Breaking

Showing posts with label government jobs. Show all posts
Showing posts with label government jobs. Show all posts

Saturday, August 08, 2026

Tuesday, August 04, 2026

Thursday, July 30, 2026

Thursday, July 23, 2026

Saturday, March 21, 2026

Thursday, December 25, 2025

Wednesday, December 24, 2025

Thursday, March 20, 2025

Tuesday, February 04, 2025

Wednesday, June 26, 2024

Tuesday, February 20, 2024

Monday, February 19, 2024

February 19, 2024

மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி - விவரம்



Central Government Service; 6 months training with food and accommodation for 1000 students - details மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி. - விவரம்.

மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

''மத்திய குடிமைப் பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம்‌ மாணவர்களுக்கு, அவர்கள்‌ முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும்‌ 7,500 ரூபாய்‌ மற்றும்‌ முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம்‌ ரூபாய்‌ ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

ஆறு மாத காலப்‌ பயிற்சி இத்திட்டம்‌ 10 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ கடந்த ஆண்டு முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்‌ தொடர்ந்து, தற்போது ஒன்றியப்‌ பணியாளர் தேர்வாணையம்‌, இரயில்வே மற்றும்‌ வங்கிப்‌ பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ அதிகம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம்‌ மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில்‌ உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப்‌ பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌''.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Saturday, December 30, 2023

December 30, 2023

பணி விதிகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் - இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை



பணி விதிகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் - இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை!!!

அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பங்களை வரவேற்றது. கோபிகிருஷ்ணா என்பவர் அளித்த விண்ணப்பத்தை, தேர்வு வாரியம் நிராகரித்தது.

சர்ச்சை இல்லை இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து, கோபிகிருஷ்ணா, மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜராகினர்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ள தகுதியை, மனுதாரர் பெற்றுள்ளார். நிர்ணயித்த முறைப்படியே தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதால், மனுதாரர் தகுதியை செல்லாது எனக் கூற முடியாது, என்றார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரைப் பொறுத்தவரை, கல்வித் தகுதியை பெற்றுள்ளார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், அந்த தகுதி, அரசாணையில் குறிப்பிட்டுள்ள முறைப்படி பெறப்பட்டதா என்பது தான் கேள்வி.கடந்த 2009 ஆகஸ்டுடில் பிறப்பித்த அரசாணைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2, மூன்றாண்டு பட்டப்படிப்பு என்ற வரிசையில் தான், கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10ம் வகுப்பு, பிளஸ் 2க்கு பின்னரே, பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின், என்ன காரணங்களாலோ, பிளஸ் 2 படிக்கவில்லை. ஏற்கவில்லை

பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தேசிய தகுதி தேர்வு என, அனைத்து தகுதிகளையும் பெற்ற பின், 2019ல் தனித் தேர்வு வாயிலாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 படிப்புக்கு முக்கியத்துவம் இல்லை என்றால், அதை மனுதாரரும் படித்திருக்க மாட்டார்.ஆனால், பல ஆண்டுகளுக்கு பின், அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசாணையை கவனத்தில் கொண்டுள்ளார். எனவே, பிளஸ் 2 தகுதி பெறுவது கட்டாயம். அந்த தகுதியை, பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் பெற்றிருக்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான தகுதியை பெற்றிருந்தும், பிளஸ் 2 படிப்பை கடைசியில் முடித்துள்ளார். இந்த நடைமுறையை, நீதிமன்றம் ஒருபோதும் ஏற்கவில்லை.

பணி விதிகளின்படி அல்லது அறிவிப்பாணையின்படி, தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், வேலை பெற உரிமையில்லை.

மனுதாரர் பெற்றுள்ள கல்வித் தகுதி, அரசு நிர்ணயித்த முறைப்படி இல்லாததால், வேலை பெறுவதற்கு அவை செல்லத்தக்கதாக கூற முடியாது.மனுதாரர் மீது இரக்கம் கொள்ளலாம்; அவருக்கு நிவாரணம் வழங்க, சட்டம் அனுமதிக்கவில்லை. பார்லிமென்ட், சட்டசபை இயற்றும் சட்டங்கள் வாயிலாக, பல்கலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. திறந்தநிலை பல்கலைகளும், சட்டத்தின் வாயிலாக தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என, ரெகுலர் முறையில் படிக்காதவர்களுக்கு கல்வி வழங்குவது தான், இந்த பல்கலைகளின் நோக்கம். இவை, தகுதியானவர்களுக்கு பட்டங்கள் வழங்குகின்றன.மறுக்கின்றனசட்டங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் பல்கலைகள், இந்த கல்வித் தகுதிகளை வழங்கும்போது, அவற்றை அரசு பணிக்கு ஏற்காமல், அரசு துறைகள் மறுக்கின்றன. இத்தகைய படிப்பை படித்த மாணவர்களின் நிலை பரிதாபமானது.

எனவே, சமூக நலன் கருதி, இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்யலாம். அதுவரை, இருக்கிற சட்டத்தைத் தான் நீதிமன்றம் கணக்கில் கொள்ள முடியும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Sunday, June 11, 2023

Friday, June 02, 2023

Wednesday, March 01, 2023

March 01, 2023

உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023


உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Group-B Post)

காலியிடங்கள்: 550 

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

வயது வரம்பு: 1.1.2023 தேதியின் படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கொள்குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்பியூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023

Friday, February 24, 2023

Tuesday, February 21, 2023

February 21, 2023

இன்றைய 21-02-2023 தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு - 275 Pages PDF



275-பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு....

இன்றைய கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள் - 20-02-2023

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Wednesday, February 15, 2023

February 15, 2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை - கடைசி தேதி - மார்ச்,01,2023 10th pass? - Indian Army Jobs - Last Date - March,01,2023

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? - இந்திய ராணுவத்தில் வேலை காத்திருக்கு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள MTS, Cook, Washerman, Barber, Masalchi பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - இந்திய ராணுவம்

பதவி - MTS, Cook, Washerman, Barber, Masalchi

காலியிடங்கள் - 135

கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு

சம்பளம் - ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை

வயது வரம்பு - 18-25

பணியிடம் - இந்தியா முழுவதும்

தேர்வு முறை - Written Test/ Trade Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - To The Group Commander,

HQ 22 Movement Control Group, Pin-900328, C/O, 99 APO

இணையதள முகவரி - www.joinindianarmy.nic.in

கடைசி தேதி - மார்ச்,01,2023

Monday, February 13, 2023

February 13, 2023

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

Tamil Nadu Government Commission for Persons with Disabilities Jobs - Last Date to Apply: 23.2.2023
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணயிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: திட்ட அலுவலர் 
காலியிடங்கள்: 4
பணி: புள்ளி விவர ஆய்வாளர்
காலியிடங்கள்: 1
பணி: முதுநிலை கணக்காளர்
காலியிடங்கள்: 1
பணி: மாவட்ட திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 32
பணி: கணக்களார்
காலியிடங்கள்: 15
தகுதி: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://scd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

Total Pageviews

Search This Blog