Breaking

Showing posts with label School Education Minister. Show all posts
Showing posts with label School Education Minister. Show all posts

Friday, December 15, 2023

December 15, 2023

Highlights of School Education Minister's Discussion with School headmasters



தலைமையாசிரியர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள் Highlights of School Education Minister's Discussion with Principals

13.12.23 புதன் காலை 11 மணி முதல் 1 மணி வரை நாமக்கல் கரூர் தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சுமார் 800 தலைமை ஆசிரியர்களை

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இணைய வழியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துகள்

நமது பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கவனத்திற்கும் உடனடிச் செயல்பாட்டிற்கும்.👇👇👇

ஆசிரியர்களே சமூகத்தை நிமிரச் செய்யும் முதுகெலும்புகள்.

ஆசிரியர்களே ,

சமூக மரம் சாய்ந்து விடாமல் காக்கும் ஆணி வேர்கள் .

ஆசிரியர்களே , அனைத்துத் துறை நிபுணர்களையும் பிரசவித்துக் கொடுக்கும்

தாய்மை வடிவங்கள் . இத்தகு சிறப்பு மிக்க ஆசிரியர்கள் ,

பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து அதன் காரணமாக உபரி ஆசிரியர் பணியிடங்கள் Abolish ஆவதை தடுக்கவும் ,

சேர்க்கை அதிகரித்து ஆசிரியர் பணியிடம் அதிகரித்து நிறைய ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்து

மாணவர் சேர்க்கையும் மாணவர் வருகையும் "தேர்ச்சியும்" அதிகரித்து

சமூக மறுமலர்ச்சி ஏற்பட

தங்களிடம் நாங்கள் அன்புடன் வேண்டுவது 👇👇👇👇

பள்ளி தொடங்கும் முன் பள்ளிக்கு வருகை புரிதல் .

வகுப்பிற்கு உரிய நேரத்தில் சென்று விடுதல்.

வகுப்பறைக்குச் செல்லும் போது TLM & Notes of Lesson உடன் எடுத்துச் செல்லுதல்.

பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து , புரிந்து படிக்க உதவுதல் .

பாடப் புத்தகங்கள் தாண்டிய வாசிப்பை ஊக்குவித்தல்.

தமிழ் & ஆங்கிலத்தில் சுயமாகப் பேசவும் , எழுதவும் கட்டுரைப் பயிற்சிகள் அளித்தல்

மொழி ஆற்றல் வளர்த்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்தல்.

குழந்தைகளுக்குத் தவறாமல் ஆய்வக அனுபவம் தருதல். மன்றச் செயல்பாடுகள் மூலம்

சிறந்த ஆளுமைகளை, குடிமக்களை வார்த்தெடுத்தல்.

கணக்குச் சூத்திரங்களும் தமிழ்க் கவிதைகளும் மரத்தின் கிளைகளில் காய்த்துத் தொங்குதல்.

மணற்கேணி செயலி வீடியோக்களைப் பயன்படுத்துதல்.

உங்களின் சிறந்த கற்பித்தல் திறனை வீடியோ ஆக்கி மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்திட அனுப்பி வைத்தல்.

செப்டம்பர் & டிசம்பர் போன்ற தேர்வு மாதங்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல்.

மாணவர் மனசு பெட்டியில் வரும் கடிதங்களுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருதல்.

"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாகத் தமிழ் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)

"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் நன்றாக ஆங்கிலம் வாசிக்கத் தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)

"எங்கள் வகுப்பறையில் அனைவருக்கும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கு தெரியும்" (6 & 7 வகுப்புகளில்)

எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு நிச்சயம் ஒருவராவது NEET/JEE / NIFT / CLAT / NATA தேர்வுகளில் வெற்றி பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் இந்த ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் தகுதியான அனைவரும் தொழில் கல்வி படிப்பில் நிச்சயம் சேருவோம்.(12ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் உள்ள தகுதியான மாணவ , மாணவிகள் அனைவரும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவோம்.(12 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் முதலமைச்சர் திறனறி தேர்வில் வென்று 6 ஆண்டுகள் மாதம் ரூ.1000 பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் தமிழ்த் திறனறி தேர்வில் வென்று 2 ஆண்டுகள் மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை பெறுவோம். (11 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகளுக்கு வருடம் ரூ.12000 ஊக்கத் தொகை நிச்சயம் பெறுவோம். (8 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் ஊரகத் திறனறி தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் ரூ.1000 ஊக்கத் தொகை பெறுவோம். (9 ஆம் வகுப்பில்)

எங்கள் வகுப்பில் NTSE தேர்வில் வெற்றி பெற்று

Ph.D படிக்கும் வரை ஊக்கத் தொகை பெறுவோம். (பத்தாம் வகுப்பில்)

போன்ற ஊக்குவிக்கும் வாசகங்களால் வகுப்பறைகளுக்கு வாசம் சேர்த்தல்.

வெற்றியோ தோல்வியோ

முயற்சியை மட்டும் கைவிடாது இருத்தல்.

TLM அறை பராமரித்தல்.

TLM காட்சிப்படுத்தல்.

உள்ளூர் மக்களுடன் & பெற்றோர் மகிழும் வண்ணம் இணைந்து செயல்படுதல் அதிக வெற்றி தரும்.

வருகிற 2024 புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக அனைவருக்கும் அமைய இனிய நல் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐

நன்றி.🙏🙏🙏🙏🙏

வணக்கம்.

Friday, August 19, 2022

August 19, 2022

பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம்

தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை -தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்பட வேண்டிய புத்தகங்கள், சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளின் செயலாக்கம் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Monday, July 18, 2022

July 18, 2022

கள்ளக்குறிச்சி விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

சின்னசேலம் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு மாதிரி கூறி வருகின்றனர். எங்களைப் பொருத்தவரை, பள்ளிக்கல்வித்துறை அனுமதி இல்லாமல் தனியார் பள்ளிகள் விடுமுறையெல்லாம் விடக்கூடாது. மாணவர்களின் நலனை கருதியே இதை கூறுகிறோம்.



இதையும் படிக்க | ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி???

கள்ளக்குறிச்சியைப் பொருத்தவரை, தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே கூறியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் இன்று நேரில் செல்கிறேன்.

பொதுவாகவே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. முதல்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதை அறிவித்திருந்தார். குழந்தைகள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. விசாரணைக்குப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், அதிகாரிகள் அனைவரையும் உடன்வருமாறு சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை சேர்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பார்க்க கூறியிருக்கிறேன். அந்த பள்ளியின் சேதாரத்தைப் பார்க்கும்போது, அந்தப் பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

அதே நேரத்தில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சிபிசிஐடி விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த தீர்ப்பு எப்படி வந்தாலும், நிச்சயமாக அவர்களுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog