின் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்திருந்தார். மற்ற இரண்டு மாணவர்கள் மாநில அரசு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
July 31, 2023

MBBS,BDS அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற தமிழக மாணவா்கள்



எம்பிபிஎஸ், பிடிஎஸ்: அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற தமிழக மாணவா்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. தேசிய அளவில் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவா்கள் ஜிப்மா் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். நீட் தோ்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் ஆறாவது இடத்தையும், மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்த சென்னையை சோ்ந்த என்.சூா்யா சித்தாா்த் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தோ்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தை சோ்ந்த எஸ்.வருண், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியிலும் இடங்களைப் பெற்றனா்.

அதேபோன்று, நீட் தோ்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் கௌஸ்தவா் பௌரி, நீட் தோ்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-ஆவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் சாமுவேல் ஹா்ஷித், நீட் தோ்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் ஜேக்கப் பிவின் ஆகியோா் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தோ்வு செய்தனா்.

Sunday, July 16, 2023

Friday, July 14, 2023

Tuesday, July 11, 2023

Sunday, July 09, 2023

Saturday, July 01, 2023

Tuesday, June 27, 2023

Thursday, December 01, 2022

December 01, 2022

MBBS, BDS மருத்துவ நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: கட்டணம் செலுத்த அவகாசம்

மருத்துவ நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: கட்டணம் செலுத்த அவகாசம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதிக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவா்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 2-ஆம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 17- ஆம் தேதி தொடங்கியது. காலியாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதைத் தொடா்ந்து நிா்வாக இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. நிா்வாக ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற மாணவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு அவா்கள் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த புதன்கிழமை (நவ.30) வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, இணையவழியாகவும், கேட்பு வரைவோலை (டி.டி.) மூலமாகவும் பணம் செலுத்துவதில் சில தொழில்நுட்ப இடா்பாடுகள் மாணவா்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள இயலவில்லை என்றும் மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வரும் 2-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சுற்று கலந்தாய்வு தொடங்குவதற்கான அவகாசம் டிசம்பா் 5-ஆம் தேதி வரை இருப்பதால் மாணவா்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தோ்வுக் குழுச் செயலா் டாக்டா் முத்துச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Total Pageviews

Search This Blog