temporary teacher posts
December 01, 2025
Showing posts with label temporary teacher posts. Show all posts

Monday, December 01, 2025
Sunday, March 02, 2025
Wednesday, February 26, 2025
Friday, July 22, 2022
தற்காலிக ஆசிரியர்
July 22, 2022
தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவு.

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கணிதத் துறை மற்றும் கல்வியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண் குறைவால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பின்னர் போட்டித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு 2018 ஜூலை 20-ல் உத்தரவிட்டது.
இதையும் படிக்க | 6-12 வகுப்புகளுக்கு அலகுத் தேர்வு நடத்துதல் - சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.
எனவே, இடஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்ட முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தடை விதித்தும், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தடை காரணமாக தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை தொடங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | TNPSC குரூப் 1 தேர்விற்கு இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் வரை விண்ணப்பிக்கலாம்..
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்தார்.

Monday, July 11, 2022
temporary TEACHERS
July 11, 2022
TET தேர்ச்சி பெற்றவர்கள், TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும்:
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும்
-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 15-க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது
இதையும் படிக்க | தற்காலிக ஆசிரியர்கள் பணி - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Thursday, July 07, 2022
temporary teacher posts
July 07, 2022
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
temporary teacher posts
July 07, 2022
அரசு பள்ளி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்; விசாரணை ஒத்திவைப்பு!
அரசு பள்ளி பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கணிதத்துறையில் பட்டமும், கல்வியியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளேன். 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தேர்வு முறை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கலான நிலையில், தமிழக அரசு கடந்த 2018 ஜூலை 20-ஆம் தேதி போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெறும் எனக் கூறியது. அது தொடர்பான அரசாணை ஒன்றையும் வெளியிட்டது.
ஆனால்,. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததன் அடிப்படையில், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்குப் பல வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதனால், கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பலர் பணியமர்த்தப் படவில்லை. அதுபோன்று முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆகவே, இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர், “அரசு பள்ளி பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கைத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Tuesday, July 05, 2022
தற்காலிக பணி
July 05, 2022
பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 16 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 24 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன.
மேலும் குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகம், வட சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், வில்லிவாக்கம், சென்னை-49. deonortha2section என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.
மாவட்ட கல்வி அலுவலகம், தென் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8. deosouth08@gmail. com என்ற மின்னஞ்சலிலும், மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை , சென்னை-15க்கு deocnc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், கிழக்கு சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-05க்கு deocne@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தற்காலிக ஆசிரியர்கள்
July 05, 2022
தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் - அலைமோதும் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளான நேற்று ஏராளமாேனார் மாவட்ட கல்வி அலுவலகங்களில் திரண்டனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ேடார் விண்ணபித்தால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் நபருக்கு முன்னுரிமை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் 678, பட்டதாரி ஆசிரியர்கள் 811, முதுநிலை ஆசிரியர்கள் 259 உள்பட மொத்தம் 1,748 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு நேற்று தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில், நூற்றுக்கணக்கானோர் நேற்று விண்ணப்பங்களை அளித்தனர். இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தும், பெரும்பாலானோர் நேரில் விண்ணப்பங்களை அளித்தனர். விண்ணப்பங்களை அளிக்க நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றும், நாளையும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவோருக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ₹7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ₹10 ஆயிரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ₹12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் நிரந்தர பணி வழங்கும்போது, முன்னுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில, தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
போளூர்: போளூர் கல்வி மாவட்டத்தில் 38 மேல்நிலைப் பள்ளிகளில் 55 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 33 உயர்நிலைப் பள்ளிகளில் 164 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 84 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 296 தொடக்கப் பள்ளிகளில் 141 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 363 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கணக்கோனார் குவிந்தனர். அனைவரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய கல்வி சான்றுகளுடன் மனு கொடுத்தனர்.

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட கலெக்டர் அலுவலகத்தில் மனு..
பள்ளிக் கல்வித்துறையின் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில், கடந்த 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, கடந்த 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நிரந்தர பணி வேண்டி காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில், எங்கள் குழு சார்பாக முதல்வரின் தனிச்செயலர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இந்த நிலையில், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோரியும், நியமிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளாக உரிய பணியின்றி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நிரந்தர ஆசிரியர் பணி வழங்க அரசுக்கு பரிந்துரை அறிக்கை அனுப்ப வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்