Breaking

Showing posts with label counseling News. Show all posts
Showing posts with label counseling News. Show all posts

Monday, February 13, 2023

February 13, 2023

யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு



யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு Yoga-naturopathy: Live consultation tomorrow

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பில் சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.

இதுவரை அந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்காதவா்கள் வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 413 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி பிற்பகலில் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. முதல் சுற்று மற்றும் சிறப்பு சுற்று கலந்தாய்வுகளில் இடங்கள் பெற்றவா்கள் இதில் பங்கேற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 01, 2022

October 01, 2022

பி.ஆர்க் தரவரிசை பட்டியல் 5ம் தேதி வெளியீடு: 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பி.ஆர்க் தரவரிசை பட்டியல் 5ம் தேதி வெளியீடு: 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - B.Arch rank list will be published on 5th: Counseling will be held on 8th; Minister Ponmudi's announcement

பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 5ம் தேதி வெளியிடப்படும். 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வு 2வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர்.

அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்குகிறது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரு சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரம்பும். நீட் தேர்வின் தாமதம் காரணமாகவே, கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் அதிக இடங்கள் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் காலி இடங்கள் இருக்காது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் இன்ஜினியரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கு திட்டமும் செயல்படுத்தப்படும். பிளஸ்2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, September 21, 2022

September 21, 2022

Eng., First Round: 'Admission' ends tomorrow - இன்ஜி., முதல் சுற்று: 'அட்மிஷன்' நாளை கடைசி

Tomorrow is the last day for the first round allotted students in engineering counseling to join colleges.

Engineering General Counseling started on 10th. Out of a total of four rounds, 12,591 candidates were allotted seats in the first round. 6,277 confirmed this allotment and got the final allotment. Also, 4,430 people have got their allotment and are on the waiting list to get allotment if desired seats are available.

In this case, all those who have got quota have been given a week's time to confirm their admission. Accordingly, the concerned students will submit their original certificates, pay the tuition fee and accept the provisional allotment tomorrow to confirm the admission and the final allotment order will be issued on 25th.

Accordingly, it has been announced that the 'Choice Billing' registrations for the second round will start on the 25th. For more information, visit www.tnea online.org.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்வதற்கு நாளை கடைசி நாளாகும்.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், 10ம் தேதி துவங்கியது. மொத்தம் நான்கு சுற்றுகளில், முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றதுடன், விரும்பிய இடங்கள் கிடைத்தால் ஒதுக்குமாறு, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், ஒதுக்கீடு பெற்ற அனைவரும் சேர்க்கையை உறுதி செய்வதற்கு, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை அளித்து, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்வதற்கு நாளை கடைசி.தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்று, முன்னிலை இடங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வரும், 25ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு, விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வுக்கான 'சாய்ஸ் பில்லிங்' பதிவுகள், 25ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnea online.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Saturday, August 27, 2022

August 27, 2022

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் க. பொன்முடி பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள், உள் ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் யார் சேர முடியும் என்பது குறித்து தெளிவான விவரங்களை அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது, செப்டம்பர் 10ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த பொறியியல் கலந்தாய்வில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்கள்ஒதுக்கப்படும். அதாவது, பொறியியல் கலந்தாய்வில் ஒரு சதவீதம் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

சமூக நீதியின்அடிப்படையில் எல்லா பிரிவுகளில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எட்டாம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டமும் இந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்படுகிறது.

நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு

வரும் செப்டம்பர் 10 முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி 12ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூன்று நாள்கள் நடைபெறும். பிறகு, அக்டோபர் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 29ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை 4வது கட்ட பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.

நவம்பர் 10 முதல் 20ஆம் தேதி வரை எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்தார் அமைச்சர் க. பொன்முடி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
August 27, 2022

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு ஏன் ஒத்திவைக்கப்பட்டது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழகத்தில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

நீட் முடிவு எப்போது?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 26, 2022

August 26, 2022

TNPSC இன்று 26/08/2022 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர் தெரிவு தொடர்பான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

CLICK HERE TO DOWNLOAD

Thursday, August 25, 2022

August 25, 2022

B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்

பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி செப்.12ம் தேதி வரை நடக்கவுள்ளது என மாணவர் சேர்க்கை செயலாளரும், கல்லூரி முதல்வருமான முனைவர் பழனி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 24, 2022

August 24, 2022

நாளை நடைபெறவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு.

"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஆக.25) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். 21-ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள், ஆனால் இன்னும் வெளியிடமால் காலம் தாழ்த்தப்படுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள், அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதியன்று நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Saturday, August 20, 2022

August 20, 2022

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20) தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-இல் தொடங்கி அக்டோபர். 23 வரை நடைபெறும்.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Tuesday, August 09, 2022

August 09, 2022

இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.

இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.

அரசு ஆடவர் கலைக்கல்லூரி - கிருஷ்கிரி இளநிலை மாணவர் சேர்க்கை 2022 - 2023 | முதல் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு.
August 09, 2022

BE - ஆக.22-க்கு பதிலாக ஆக.25-ல் தொடக்கம்: பொறியியல் கலந்தாய்வு அக்.21 வரை நீட்டிப்பு

BE - ஆக.22-க்கு பதிலாக ஆக.25-ல் தொடக்கம்: பொறியியல் கலந்தாய்வு அக்.21 வரை நீட்டிப்பு

இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆக.22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆக.25-ம் தேதி தொடங்கி அக்.21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடந்துகொண்டிருக்கிற கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தோம். இப்போது ஆக.22-ம் தேதி தொடங்குவதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும்.

நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கெனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அந்த நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.

Monday, August 08, 2022

August 08, 2022

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆக.25-ல் தொடக்கம்

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.



இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:



பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினர் கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு ஆகஸ்ட் 20 முதல் 23 வரை நடைபெறுகிறது.



கலந்தாய்வுக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவுபெறும் எனத் தெரிவித்துள்ளார்.



மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆகஸ்ட் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தர வரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது

அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது

Tuesday, August 02, 2022

August 02, 2022

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டில் புதிய முறை: மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் பேட்டி

இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பம் பதிவாகி உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 69,079 ேபர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 முதல் வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பொறியியல் படிப்பில் நடப்பாண்டு முதல், புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த பின்னர் 7 நாட்கள் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படும். இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்கள் காண்பிக்கப்படும். அவர்களுக்கு பின்னால் இருக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் வழங்கப்படும். அதேபோல், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் இந்த இடம் தனக்கு தேவை எனவும், அடுத்த சுற்றில் கலந்துகொண்டு வேறு இடத்தை தேர்வு செய்ய விரும்புவதாக( Upborad Movement) தெரிவிக்கும் மாணவர்கள் தகவல் உதவி மையங்களில் சென்று அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதனால் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அதற்கு பின்னர் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்கள் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேற்று 250 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 146 பேர் மட்டுமே வருகை தந்தனர்.
August 02, 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும்

*🛑⚡அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும்.*

*தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.*

*கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது.*

*மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.* *இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.*

*அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 163 கல்லூரிகளில் ஆக.5 முதல் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

*விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*

Friday, July 29, 2022

July 29, 2022

பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி நாள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ளசுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில்நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (ஜூலை 29) காலஅவகாசம் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை இன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 1.58லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

Total Pageviews

Search This Blog